என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilnadu visit"

    • ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன்.
    • ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கிறேன்.

    புனிதமான ராமநவமி நாளில் தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளை சந்திப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு தனது வருகை குறித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியதாவது:-

    நாளை, ஏப்ரல் 6-ம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளை சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

    புதிய பாம்பன் ரெயில் பாலம் திறந்து வைக்க உள்ளேன். ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தி பிரசார் சபா நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார். #RamNathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இருநாள் பயணமாக தமிழகம் மற்றும் ஆந்திரப்பிரதேசத்துக்கு வருகை தரவுள்ளார்.

    சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் இந்தி பிரசார் சபா நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார். இந்தி பிரசார் சபாவில் மகாத்மா காந்தி சிலையை நாளை குடியரசு தலைவர் ராம்நாத் திறந்து வைக்கிறார்.

    அதைத்தொடர்ந்து, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என ராஷ்ட்ரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #RamNathKovind
    தமிழகத்தில் உருவான கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் இன்று இரவு சென்னை வந்தடைந்தனர். #GajaCyclone #TamilNadu #CentralCommittee
    சென்னை:

    கஜா புயலால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்பட 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும்படி கோரிக்கை மனு கொடுத்தார்.

    புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினார். அதை ஏற்று மத்திய குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த குழுவில் மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு, நிதித்துறை ஆலோசகர் (செலவினம்) ஆர்.பி.கால், விவசாய கூட்டுறவுத் துறை இயக்குனர் பி.கே.ஹவச்தவா, ஊரக வளர்ச்சி துறை துணை இயக்குனர் மானிக் சந்திரபண்டிட், மின்வாரிய முதன்மை என்ஜினீயர் வந்தனா சிங்கால், நீர்வளத்துறை இயக்குனர் ஹர்ஷா, நெடுஞ்சாலை, போக்குவரத்து கண்காணிப்பு என்ஜினீயர் இளவரசன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் இன்று இரவு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர். நாளை காலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள்- அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர்.

    அதன்பிறகு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் 2 பிரிவாக திருச்சி சென்று புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 நாட்கள் சேதங்களை மதிப்பீடு செய்கின்றனர். வரும் 27-ம் தேதி சென்னை திரும்பும் குழுவினர் மீண்டும் அதிகாரிகளுடன் ஆலோசித்து விட்டு டெல்லி புறப்படுகின்றனர். #GajaCyclone #TamilNadu #CentralCommittee
    ×