search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TANCET 2023"

    • ஹால் டிக்கெட்டுகளை tancet.annauniv.edu/tancet என்கிற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
    • டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதி காலை, மதியம் என இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.

    சென்னை:

    எம்.பி.ஏ, எம்.சி.ஏ போன்ற படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (TANCET), நாளை ஹால்டிக்கெட் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாளை காலை 11 மணி முதல் ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    இதேபோல் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.ப்ளான் ஆகிய படிப்புகளுக்கான CEETA நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்டுகளையும் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை tancet.annauniv.edu/tancet என்கிற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதி இரண்டு பிரிவுகளாக நடைபெறும். காலையில் 10 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.

    ×