search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tanker lorry"

    • டேங்கர் லாரியின் முன் புறத்தில் மோதி லோடு வேன் சாலை யின் ஓரமாக கவிழ்ந்தது.
    • இதில் லோடு வேனில் பின்புறமாக பயணம் செய்த கோபாலசமுத்திரம் அகதிகள் முகாமை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ராசா சேவியர் மகன் மில்டன். இவர் நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து தனது லோடு வேனில் மீன் ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    டேங்கர் லாரி மோதி விபத்து

    இரவு 11 மணிக்கு வல்ல நாடு துப்பாக்கி சுடுதளம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கியாஸ் டேங்கர் லாரியை முந்தி இடது புறமாக திருப்பி உள்ளார். அப்போது டேங்கர் லாரியின் முன் புறத்தில் மோதி லோடு வேன் சாலை யின் ஓரமாக கவிழ்ந்தது.

    இதில் லோடு வேனில் பின்புறமாக பயணம் செய்த கோபாலசமுத்திரம் அகதி கள் முகாமை சேர்ந்த செல்வராஜ் (வயது 62) என்பவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும் நெல்லை மாவட்டம் சிங்கம் பாறை சேர்ந்த ஆரோக்கிய ரூபன், இலந்தைகுளத்தை சேர்ந்த வர்கீஸ், திருவேங்கட நாதபுரம் பாலாஜி நகரை சேர்ந்த சந்திரன், திருவேங்கட நாதபுரத்தை சேர்ந்த பெரியதுரை ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்த னர்.

    தீவிர சிகிச்சை

    இது குறித்து தகவல் அறிந்தவுடன் முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டேங்கர் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த சண்முகம் என்ப வரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரத்தில் தனியார் எண்ணை நிறுவன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
    • தச்சநல்லூரில் பெட்ரோல், டீசல்கள் சேமித்து வைக்கப்பட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    நெல்லை:

    தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரத்தில் தனியார் எண்ணை நிறுவன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.

    இங்கு பெட்ரோல், டீசல்கள் சேமித்து வைக்கப்பட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    தினமும் 138 டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல்கள் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக மாநகரின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே உடனடியாக அந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என டேங்கர் லாரி டிரைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி டிரைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் டேங்கர் லாரிகள் சாலைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்ததும் மாநகராட்சி உதவிசெயற்பொறியாளர் லெனின் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது டிரைவர்கள் கூறும்போது, சாலை பணிகள் நடைபெறுவதால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாற்றுபாதை வழியாக செல்ல வேண்டி உள்ளது. அப்படி செல்லவேண்டும் என்றால் நகர பகுதி வழியாக செல்லவேண்டும். அப்போது போலீசார் எங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் நகர்பகுதி வழியாக செல்லும் போது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு சில நேரங்களில் விபத்து அபாயமும் நிகழ்கிறது.

    எனவே உடனடியாக ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையை சீரமைக்க வேண்டும் என கூறினர்.

    தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பெட்ரோல், டீசல் டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின் எண்ணெய் கிடங்கு உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் பெட்ரோல், டீசல் சப்ளை செய்ய தனியார் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

    இந்த ஒப்பந்தம் வரும் செப்டம்பர் 30-ந் தேதியுடன் முடிவடைவதால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.

    அதில் வங்கி உத்தரவாத தொகையை குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின் துணை பொதுமேலாளர் நாராயணராவ் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி டி.ராஜா நேற்று விசாரித்தார். அப்போது புதிய ஒப்பந்த விதிமுறைகள் எந்த விதத்திலும் தற்போதுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து நீதிபதி, பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்
    சென்னையில் இருந்து திருச்சிக்கு மாங்காய் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து திருச்சிக்கு மாங்காய் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

    இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவில் மாங்காய் ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவை காஞ்சீபுரம் மாவட்டம் கோட்டைகாடு பகுதியை சேர்ந்த சண்முகம்(வயது 48) ஓட்டினார். அவருடன் சேம்பலிபுரத்தை சேர்ந்த கண்ணன்(25) வந்தார். மரக்காணம் செட்டிநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு ஆட்டோ வந்த போது எதிரே ஒரு டேங்கர் லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியது.

    இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த டிரைவர் சண்முகம் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து டேங்கர்லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×