search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tanvi Patri"

    • 15 வயது உட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தன்வி பாத்ரி - ஹூடென் மோதினர்.
    • இந்த ஆட்டம் 34 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

    செங்டு:

    ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள செங்டு நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த 15 வயது உட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தன்வி பாத்ரி 22-20, 21-11 என்ற நேர் செட்டில் வியட்நாமின் ஹூடென் நுயெனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    இந்த ஆட்டம் 34 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஒடிசாவை சேர்ந்த 13 வயதான தன்வி பெங்களூருவில் உள்ள பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

    முந்தைய நாளில் நடந்த 17 வயது உட்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் ஞான டத்து வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

    ×