search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tanya"

    • தான்யாவின் இன்னொரு முகத்தை விரைவில் சினிமாவில் ரசிகர்கள் பார்க்கலாம்.
    • தற்போது படங்களில் கிளாமர் காட்டவும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான தான்யா, தமிழில் பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலமாக அறிமுகமானார். 'பிருந்தாவனம்', 'கருப்பன்', 'நெஞ்சுக்கு நீதி', 'மாயோன்', 'ரசவாதி' போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் படங்கள் நடித்திருக்கிறார்.

    தற்போது அருண் விஜய்யின் 'ரெட்ட தல' படத்தில் நடித்து வருகிறார். பட விழாவில் அவர் உடுத்திய ஊதா நிற கண்ணாடி இழையிலான சேலையும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இதுவரை படங்களில் ஹோம்லியாக நடித்து வந்த தான்யா ரவிச்சந்திரன், தற்போது படங்களில் 'கிளாமர்' காட்டவும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் போட்டோஷூட் நடத்தி தான்யா வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படங்களை பார்த்த ரசிகர்களும் தான்யாவின் அழகை புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்களாம்.

    ரசிகர்களின் பேராதரவினால் தொடர்ந்து கவர்ச்சி படங்கள் வெளியிடவும், படங்களிலும் கிளாமராக நடிக்கவும் தான்யா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் தான்யாவின் இன்னொரு முகத்தை விரைவில் சினிமாவில் ரசிகர்கள் பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.
    • குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இவருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டு மே 29-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா வத்வாவுக்கு திருமணம் நடந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த தம்பதியினருக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.


    இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று உமேஷ் யாதவ் - தன்யா தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து உமேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


    மகளிர் தின நாளில் உமேஷ் யாதவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3- வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மலிங்காவின் மனைவி தன்யாவுக்கும், ஆல்-ரவுண்டர் திசரா பெரேராவுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. #ThisaraPerera
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்குபவர், லசித் மலிங்கா. அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மலிங்கா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் அணிக்கு திரும்பினார். அத்துடன் அவருக்கு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கான கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அவருக்கு முன்பாக சன்டிமால் ஒரு நாள் அணிக்கும், ஆல்-ரவுண்டர் திசரா பெரேரா 20 ஓவர் போட்டி அணிக்கும் கேப்டனாக செயல்பட்டனர். திசரா பெரேரா, சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 74 பந்துகளில் 13 சிக்சருடன் 140 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் திசரா பெரேராவுக்கும், மலிங்காவின் மனைவி தன்யாவுக்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது. சமூக வலைதளமான பேஸ்புக்கில் தன்யா வெளியிட்ட ஒரு பதிவில், ‘நாட்டின் புதிய விளையாட்டுத்துறை மந்திரியை திசரா பெரேரா சந்தித்து, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்ய முயற்சிக்கிறார்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.



    அவரது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து திசரா பெரேரா, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கேப்டன் பதவியில் இருப்பவரின் மனைவி இது போன்று சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டுவது மக்களிடம் என்னை பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கி விடும். அவரது ‘பேஸ்புக்’ பதிவுக்கு பிறகு வீரர்களின் ஓய்வறையில் அசவுகரியமான சூழல் நிலவுகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இரு மூத்த வீரர்கள் கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கும்போது, இளம் வீரர்களுக்கு அது நல்ல அனுபவமாக இருப்பதில்லை. தலைமை பண்பு என்பது, அணிக்குள் நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது ஆகும்.

    இது போன்ற தேவையற்ற சமூக வலைதள சர்ச்சைகளை தவிர்த்து, விரைவில் தொடங்க இருக்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மீதே இப்போது நமது கவனம் இருக்க வேண்டும். ஒருங்கிணைந்து வலுவான கேப்டன்ஷிப்பின் கீழ் அணி பயணிக்க வேண்டியது அவசியம். கேப்டனும், மூத்த வீரர்களும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.

    தனிப்பட்ட நபரின் பழிவாங்கும் நடவடிக்கையால் ஒட்டுமொத்த தேசமும் கேலிக்கூத்தாகியுள்ளது. தற்போதைய சூழலில் இதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தலையிட்டு இந்த பிரச்சினையை சரி செய்து அணிக்குள் ஒற்றுமையையும், நம்பிக்கையையும் கொண்டு வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    மேலும், கடந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது செயல்பாடு சிறப்பாக இருந்தது என்றும் 29 வயதான திசரா பெரேரா குறிப்பிட்டுள்ளார். #ThisaraPerera

    இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #Indian #SriLanka #Cricket #INDvsSL
    காலே:

    மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். காலேவில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பெண்கள் அணியை 98 ரன்னில் சுருட்டிய இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    இந்த நிலையில் இந்தியா- இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி காலேவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 219 ரன்களில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தானியா பாத்யா 68 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் 52 ரன்னும், ஹேமலதா 35 ரன்னும் எடுத்தனர். முதல் ஆட்டத்தில் அரை சதம் அடித்த ஸ்மிர்தி மந்தனா 14 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இலங்கை அணி தரப்பில் ஜெயன்கானி 3 விக்கெட்டும், பிரபோத்ஹானி, வீரக்கொடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 48.1 ஓவர்களில் 212 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜெயன்கானி 57 ரன்னும், ஸ்ரீவர்தனே 49 ரன்னும், நிலாக்‌ஷி டி சில்வா 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் மான்சி ஜோஷி, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டும், பூனம் யாதவ், ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி நடக்கிறது.  #Indian #SriLanka #Cricket #INDvsSL
    ×