search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher home robbery"

    உசிலம்பட்டி அருகே பேராசிரியர் வீட்டில் 11 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் உள்ள ஏ.ராமநாதபுரத்தில் வசிப்பவர் கண்ணாடிச்சாமி. இவரது மகன் கல்யாணசுந்தரம் (வயது 29). இவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உடற் பயிற்சி பேராசிரியராக உள்ளார்.

    கல்யாணசுந்தரத்தின் மனைவி ஜெயபிரதா பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் இரவில் ஆஸ்பத்திரியில் கல்யாணசுந்தரம் தங்கியிருந்தார்.

    இன்று காலை கல்யாண சுந்தரம் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த 2 தங்கச்சங்கிலிகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    11 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக கல்யாணசுந்தரம் தெரிவித்த புகாரின் பேரில் கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கொடுமுடி அருகே ஆசிரியர் வீட்டில் புகுந்து 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தாமரைபாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 72). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    கடந்த 3 தினங்களுக்கு முன் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னிமலையில் உள்ள உறவினர் வீட்டு விசேசத்துக்கு சென்றார்.

    இன்று காலை குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்தபோது அதிர்ச்ச அடைந்தார். வீட்டின் கதவு பூட்டு நெம்பி உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    பதட்டத்துடன் உள்ளே சென்றனர். அங்கு பீரோவும் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டின் மேல்பகுதியில் உள்ள ‘‘கபோர்ட்டை’’ திறந்து பார்த்து உள்ளனர். அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    ஒன்றுக்கு மேற்பட்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்களையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்று உள்ளனர்.

    வீட்டில் பழங்கால கடிகாரம் மற்றும் பழங்கால பொருட்கள் இருந்தது. அதனையும் மர்ம ஆசாமிகள் எடுத்து சென்று உள்ளனர். இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கைரேகை நிபுணரும் கைரேகையை பதிவு செய்தார். வீட்டில் சி.சி.டி.வி கேமிரா இருந்திருந்தால் கொள்ளையர்கள் உடனே அடையாளம் தெரிந்திருக்கும். ஆனால் சி.சி.டி.வி. கேமிரா இல்லை. எனினும் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கோடம்பாக்கம் அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளைடியத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    கோடம்பாக்கம் அடுத்த ரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதுமதி. பாண்டிச்சேரியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

    கடந்த 3-ந் தேதி மதுமதியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்23 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    இதுகுறித்து அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ் மற்றும் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கொள்ளையில் ஈடுபட்டது மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பிரேம்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ராதாபுரம் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது38). இவர் நாங்குநேரி அருகே உள்ள காடன்குளம் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி (30). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவர்களும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், பட்டப்பகலில் அவர்களின் வீட்டு முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டில் இருந்த பீரோவையும் உடைத்து, அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூ.27 ஆயிரத்து 500 ஆகியவற்றையும் கொள்ளையடித்து கொண்டு ஓடி விட்டனர்.

    நேற்று மாலை பள்ளிக் கூடம் முடிந்து வீடு திரும்பிய முருகேசன், தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து முருகேசன் ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்தில் பதிவான ரேகைகள் மற்றும் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #Robbery

    நாட்டறம்பள்ளி அருகே ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். #Robbery

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 62). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு, வீட்டின் பின்பக்கம் உள்ள அறையில் தூங்கியுள்ளார்.

    நள்ளிரவில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை காமராஜ் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. அதிர்ச்சியடைந்து பீரோவை பார்த்தார் அப்போது அதில் இருந்த நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து காமராஜ் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். #Robbery

    திருவள்ளூர் அருகே ஆசிரியை வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, தனியார் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழரசி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டி வெளியே சென்றனர். மாலையில் ஆசிரியை தமிழரசி வீட்டுக்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் கால் கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×