என் மலர்
நீங்கள் தேடியது "Teacher post"
- பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.15 ஆயிரமும், இடைநிலைஆசிரியர் நிலையில் ரூ.12 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும்.
- பள்ளிஅமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர் களை நியமனம்செய்ய ஆதி திராவிடர் நல இயக்குநர் தெரி வித்துள்ளார். அதன்படி பட்டதாரி ஆசிரி யர் நிலையில் ஆங்கிலம்-2, கணிதம்-1, அறிவியல்-1, சமூக அறிவியல்-1 என 5 காலிப்பணியிடங்களும், இடை நிலை ஆசிரியர் நிலையில் 22காலிப்பணியிடங்களும் உள்ளன. பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.15 ஆயிரமும், இடைநிலைஆசிரியர் நிலையில் ரூ.12 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும்.
வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள், இடை நிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்த வர்க்கும், பள்ளிஅமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்களிட மிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்று களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் வருகிற 5-ந் தேதிமாலை 5 மணிக்குள்சமர்ப்பிக்க வேண்டும். கால நிர்ணயத்திற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.