என் மலர்
நீங்கள் தேடியது "Team Class"
- கார்களில்,வேன்களில், பஸ்களில் முன்பதிவு செய்தும் பயணம் செய்தனர்.
- 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தன.
விழுப்புரம்:
தமிழக அரசு தீபாவளி பண்டிகையை கொண்டாட வருகிற 25 -ந் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட தமிழக தலை நகர் சென்னையில் பணிபுரிபவர்கள் தென் மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் முதல் கார்களில்,வேன்களில், பஸ்களில் முன்பதிவு செய்தும் பயணம் செய்தனர். எனவே சுங்கசாவடிகளில் நேற்று முன்தினம் 40 ஆயிரம் வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்தன. நேற்று சனிக்கிழமையும் 2-வது நாளாக தொடர்ந்து சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் போக்குவரத்து அதிகம் காணப்பட்டது.
சுங்கசாவடியை கடக்க வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. வாகனங்கள் அதிகரித்தால் தென்மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு கூடுதலாக2 வழிகளை திறந்து மொத்தம் 8 வழிகளில் வாகனங்கள் சென்றன .நேற்று 2வது நாளாக தென் மாவட்டங்களை நோக்கி 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தன. நேற்று பிற்பகல் 3 மணியளவில் எஸ்.பி., ஸ்ரீ நாதா தலைமையில் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் ,சப்–இன்ஸ்பெக்டர் குமாரராஜா மற்றும் போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.