search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager drowned"

    • செல்வக்குமார் தனது நண்பர்களுடன் ஊத்துக்குளி வழியாக செல்லும் ஆற்றில் குளிக்க சென்றனர்.
    • செல்வகுமாருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.

    கோவை,

    திருப்பூர் அருகே உள்ள கரட்டூரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 21). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அவரது நண்பர்களான சபரிகிரி (25), அருண்குமார் (25) ஆகியோருடன் ஆழியாறு அருகே உள்ள பூவல்லபருத்தியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு வைத்து மது குடித்தனர். பின்னர் 3 பேரும் குளிக்க முடிவு செய்தனர். அதன்படி 3 பேரும் ஜமீன் ஊத்துக்குளி வழியாக செல்லக்கூடிய ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது செல்வகுமார் ஆழமான பகுதிக்கு சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்று நீர் அவரை அடித்து சென்றது. அப்போது அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் செல்வக்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது நண்பர்கள் பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட செல்வக்குமாரின் உடலை தேடினர்.

    பின்னர் போலீசார் ராமர்கோவில் வீதி உள்ள பகுதியில் இருந்து உடலை மீட்டனர். இதனையடுத்து போலீசார் செல்வக்கு மாரின் உடலை பிரேத பரிசோ தனைக்கு பொ ள்ளாச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பொள்ளா ச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்கு தெரு காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 26)
    • ராஜேஸ்வரன் தாய்க்கு திதி கொடுக்க ஆற்றுக்கு வந்த போது நீரில் மூழ்கி பலியானார்.

    திருச்சி,

    திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்கு தெரு காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் ராஜேஸ்வரன் (வயது 26). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டடுள்ள ராஜேஷ்வரன், தன்னுடைய தாய்க்கு திதி கொடுப்பதற்காக உறவினர்களுடன் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு சென்றார்.

    அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து சண்முகவேல் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆற்றில் மூழ்கி இறந்த ராஜேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து தி விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடலூர் அருகே சொர்ணாவூர் அணைக்கட்டில் மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்கப்பட்டது.
    • தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சொர்ணாவூர் அணைக்கட்டு உள்ளது. சம்பவத்தன்று இந்த அணைக்கட்டில் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த உதயகுமரன் (வயது 35) என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் குளித்தார். அப்போது உதயகுமரன் தண்ணீரில் மூழ்கினார். அதிர்ச்சி அடைந்த 4 நண்பர்களும் உதயகுமரனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்திற்கும், வளவனூர் போலீசாருக்கும் தகவல் தெரியப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலையும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது அப்போது அணைக்கட்டு ஓரத்தில் இறந்த நிலையில் உதயகுமரன் உடல் மீட்கப்பட்டது. இந்த உடலை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு வளவனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கிறார்கள்.

    ×