search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "terrorists attack"

    • பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு.
    • பயங்கரவாதிகளை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்றிரவு பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தப்பிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் டிரோன்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


    கடந்த மூன்று நாட்களில் மூன்றாவது முறையாக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கத்துவாவில் பொது மக்கள் மீது பயங்கராவதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர், இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.


    இந்த சம்பவம் குறித்து பேசிய ஜம்முவின் ஏ.டி.ஜி.பி. ஆனந்த் ஜெயின், "நம் நாட்டில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நமது அருகில் உள்ள விரோதிகளின் முயற்சி தான் இது. இந்த தாக்குதல் புதிய ஊடுறுவல் போன்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான், மற்றொருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது," என தெரிவித்தார்.

    • ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

    தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் கெச் மாவட்டத்தின் புலேடா பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி ராணுவ வாகனத்தை வெடிக்க செய்தனர். இதில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
    • 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பி னர் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உகாண்டா நாட்டை சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலியானார்கள்.

    இது தொடர்பாக உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி கூறும்போது, சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர். எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றனர்.

    இதற்கிடையே ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் அல் கொய்தா ஆதரவு இயக்கத்தின் தளபதியை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட வார்புரா பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.



    சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் பயங்கரவாத இயக்கத்தின் தளபதியான ஜகிர் முசா என்பவனை பாதுகாப்பு படையினர்  சுட்டுக் கொன்றனர்.

    ஒசாமா பின் லேடன் தலைமையில் முன்னர் இயங்கிவந்த அல் கொய்தா அமைப்பின் கிளை அமைப்பாக இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த்  பயங்கரவாத இயக்கம்  இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சைனபோரா பகுதியில் பயங்கரவாதிகள் இன்று திடீரென நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றோம் என போலீசார் தெரிவித்தனர். #MilitantsAttack
    ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்தில் பள்ளிக்கு தீ வைத்த பயங்கரவாதிகள் மூன்று பேர் தலைகளை துண்டித்து கொன்றனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லைபகுதியில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவ்வப்போது ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளியை நேற்று தீவைத்து எரித்த பயங்கரவாதிகள், அந்தப் பள்ளியில் இருந்த மூன்று பணியாளர்களின் தலையை வெட்டிக் கொன்றனர்.

    இந்த சம்பவத்தில் பள்ளியின் நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    ×