என் மலர்
நீங்கள் தேடியது "terrorists killed"
- தீவிரவாதியான ஆசீப் ஷேக்கின் வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
- எல்லையில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
புதுடெல்லி:
காஷ்மீரில் பிரபல சுற்றுலா தலமான பகல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்ட னர்.
கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்திய 6 தீவிர வாதிகளையும் பாகிஸ்தானில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இயக்கி இருப்பதை இந்திய ராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர். இதை யடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 7 முக்கிய தடை அறிவிப்புகளை இந்தியா வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய தீவிர வாதிகள் பாகிஸ்தான் ஆக்கி ரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முகாம்களில் இருந்து ஊடுருவியதும் தெரிய வந்தது. இதனால் அந்த தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பயங்கர வாத முகாம்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தன. உலகின் பெரும்பாலான நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் இந்தியா எந்த நேரத்திலும் அதிரடி தாக்குலை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று பீகாரில் நடந்த கூட்டத்தில் பேசும் போது, "காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணி கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உலகின் எந்த மூளைக்கு ஓடினாலும் தேடி பிடித்து வேரோடு அழிப்போம். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் கற்பனைக்கும் எட்டாத வகையில் இருக்கும்" என்று எச்சரித்தார்.
பிரதமர் மோடியின் இந்த எச்சரிக்கை பாகிஸ்தானில் நேற்று மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியது. இந்திய விமானங்கள் எந்த நேரத்திலும் வந்து குண்டு வீசலாம் என்று பாகிஸ்தான் ராணுவத்தில் பயம் ஏற்பட்டது. இதையடுத்து எல்லையில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
அதற்கு பதிலடி நடவடிக்கையாக எல்லைப் பகுதிகளில் இந்திய ராணு வம் நேற்று திடீரென போர் பயிற்சிகளை தொடங்கியது. இது பாகிஸ்தானியர்களுக்கு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா ஏதோ ஒரு பெரிய தாக்குதலுக்கு திட்டமிடுவதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முழுக்க தூங்கவில்லை.
இந்த நிலையில் இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறினார்கள். நேற்று நள்ளிரவு சில முகாம்கள் மீது பாகிஸ்தான் எல்லைப் பகுதி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே விடிய விடிய துப்பாக்கி சண்டை நீடித்தது. இன்று அதிகாலை பாகிஸ்தான் வீரர்கள் நீண்ட தூரத்துக்கு பின்வாங்கி சென்றனர். அவர்கள் தரப்பில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? என்பது தெரிய வில்லை.
இந்திய பாதுகாப்பு படையினர் இதுகுறித்து கூறுகையில், "எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான் வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது" என்ற னர்.
இதற்கிடையே காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடிப் பிடித்து அழிப்பதற்கு பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் பகல் காமில் தாக்குதல் நடத்த உதவி செய்ததாக காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதிகள் ஆசீப்ஷேக், அதில் ஆகிய 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் காஷ்மீரில் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குல்னர் என்ற இடத் தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினரும், உள்ளூர் போலீசாரும் ஒருங்கிணைந்து சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது ஒரு வீட்டுக்குள் இருந்து பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டை நோக்கி பாதுகாப்பு படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 ராணுவ வீரர்களும், ஒரு போலீஸ் அதிகாரியும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்த காஷ்மீர் உள்ளூர் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படை சார்பில் தீர்மானிக் கப்பட்டது. அதன்படி முக்கிய லக்ஷர் இ தொய்பா தீவிரவாதியான ஆசீப் ஷேக்கின் வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
அதுபோல அனந்தநாக் மாவட்டத்தில் பிஜ்பெரா என்ற இடத்தில் இருக்கும் மற்றொரு தீவிரவாதியான அதில் தோகர் என்பவன் வீடும் இன்று காலை குண்டு வைத்து தகர்த்து எறியப் பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கையில் 2 தீவிரவாதிகளின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டன. தொடர்ந்து அவர்களை வேட்டையாடு வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
- பாதுகாப்புப் படையினரை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- இந்த என்கவுண்டரில் 2 போலீசார் வீர மரணம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். பாதுகாப்புப் படையினரைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல, மற்றொரு பகுதியில் நடந்த என்கவுண்டரிலும் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். இந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்நிலையில், குல்காம் என்கவுண்டரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 6 ஆனது என போலீசார் தெரிவித்தனர்.
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர். அவர்களை தங்களிடம் சரணடைந்துவிடும் படி போலீசார் எச்சரித்தனர். மாறாக பயங்கரவாதிகள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 3 ராணுவ வீரர்களின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராணுவவீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இதே போல் புட்காம் மாவட்டம் பான்சான் என்கிற கிராமத்தில் மசூதி ஒன்றுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை ராணுவவீரர்கள் சுற்றிவளைத்தபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. அப்போது ராணுவ வீரர்கள் சுட்டதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிர் இழந்தனர்.
மற்றொரு சம்பவமாக தலைநகர் ஸ்ரீநகரில் நூர்பாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவவீரர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார்.
இதனையடுத்து, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. #JKEncounter #MilitantKilled
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. அங்கு லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி நெட்வொர்க் அமைப்பினர், தலீபான் இயக்கத்தினர், ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானை சொர்க்கபுரியாக கருதி இந்த பயங்கரவாதிகள் அங்கு தங்கி பயங்கரவாத சதித்திட்டங்கள் தீட்டி, எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்ற புகாரை அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அவர்களைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் தங்களது துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர்.
ஆனால் அவர்களை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கூறியும் அவர்கள் அதைக் கேட்காமல் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர்.
இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் இடைவிடாமல் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சண்டையின்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதே போன்று பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேரும் பலியாகினர். அவர்களில் முகமது வாரிஸ், ஷாபான் ஜாங் பகுதியை சேர்ந்தவர் என்றும், மிர் ஆலம் ஜில்கித், பல்திதானை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ ஊடகப்பிரிவு ஐ.எஸ்.பி.ஆர். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாத செயல்கள் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சிலர் சதி செய்து வருவதாக உளவுத்தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில், அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். படையினர் 2 பேர் பலியாகினர். அங்கிருந்து 2 கவச உடைகள், ஏராளமான வெடிபொருட்கள், பிற ஆயுதங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பலியான பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து எந்தத் தரப்பிலும் தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #TerroristKilled #KalatOperation