search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thailand Open"

    • தாய்லாந்து ஓபன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
    • ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் சாத்விக்-சிராக் ஜோடி முதலிடம் பிடித்தனர்.

    புதுடெல்லி:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்ராஜ்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், தாய்லாந்து ஓபன் தொடரில் வெற்றிபெற்ற நிலையில், ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன ஜோடிக்கு ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தாய்லாந்து ஓபன் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • முதல் செட்டை இந்திய வீரர் லக்சயா சென் கைப்பற்றினார்.
    • அடுத்த 2 செட்களையும் தாய்லாந்து வீரர் வென்றார்.

    பாங்காக்:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், தாய்லாந்து வீரருடன் மோதினார்.

    இதில் இந்திய வீரர் லக்சயா சென் முதல் செட்டை வென்றார். சுதாரித்துக் கொண்ட தாய்லாந்து வீரர் அடுத்த இரு செட்களை 21-17, 21-13 என்ற கணக்கில் வென்றார்.

    இந்த தோல்வியின் மூலம் தாய்லாந்து ஓபன் தொடரில் இருந்து இந்திய வீரர் லக்சயா சென் வெளியேறினார்.

    • 2-வது செட்டை சுலபமாக கைப்பற்றினார்
    • மற்றொரு இந்திய வீரர் கிரண் தோல்வியைடைந்தார்

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென் மலேசியாவின் ஜே.எச். லியோங்-ஐ எதிர்கொண்டார். இதில் இந்திய வீரர் லக்சயா சென் சிறப்பாக விளையாடி மலேசிய வீரரை வீழ்த்தினார்.

    முதல் செட்டை 21-19 எனவும், 2-வது செட்டை 21-11 எனவும் கைப்பற்றி நேர்செட்டில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு வீரர் கிரண் ஜார்ஜ் 16-21, 17-21 என நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீரரிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று காலிறுதி போட்டி நடந்தது.
    • இதில் இந்தியாவின் சாய் பிரனீத் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    பாங்காங்:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், சீனாவின் லீ ஷீ பெங்குடன் மோதினார்.

    முதல் செட்டை சீன வீரர் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சாய் பிரனீத் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை லீ ஷீ பெங் தனதாக்கினார்.

    இறுதியில், சீன வீரர் 21-17, 21-23, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த தோல்வியின் மூலம் சாய் பிரனீத் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று இரண்டாவது சுற்று போட்டி நடந்தது.
    • இதில் இந்தியாவின் சாய் பிரனீத் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாங்காங்:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த காலிறுதிக்கு முந்திய சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், தென் கொரியாவின் ஜின் ஜியோனை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை சாய் பிரனீத் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஜியோன் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்டு ஆடிய சாய் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை தனதாக்கினார்.

    இறுதியில், சாய் பிரனீத் 24-22, 7-22, 22-20 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ×