search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thaipusa festival"

    • திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தைப்பூச தேர் திருவிழா.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி காலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27 -ந்தேதி பரிவேட்டை, 28-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும்.

    29-ந்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7 மணிக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், சாமி ரத ஆரோகணமும், காலை 10 மணிக்கு மேல் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
    • விண்ணையே பிளக்கும் வகையில் அரோகரா... சரணகோஷம்

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.

    தேரோட்டத்தையொட்டி முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாள் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.

    பின்னர் பகல் 11.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானையுடன் தேர்கட்டி மண்டபத்திற்கு வந்தார். பகல் 12 மணிக்கு திருத்தேரில் சாமி எழுந்தருளினார்.

    தேரோட்டம்

    மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் தேர் சக்கரங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...! ஞானதண்டாயுதபாணிக்கு அரோகரா...!" என்று சரண கோஷம் எழுப்பினர். இதனால் விண்ணையே பிளக்கும் வகையில் சரணகோஷம் முழங்கியது.

    தொடர்ந்து நிலையில் இருந்து பெரிய தேர் புறப்பட்டு கிழக்கு, தெற்கு, மேற்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது தேரின் பின்னால் கோவில் யானை கஸ்தூரியும் நடந்து வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியை காண தேரடி, நான்கு ரத வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.

    • அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

    திருப்பரங்குன்றம்:

    தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு தைப்பூச திருவிழாவை யொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர்.

    இதில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.

    இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சேலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது முதல் தினமும் சுவாமி சிம்மாசனம், பூத, அன்ன, காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

    9-ம் திருவிழாவான நேற்று உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி, மாலையில் யாகசாலை பூஜை நடைபெற்று வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஆனார். 10-ம் திருவிழாவான இன்று (25-ந்தேதி) காலை 5 மணிக்கு யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் தீர்த்தவாரி தைப்பூசம், மகா அபிஷேகம், யாகசாலை கலச அபிஷேகம் நடைபெற்றது.

    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி.
    • திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று தேரோட்டம்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம்நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வனையுடன் எழுந்தருளினார். அப்போது 16 வகை அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகை சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    அதன்பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. பின்னர் வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா"...! என சரண கோஷம் எழுப்பினர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மன்களுக்கு தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

    வெள்ளிரத உலா

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்தனர். இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார்.

    இன்று தேரோட்டம்

    தைப்பூச திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தோளுக்கினியாள் வாகனத்தில் எழுந்தருளி, சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.30 மேல் மீன லக்னத்தில் திருத்தேரேற்றமும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலை வந்தடைந்த பின்னர் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சியும், ரதவீதிகளில் சுவாமி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் எல்க்ஹில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச திருவிழா நடந்தது. காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பரிகார தெய்வங்கள், மூலவர், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். இதை தொடர்ந்து தோரோட்டம் நடை பெற்றது.தேரோட்ட–த்தை மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தைப்பூச திருவிழாவிற்கு வருகை தந்த போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரை நீலகிரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலை வர் மோகன்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    தைப்பூசத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு யசோதா மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் தேரோட்டத்தையொட்டி நகரின் பல்வேறு பகுதி–களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    கோத்தகிரி சக்திமலை பகுதியில் உள்ள முருகன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச தேர் திருவிழா நடக்கும். நேற்று தைப்பூசத்தையொட்டி காலை முதலே கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக முருகனை தரிசிக்க சக்திமலை முருகன் கோவிலுக்கு வந்த னர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    அதனை தொடர்ந்து தைப்பூச தேர்திருவிழா காமாட்சி தாசர் சுவாமிகள் அவினாசி ஆதினம் முன்னிலையில் நடை– பெற்றது.இவ்விழாவில் கோவில் குருக்கள் பட்டி விநாயகம்,முருகேஷ், ஸ்ரீ சக்தி சேவா சங்கம் தலைவர் போஜராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் கொடி இறக்குதல், மஹா தீபாராதனை, மவுன பூஜையுடன் விழா நிறைவடைந்தது.

    அரவேணு காமராஜர் நகர் பாலமுருகன் கோவிலிலும் 108-க்கும் மேற்பட்ட பால் குடங்களும், காவடிகளும் எடுக்கப்பட்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    • அலங்காநல்லூர் அருகே தைப்பூச விழாவையொட்டி பக்தர்கள் பறவை காவடி எடுத்தனர்.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி வகுத்துமலை அடிவரத்தில் சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்தகோவிலின் 14-ம் ஆண்டு தைப்பூச உற்சவ விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக முருக பக்தர்கள் கொண்டையம்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் வேல்குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

    • புதுவை முதலி யார்பேட்டை விடுதலை நகரில் வலம்புரி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது.
    • பாரதீய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளரும் ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர் நிறுவனருமான வெற்றிச்செல்வம் தலைமை யில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முதலி யார்பேட்டை விடுதலை நகரில் வலம்புரி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது.

    கோயில் அறங்காவலர் குழு சார்பில் கடலூர் ரோடு சாலை முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் செடல் குத்திக்கொண்டு பால்குடம் எடுத்துக்கொண்டு கடலூர் ரோடு, உழந்தைக் கீழப்பாளையம் புவன்கரே வீதி வழியாக விடுதலை நகர் வலம்புரி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. செடல் குத்துதல் மற்றும் பால்குட ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்களோடு கலந்து கொண்டனர்.

    பாரதீய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளரும் ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர் நிறுவனருமான வெற்றிச்செல்வம் தலைமை யில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இதில் ரிப்லேக்ஸ் டிவைன் பயோ மெடிக்கல் கேர் பாத சிகிச்சை மருத்துவ மைய நிர்வாக இயக்குனர் டாக்டர் கருணாகரன்- ஜெயலட்சுமி தலைமையில் டாக்டர்கள் புகழேந்தி, முனியப்பன், வக்கீல் நவரோஜ், செந்தில்குமார், கெஸ்பர், கஜலட்சுமி, மங்கையர்க்கரசி ஸ்ரீ அரவிந்த், கவுதம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் பன்னீர்செல்வம், குணசேகரன், கண்ணையன், ராமலிங்கம், ரங்கநாதன், பச்சையப்பன், மகாலிங்கம், மதன் ,சரவணன், பொன்னுசாமி, சங்கர், பிரதாப், செல்வகணபதி, ஜெயமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தைப்பூச விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழா முன்னிட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியர்-தெய்வானையை தரிசித்தனர். பால்குடம், காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இன்று இரவு தந்தத்தொட்டி சப்பரத்தில் தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமியும், சிம்மாசனத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியும் திருவீதி உலா வருகின்றனர். தைப்பூசத்திருநாள் அன்று மட்டும் திருப்பரங்குன்றம் கோவிலில் இரண்டு முருகன், இரண்டு தெய்வானை திருவீதி உலாவருவது வழக்கமாகும்.

    தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் காலையில் கணபதி ஹோமம், புண்ணியவாசனம் நடைபெற்று மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    அழகர்மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோவிலிலும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.=

    • தங்க ரதத் தில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    வடவள்ளி,

    கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திரு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    29-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.அன்று காலை 6.45 மணி முதல் 7.30 மணிக்குள் கோவில் முன்புறமுள்ள கொடிமரத்தில் கிருத்திகை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்படுகிறது. இதை தொடர்ந்து கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.

    மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை, மாலை 5 மணிக்கு அனந்தசயனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை ஆகியவை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    பிப்ரவரி 3-ந் தேதி மாலை தங்கமயில் வாகனத்தில் சுப் பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று இரவு 7.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருகிறார்.

    தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாண விழா பிப்ரவரி 4-ந் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யா ணம் நடைபெறுகிறது.

    காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11 மணியளவில் வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். பகல் 12 மணி அளவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.

    சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். தேரை பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    தம்பதி சமேதராக சுவாமி கோவிலை சுற்றி வீதி உலா வருகிறார். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்படுகிறது.

    தெப்பத் திருவிழா 5-ந்தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12மணிக்கு ஆடுமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், குதிரை வாகனத் தில் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

    இரவு7.30 மணிக்கு தெப்பத் திருவிழா, 6-ந் தேதி 12 மணிக்கு மகா தரிசனம், சுவாமி திருவீதி உலா, மாலை 4.30 மணிக்கு கொடி இறக்கு தல் நிகழ்ச்சி நடக்கிறது.7-ந் தேதி வசந்த உற்சவம், மாலை 6 மணிக்கு தங்க ரதத் தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். இத்துடன் தைப் பூச விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அடுத்த மாதம் தைப்பூசம் நடைபெறுகிறது.
    • கோவில் அடிவாரத்தில் தேர்நிலை அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    வீரபாண்டி : 

    பொங்கலூர் ஒன்றியம், அலகுமலையில் அகிலாண்ட விநாயகர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆதி கைலாசநாதர், ஸ்ரீ வலுப்பூரம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர் என அனைத்து மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் முத்துகுமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அடுத்த மாதம் தைப்பூசம் நடைபெறுகிறது.இதையொட்டி திருத்தேர் முகூர்த்தக்கால் அமைக்கும் வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது. கோவில் அடிவாரத்தில் தேர்நிலை அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  

    ×