என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thambidurai MP"

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார்.
    • அங்கு அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்ற அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

    வரும் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக இருதரப்பினரும் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.

    அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உறுதி. அதற்கு வசதியாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகின.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை இன்று சந்தித்துப் பேசினார். பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

    கடந்த சில நாட்களாக பா.ஜ.க-அ.தி.மு.க. தலைவர்கள் இடையேயான சந்திப்பு தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.

    • ரெயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது
    • ரெயில்வே திட்டங்களுக்கு மொத்தம் 2,197 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த அரசு ஏற்கனவே அனுமதி

    தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை எழுப்பிய புகாருக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நில எடுப்பு செய்வதில் மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மு.தம்பிதுரை அவர்கள் தெரிவித்துள்ளதாக சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது தொடர்பாக கீழ்கண்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

    கடந்த 2021-மே மாதம் முதல் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த இரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இரயில்வே திட்டங்களுக்காக மாநிலம் முழுவதும் கையகப்படுத்தப்படும் நிலங்களின் விவரங்கள்.

    தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் இரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2197.02 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முக்கியமான 17 இரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1253.11 ஹெக் நிலங்களில், 1144.84 ஹெக்டேர் நிலங்களுக்கான நில எடுப்புப் பணிகள் முடிவுற்று (அதாவது 91% சதவீதம்) நிலம் இரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் குறிப்பாக முக்கியத் திட்டங்களான திண்டிவனம்-நகரி அகல ரயில்பாதை (100%), மதுரை-தூத்துக்குடி அகல ரயில்பாதை (100%), மணியாச்சி-நாகர்கோவில் அகல ரயில்பாதை (97%), கன்னியாகுமரி-நாகர்கோவில் அகல இரயில் பாதை இரட்டிப்பாக்குதல் (100%), தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல இரயில் பாதை கட்டம்1 (100%), சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில்பாதை (98%). கொருக்குப்பேட்டை-எண்ணூர் நான்காவது வழித்தடம் (100%), மயிலாடுதுறை-திருவாரூர் அகல ரயில்பாதை (100%), பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு (100%), புதிய அகல இரயில் பாதை (சேலம் கரூர் வழித்தடம் உருவாக்குதல்) (100%), மன்னார்குடி- நீடாமங்கலம் அகல ரயில்பாதை (100%), சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை மூன்றாவது நான்காவது வழித்தடம் (100%), மற்றும் விழுப்புரம்-திண்டுக்கல் அகல இரயில்பாதை (100%) ஆகிய திட்டங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ளவாறு 97% முதல் 100% வரை நில எடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டு ஒன்றிய இரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எஞ்சிய நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இரயில்வே துறையால் எடுக்கவேண்டிய நடவடிக்கையால் நிலுவையிலுள்ள இனங்கள்

    திருவண்ணாமலை-திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்கு 229,23 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய 2011 ஆம் ஆண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டும் இரயில்வே துறையினரால் நில எடுப்பிற்கு நிதி ஒதுக்கப்படாததால் நில எடுப்புப் பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன.

    அத்திப்பட்டு புத்தூர் இடையிலான இரயில்வே தடத்திற்கு இதுவரை இரயில்வே துறையினரால் நிலத் திட்ட அட்டவணை (L.P.S) சமர்ப்பிக்கப்படவில்லை மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தை காட்டிக் கொடுத்து விட்டேன் என்பது போன்று முதல்வர் ஸ்டாலின் பேசுவது அழகல்ல.
    • கனிம வள சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் ஒப்புதல் பெறப்படும் என்ற பிறகே ஆதரிக்கப்பட்டது.

    மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், "நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை" என தம்பிதுரை மழுப்பி இருக்கிறார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் தம்பித்துரை கூறுகையில் "தமிழகத்தை காட்டிக் கொடுத்து விட்டேன் என்பது போன்று முதல்வர் ஸ்டாலின் பேசுவது அழகல்ல. கனிம வள சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் ஒப்புதல் பெறப்படும் என்ற பிறகே ஆதரிக்கப்பட்டது" என்றார்.

    டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு பாராளுமன்ற ஆவணங்களே சாட்சி என்றும், முழு பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க முடியாது எனவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.

    மேலும் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், "நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை" என தம்பிதுரை மழுப்பி இருக்கிறார்.

    அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத்திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது.

    டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார்.

    அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.

    அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது.

    தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை?

    மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா?

    இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?

    கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும்- புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்திருந்தார்.

    கரூர் தொகுதியில் துணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்தங்கிய நிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருக்கிறது.
    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னணியில் இருந்து வருகின்றனர். கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 401 வாக்குகள் பெற்றுள்ளார்.



    அதிமுக வேட்பாளரான துணை சபாநாயகர் எம். தம்பிதுரை 55491 வாக்குகளே பெற்றுள்ளார். ஜோதிமணி 79910 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் 7724 வாக்குகள் பெற்றுள்ளது.
    ×