என் மலர்
நீங்கள் தேடியது "thankar bachan"
- இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

கருமேகங்கள் கலைகின்றன
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இயக்குனர் கவுதம் மேனன், பாரதி ராஜா, யோகிபாபு, அதிதி பாலன் இடம் பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
Ulaga Nayagan Dr. @ikamalhaasan reveals the first look of Director @thankarbachan's #KarumegangalKalaiginrana. @offBharathiraja @menongautham #DVeeraSakthi @iYogiBabu @AditiBalan @gvprakash #BLenin @Vairamuthu @eka_dop @VAU_Media @johnsoncinepro#கருமேகங்கள்கலைகின்றன pic.twitter.com/zsTtDOWYoP
— Yogi Babu (@iYogiBabu) March 6, 2023
- இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கருமேகங்கள் கலைகின்றன.
- இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

வைரமுத்து - தங்கர் பச்சான் - சித்ரா,
இப்படத்தின் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையில் பின்னணி பாடகி சித்ரா பாடி உள்ளார். இந்த பாடல் பதிவு சென்னையில் நடந்தது. இதுகுறித்து வைரமுத்து கூறும்போது, "39 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய 'பூஜைக்கேத்த பூவிது' பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை பாடல் பதிவில் சந்தித்தேன். அதே குரல். அதே கனிவு, அதே பணிவு'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
தங்கர் பச்சான் கூறும்போது, "நான் ஒளிப்பதிவாளனாக அறிமுகமாகிய (மலைச்சாரல்-1990) திரைப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதினார். அப்படத்தில் பாடகி சித்ராவும் பாடினார். எனது இயக்கத்தில் தற்போது 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்திலும் மூவருமே இணைந்து பணியாற்றுகின்றோம். தொடர்ந்து திரைக்கலையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது'' என்றார்.
- இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'.
- இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

கருமேகங்கள் கலைகின்றன போஸ்டர்
இந்நிலையில், கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
- பாரதிராஜா நடித்துள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'.
- இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படம் வருகிற செப்டம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலரை முன்னாள் நீதிபதி சந்துரு தனது இல்லத்தில் வைத்து வெளியிட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள தங்கர் பச்சான், "இன்னும் இரண்டு வாரங்களில் செப்டம்பர் 1- ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் எனது இயக்கத்தில் வெளியாகும் "கருமேகங்கள் கலைகின்றன" திரைப்படத்தின் திரை முன்னோட்டத்தை மேனாள் நீதியரசர் திரு. சந்துரு அவர்கள் இன்று அவரது இல்லத்தில் வெளியிட்டார்.

அவரைப்போன்ற மக்கள் பணியை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட நீதியரசரின் பாத்திரத்தில் திரு. பாரதிராஜா அவர்கள் நடித்திருப்பதால் அவர் வெளியிடுவதே பொருத்தம் எனக்கருதினோம். மனம் உவந்துப்பாராட்டி வெளியிட்டு வாழ்த்திய அண்ணன் திரு. சந்துரு அவர்களுக்கு எங்களின் படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமானுக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள் பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும்.
இத்தகைய அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவானால் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை! இது போன்ற நிகழ்வுகளை மட்டும் பணமாக்க நினைக்கும் ஊடகங்கள் மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி விடுகின்றன. மக்களும் பொது நல சிந்தனையின்றி கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுகின்றனர்.
மக்களும் ஊடகங்களும் மனது வைத்தால் மட்டுமே அனைத்து மாற்றங்களும் நிகழும்! அதுவரை வெறும் புலம்பலிலேயே மக்கள் வாழ்வு முடிந்து போகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள் பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும்.
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) September 12, 2023
இத்தகைய…
- சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
- மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும்.
இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான் உங்களை உயர்த்தி விடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல்…
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) December 5, 2023
- பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது
- கடலூர் தொகுதி வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளார்
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.
இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கடலூர் தொகுதி வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாகவும், அவரது விருப்பம் இல்லாமலே அவரது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்ற தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் அத்தகைய செய்திகளுக்கு தங்கர் பச்சான் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- 40 தொகுதியும் வென்ற தி.மு.க. கூட்டணி இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ளவாறு செயல்பட வேண்டும்.
- கடந்த 5 ஆண்டு வெளிநடப்பு மட்டுமே செய்தது தி.மு.க .கூட்டணி.
நெய்வேலி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. சார்பில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனினும் இயக்குனர் தங்கர் பச்சான் கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
அதன்படி, அவர் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சமட்டிக்குப்பம் புலியூர் சத்திரம் ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டை, பாச்சாரப்பாளையம், வடக்குத்து, வடக்குமேலூர், இந்திராநகர், 30 வட்டம் அடங்கிய நெய்வேலி நகரம் உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து நன்றி கூறினார். அப்போது நிருபரிடம் அவர் கூறியதாவது,
மக்களை சந்தித்து நான் நன்றி சொன்னால் மக்கள் எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள். என்னை பார்த்து கண்ணீர் விடுகிறார்கள். நான் தோற்றாலும் என் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்.
40 தொகுதியும் வென்ற தி.மு.க. கூட்டணி இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ளவாறு செயல்பட வேண்டும். கடந்த 5 ஆண்டு வெளிநடப்பு மட்டுமே செய்தது தி.மு.க .கூட்டணி.
பாஜக மீதான விரோத போக்கை கைவிடப்பட்டால் மட்டுமே தமிழகத்திற்கு நல்லது நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.