search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the goat life"

    • இந்நிலையில் தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது
    • இப்படம் 25 - நாளில் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.

    மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குனர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்தது. இப்படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.




    இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்தார். கடந்த 28- ந் தேதி தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. தமிழ், இந்தி,  மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது.

    இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் ஷோ' பார்த்து நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் வியந்து பாராட்டினார்கள்.




    இந்நிலையில் தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது.ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த உற்சாகமாக பார்த்து வருகின்றனர். மேலும் இப்படம் தற்போது 25 - நாளில் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் இன்று 4- நாளாக தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது
    • .மேலும் இப்படம் தற்போது 4 - நாட்கள் மட்டும் ரூ.50 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.

    மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்துது. இப்படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார். படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.

    இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.கடந்த 28- ந் தேதி தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது.

     இப்படத்தின் பிரீமியர் ஷோ' பார்த்து நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் வியந்து பாராட்டினார்கள்.

    இந்நிலையில் இன்று 4- நாளாக தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது.ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த உற்சாகமாக பார்த்து மகிழ்ச்சி அடைந்து பாராட்டி வருகின்றனர்.மேலும் இப்படம் தற்போது 4 - நாட்கள் மட்டும் ரூ.50 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • .படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.
    • வருகிற 28- ந் தேதி (மார்ச்) படம் தியேட்டர்களில் வெளியாகுகிறது

    மலையாள பட உலகின் முன்னனி நடிகர் பிருத்வி ராஜ். இவர் 'தி கோட் லைப்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அமலாபால் , வினீத் ஸ்ரீவின்வாசன் மற்றும் ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது.

    இந்த படத்திற்காக பிருத்விராஜ்31 கிலோ எடை குறைத்து இருந்தார். துரதிருஷ்டவசமாக 1.5 வருடங்களாக கோவிட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரது உடல் எடையும் அதிகரித்து.

    அதன் பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதும் உடல் எடையை குறைக்க மீண்டும் அதே செயல்முறையை மேற்கொண்டார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.





    இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.அவரது இசை படத்துக்கு கூடுதல் பலம் அளிப்பதாக அமைந்து உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. வருகிற 28- ந் தேதி (மார்ச்) படம் தியேட்டர்களில் வெளியாகுகிறது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது.

    சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த  எதிர்பார்ப்புகளை அதிகரித்தது.பிருத்விராஜ்க்கு இந்த படம் வெற்றிப்படமாக அமையுமா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

    பிருத்வி சிறந்த நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் பயணித்து வருகிறார் இவர் 'ஆகஸ்ட் சினிமா' என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் அண்மையில் வெளியான மலையாளப் படங்கள்  தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து உள்ளது. மேலும் நடிகர் பிருத்விராஜின் 'தி கோட் லைப்' படத்தின் மீது ரசிகர்கள் பார்வை குவிந்து உள்ளது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது.
    • இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது

    மலையாள சினிமாவின் சிறந்த முன்னணி இயக்குனரில் ஒருவர்தான் பிளெஸ்சி ஐப் தாமஸ். இவரை அனைவரும் ப்ளெஸி என்று தான் திரைத்துறையில் அழைப்பர். இயக்குனர் பிளெஸ்சி இயக்கிய காழ்ச்சா திரைப்படம் 2004-ல் வெளியானது. இதுவே இவருக்கு முதல் படம். மம்முட்டி, பத்மப்ரியா நடித்த இந்த படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 3 ஃபில்ம் ஃபேர் சவுத் விருதுகளை வென்றது காழ்ச்சா படம். இயக்குனர் பிளெஸ்சிக்கு காழ்ச்சா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.

    அதற்கு பிறகு 2005-ல் அடுத்த படமான 'தன்மாத்ர' படத்தை இயக்கினார். இது பத்மராஜனின் "ஓர்மா" சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிளெஸ்சி எழுதி இயக்கி 150 நாட்கள் ஓடிய திரைப்படம். தன்மாத்ர சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என 5 கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றது. 53-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மலையாளத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது. 2011-ல் 'பிரணயம்'படத்தை பிளெஸ்சி இயக்கினார். இத்திரைப்படம் அந்த அளவுக்கு வணிக ரீதியாக பெருமளவு வசூலிக்கவில்லை.

    இவர் எடுத்த "100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம் "ஆணவப் படம் 2018 வெளியானது. உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது. அந்த ஆவணப் படத்திற்கான நீளம் 48 மணி நேரம் 10 நிமிடங்கள். இந்நிலையில் இயக்குனர் பிளெஸ்சி தனது அடுத்த படமாக 'ஆடுஜீவிதம்'படத்தை இயக்கியுள்ளார். மார்ச் 28 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ப்ருத்விராஜ் மற்றும் அமலா பால் உள்ளிட்டோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இப்படம். பிளெஸ்சி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது. ஏர் ரகுமான், மோகன்லால், ப்ரிதிவிராஜ், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

     

     

     

     

    • நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தற்போது 'ஆடு ஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.


    இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஆடு ஜீவிதம் போஸ்டர்

    இந்நிலையில், 'ஆடு ஜீவிதம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    ×