என் மலர்
நீங்கள் தேடியது "The teenager beat"
- அய்யப்பன் மனைவி மகாலட்சுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- மகாலட்சுமியின் சகோதரர் கனகராஜ்க்கும், அய்யப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். (வயது30). இவர் இன்று தனது வீட்டின் எதிரே பிணமாக கிடந்தார். இதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றினர்.அப்போது அய்யப்பனை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து வீசி உள்ளனர். உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கான திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது. அய்யப்பன் மனைவி மகாலட்சுமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.எனவே மகாலட்சுமி தனது தாய் வீட்டுக்கு வந்தார். இன்று காலை அய்யப்பன் தனது மனைவியை குடும்பம் நடத்துவதற்கு அழைக்க சென்றார். அப்போது மகாலட்சுமியின் சகோதரர் கனகராஜ்க்கும், அய்யப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த கனகராஜ் தனது தங்கை கணவர் என்று கூட பாராமல் உருட்டுக்கட்டையால் அய்யப்பனை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்தது. இது ெதாடர்பாக போலீசார் கனகராஜை தேடி வருகிறார்கள்.