என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theaters"

    • பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன்.
    • இப்படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

    Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன்.

    புதிதாக தனக்குச் சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம்பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள், அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அறியும் அவள், அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேட, பல எதிர்பாராத முடிச்சுகள் அவிழ்கின்றன. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில், பரபரவென நகரும் திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வகையிலான ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

     

     

    இப்படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோருடன் சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

     

    இப்படத்துக்கு  இசையமைப்பாளர் சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்க, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜு V டான் பாஸ்கோ எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ஃபயர் கார்த்திக் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.  

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் நாளை காலை மற்றும் மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #CinemaShowsCancel
    தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.



    இந்த தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில், நாளை (ஏப்ரல் 19) அரசு விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு நாளை சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், தேர்தலையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் நாளை காலை மற்றும் மதியம் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #CinemaShowsCancel

    தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஸ்நாக்ஸ் மற்றும் பார்க்கிங் கட்டணத்தினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #KadamburRaju #Theaters
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வு தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்து அரசு வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

    விரைவில் நடைபெறவுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர் சங்கங்களை இணைத்து நடத்தும் 2-வது கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஸ்நாக்ஸ் மற்றும் பார்க்கிங் கட்டணத்தினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


    மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பு கொண்டு வந்தது 4 ஆண்டுகாலம் பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திரா அரசு தான். சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று தங்களின் மாநிலம் சார்ந்த கோரிக்கையை முன் வைத்து கொண்டு வந்ததை ஆதரிக்க முடியாது. அவர்கள் இந்தியாவிற்கான பிரச்சனையை முன் வைத்து கொண்டு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #KadamburRaju #Theaters
    ×