என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theertham"

    • சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது.
    • ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.

    அண்ணாமலையின் வடக்குத் திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் வறுமை எல்லாம் நீங்கி, சிவபிரான் திருவடியை அடையலாம். இந்த குபேர தீர்த்தத்திற்கு அருகே வசிட்ட முனிவரால் அமைக்கப்பட்ட வசிட்ட தீர்த்தம் உள்ளது.

    இதில் வசிட்டர், ஐப்பசி மாதத்தில் மூழ்கி, முனிவர்களுக்கு எல்லாம் முதன்மையாக இருக்கப் பெற்றார். அப்படிப்பட்ட தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு வேதத்திற்கு அங்கமாய் இருக்கின்ற சாத்திரங்கள் எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். அவர்கள் பாவக்கடலையும் கடப்பார்கள். அண்ணாமலையின் ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ஈசான்ய தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.

    திருவிளையாடல்களைச் செய்யும் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன்கள் உண்டாகும். அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.

    இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. திருமால் "வராக"அவதாரம் எடுத்த போது இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார். எனவே இந்த தீர்த்தம் பெரும் சிறப்பாக விளங்கியது.

    இந்த தீர்த்தத்தை வலம் வருவோரும், இதில் மூழ்கியவர்களும், இந்த நீரை உட் கொண்டவர்களும் துன்பக்கடலில் இருந்து வெளியே வந்து சிவபிரானின் இரண்டு திருவடிகளையும் இடமாக பெருவார்கள். அருணாசலேஸ்வரர் எழுந்தருளி இருக்கின்ற இந்த கோவில் வளாகத்தில் அக்னி திசையில், தாமரையாகிய சிறந்த ஆலயத்தில் வசிக்கும் நான்முகனால் அமைக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கினால் கடந்த பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும். இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஒரு அணு அளவு தங்கத்தை தானம் செய்பவர்கள் பெரும் பதவியை அடைவார்கள்.

    • வெண்ணைத்தாழி வைபவம் இங்கு மிகவும் சிறப்பு
    • திருபவித்ரோத்ஸவம் 10 நாட்கள் நடைபெறும்

    ஸ்ரீயப் பதியான ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சகை வடிவில் கோலங்கொண்டிருக்கும் திருத்தலங்கள் உலகெங்கிலும் இருந்தாலும், மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற முப்பெருமைகளால் அமையப் பெற்ற திருத்தலம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருத்தலம் ஒன்றே என்றால் அது மிகையல்ல.

    மூலவர் பரவாசுதேவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் கதையுடன் தங்க கவசம் பூண்டு கம்பீரமாய்க் காட்சி தருகின்றார். ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் அருள் வழங்கும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

    செண்பகவனத்து முனிவர்களின் வேண்டுகோளின் படி பிருந்தாவனத்தில் அன்று கண்ணன் செய்து காட்டிய லீலைகளை முனிவர்களுக்கும் காட்டி அருளினான். பரவாசு தேவனாக முதல் சேவை தொடங்கி 323-வது சேவையாக ஸ்ரீவித்யாராஜ கோபாலனாக சேவை சாதித்தருளினான். இதனைக் கண்ட முனிவர்கள் இத்திருக்கோலத்துடனே என்றும் காட்சி தந்தருளப் பிரார்த்தித்தனர்.

    உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால் நும்இச்சை சொல்லி நும்தோள் குலைக்கப்படும் அன்னை

    மன்னப்படு மறைவாணனை வண்துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே என்று நம்மாழ்வாரால் போற்றப்பட்ட ஸ்ரீராஜகோபாலனை மன்னையம்பதிக்கு எழுந்தருளச் செய்த கோபில, கோப்பிரளய மகரிஷிகளைப் போற்றி ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் அழகை இனிக் காண்போம்.

    மாடு மேய்க்கும் கண்ணனாக தான் மேய்க்கும் பசுவிடம் சிறிது சாய்ந்து கொண்டு ஒற்றை ஆடையுடன், ஒரு காதில் ஓலையும், ஒரு காதில் குண்டலமும் விளங்க ஒரு கையின் நுனியில் மும்மடிப்புள்ள செண்டாயுதமும் ஏந்தி இடது திருக்கரத்தை சத்யபாமாவில் தோளில் பதியச்செய்த வண்ணம், திருமுடியில் சுற்றிய திருப்பரி வட்டமும் இடையில் ஒற்றை ஆடையுடன் அழகுக்காட்சி நல்கும் நம் கோபாலன் மந்தகாசம் தவழும் செம்பவளச் செவ்வாயுடன், அருள் வெள்ளம் பாய்கின்ற திருமார்பின் அழகும், அடியவர்களை தன் அழகுப் புருவங்களால் ஈர்க்கும் ஆற்றலும் மிக்க இறைவனாக விளங்கக் காண்கிறோம்.

    ஆலயத்தின் தென்பகுதியில் ஹேமாப்ஜ நாயகி என்றும், செண்பகலெஷ்மி என்றும் செங்கமலத்தாயார் என்றும் போற்றப்படும் எழில் கொஞ்சும் தாயார் சன்னதி அமைந்துள்ளது.

    தாமரை மலரில் வீற்றிருக்கும் தாயார் தன் இரு பக்கங்களிலும் யானைகளுடன் கெஜலெட்சுமியாக அருட்காட்சி நல்குகிறாள்.

    இவை தவிர ஸ்ரீ ராமர் சன்னதியும், ஆழ்வாராதிகளுக்கென தனித்தனி சன்னதிகளும், ஆச்சார்யார்களைப் போற்றும் வண்ணம் அவர்களுக்கென தனி சன்னதிகளும் கொண்டு அழகுற விளங்குகிறது இவ்வாலயம்.

    இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் 18 நாள் பிரமோற்சவமும், தொடர்ந்து 12 நாள் நடை பெறும் விடையாற்றி விழாவும் பிரசித்தி பெற்றது. கோகுலத்தில் குழந்தை கண்ணன் ஆயர் வீடுகளில் புகுந்து வெண்ணை திருடி தின்னும் வைபவத்தை சித்தரிக்கும் வகையில் வெண்ணைத்தாழி வைபவம் நடை பெறுகிறது.

    திருவிழா அன்று ராஜகோபாலசாமி தவழும் கண்ணன் வடிவு அலங்காரத்தில் கையில் வெள்ளி குடத்துடன் பல்லக்கில் கோவிலில் இருந்து வீதி உலா காட்சியாக புறப்படுவார். வீதிகள் தோறும் பெண்களும், பக்தர்களும் கண்ணனுக்கு பிரியமான வெண்ணை மற்றும் விசிறி கொடுத்து வணங்குவார்கள்.

    மதியம் வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங் காரத்திலும், குதிரை வாகனத் திலும் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். காலையில் தொடங்கிய விழா இரவு வரை நடைபெறும் இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    பகவான் கண்ணன் கோப்பிரளயம் முனிவர்களுக்கு 32 திருக்கோலங்களில் தரிசனம் கொடுத்துள்ளார். ஆனால் மூலக் கிரந்தத்தில் 30 அவதாரங்களை மட்டுமே குறிப்புகள் உள்ளது. ஒருவேளை விரிவுக்கு அன்றி 30 மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

    30 திருக்கோலங்கள்-

    1. அவதார வைபவம்

    2. பூதனா சம்ஹாரம்

    3. யசோதனையின் மடியில் இருந்து பால் பருகியது.

    4. சாயக் கொண்டையுடன் மாயன் தவழ்ந்து வந்தது.

    5. நவநீத நாட்டியம்

    6. ஆநிரை மைத்தல்

    7. வெண்ணைக் களவு

    8. புன்னை மரக்கண்ணன்

    9. புல்லாங்குழல் இசைத்ததும் பசுக்கள் பால் சுரந்ததும்.

    10. உரலிடை யாப்புண்டது.

    11. மாடு மேய்க்கையில் கோலை ககீழே ஊன்றி அதன் மேல் திருமுடி வைத்து கட்டியது.

    12. கலமும் கயிறும் கொண்டு பால் கறந்த அழகு.

    13. கபித்த& வத்ஸாஸ-ரர்களின் வதம்.

    14. காளிங்கநர்த்தனம்

    15. பெண்களின் மஞ்சள் பூச்சை தம் திருமேனியில் காட்டி அருளின பெண்ணாளன் பெருமை.

    16. பொன்னாழியும், புரிசங்கமும் தண்டும் வில்லும் சார்த்தி சேவை தந்தருளியது.

    17. குறவை கூத்து

    18. இடையருக்கு தம் அவதாரங்களை அப்படியேகாட்டி ஆட்கொண்டது.

    19. இடையர்களுடன் அமுதுண்ட காட்சி.

    20. கோமர்த்தனம் எடுத்து கல்மாரி காத்தது.

    21. பிரம்மனால் அபகரிக்கப்பட்ட நிலை.

    22. கோபிநாதனின் கோபிகா லீலை காட்சி.

    23. பாரிஜாதா பஹரணம்.

    24. ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம்.

    25. குவலயா பீட வதம்.

    26. முஷ்டிக காணுர வதம்.

    27. ருக்மணி சத்யபாமாவுடன் பள்ளியறை காட்சி.

    28. வாதுதீர்க்க தூது சென்ற சேவை.

    29. பார்த்தசாரதியாக கீதை உபதேசம் செய்தது.

    30. ருக்மணி சத்யபாமாவுடன் ஒரு வண்டு போல் எழுந்தருளி 3 வளைவு கொண்ட சாட்டை கயிறுடன் கூடிய பொற்கோலை ஏந்தியும், விக்கிரக வடிவத்தில் சேவை தந்து அருளுவது.

    இக்கோவிலில் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் திருத்தேருடன் தாயார் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உயர் அரங்கர்க்கு கன்னி உகந்தளித்த ஆண்டாளாகவே செங்கமலத் தாயார் அருள்பாலிப்பதாக ஐதீகம். 10 தினங்கள் வெவ்வேறு வாகனங்களில் தாயார் புறப்பட்டு ஆலயத்தினுள் உள்ள தாயார் பிரகாரத்தில் உலாவரும் காட்சி மிக உன்னதமாக இருக்கும்.

    நிறைவு நாளில் திருத்தேரில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாயாருக்கென தனித்தேர் வேறு எங்கும் கிடையாது என்பது இதன் தனிச்சிறப்பு. ஆடி 18-ம் நாள் ஆடிப்பெருக்கு நாளன்று கோபாலன் பாமணி ஆற்றுக்குச் சென்று தீர்த்தவாரி கண்டருளி பின்னர் திருப்பாற்கடலின் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலெட்சுமி நாராயணப் பெருமாள் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

    ஆவணி மாதத்தில் `திருபவித்ரோத்ஸவம்' என்று போற்றப்படும் விசேஷமான உற்சவம் 10 தினங்கள் நடைபெறும். இந்நாட்களில் ஆண்டு முழுவதும் நடைபெற்று வரும் பூஜைகளில் குறைபாடுகள் இ ருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக 365 வகையிலான பூஜைகள் நடைபெறும். இவ்விழா நாட்களில் யாகசாலையில் பல்வேறு ஹோமங்களைச் செய்து பெருமாளுக்கு பூஜைகள் செய்வது மிகச்சிறப்பான ஒன்றாகும்.

    இந்நாட்களில் பெருமாள் திருப்பவித்ரமாலைகளை அணிந்து காட்சி தருவார். இவ்விழாவின் இறுதி நாளில் தீர்த்தவாரி ஹரித்ராநதியில் நடைபெற்று விழா நிறைவுறும். மேலும் இம்மாதத்தில் ஸ்ரீஜெயந்தி எனப்படும் கண்ணன் பிறப்பு வைபவம் சிறப்பாக உரியடித்திருவிழாவுடன் நடைபெறுவது மிகச்சிறப்பு அம்சமாகும்.

    • சூனியம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.
    • அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இந்த தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.

    சக்தி தீர்த்தம்

    தென்னகத்தின் பெருமைமிக்க காவேரியின் உபநதியான வெருவளை வாய்க்கால் புனித சக்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் தெற்கு தேரோடும் வீதியின் தென்புறத்தில் உள்ள புகழ்பெற்ற தீர்த்தமாகும். இத்தீர்த்தம் அருகே உள்ள படித்துறையில் சுப்பிரமணிய கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களது முடி காணிக்கையினையும், புனித நீராடுதலையும், ஆதி முதல் இன்றளவும் இங்கு மேற்கொள்வதை வழக்கமாக கொள்கின்றனர். அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் இங்கு நீராடி வழிபாடு மேற்கொண்ட பின்னரே பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணத்தை செய்து முடிப்பர். இங்கு ஆடிப்பூர தீர்த்தவாரியும், ஆடி 18 தீர்த்தவாரியும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. அதுசமயம் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் இத்தீர்த்தத்தில் நீராடி மகாமாரியின் அருளை பெற்று செல்கிறார்கள்.

    மகமாயி தீர்த்தம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வடமேற்கே, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திற்கு இடப்புறம் இத்தீர்த்தம் அமைந்துள்ளது. விஜய நகர நாயக்கர் கால கோவில் திருப்பணிகளில் இந்த குளம் வடிவமைக்கப்பட்டதாகும். நாற்புறமும் நுழைவுப்பாதை படிகளுடன் அமைக்கப்பட்டு நடுவில் அழகிய கோபுரத்துடன் சிறு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பல கட்டிடக்கலை மரபுகளை இத்திருக்குளம் பெற்று இருப்பதையும் காணமுடிகிறது.

    இத்திருக்குளத்திற்கு பெருவளை வாய்க்கால் வழியாக நீர் கொண்டுவரவும், எஞ்சிய நீரை வெளியேற்ற தரையின் உட்புறம் வாய்க்கால் மூலமாக நீர் வெளியேறும், நிலத்தடி நீர்வழி வாய்க்காலும் அமைக்கப்பட்டு இருப்பது இதன் சிறப்பாகும். பிற காலங்களில் மேற்குறிப்பிட்ட முறையில் நீரை நிரப்பி தெப்பஉற்சவபெருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்கு முதல் நாளும், சித்திரை தெப்பமும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாட்களில் மாரியம்மன் மேற்கு கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி வழங்குகிறாள்.

    முற்காலத்தில் அரசர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த இக்குளம் தற்போது கோவில் நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக சீரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தீர்த்தத்தில் இருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி எடுப்பது, அலகு குத்தி வருவது இன்றளவும் மரபாக இருந்து வருகிறது. பிரசித்தி பெற்ற இத்திருக்கு ளத்தில் பலவகையான தீபங்களை மிதக்கவிட்டு அம்மனுக்கு பிரார்த்தனை தீபம் ஏற்றுகின்ற ஐதீகமும் உள்ளது.

    சர்வேஸ்வரன் தீர்த்தம்

    இத்தீர்த்தம் வடமேற்கேயுள்ள வாயு மூலையில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலின் தீர்த்த வளாக பகுதியில் கோவில் பணியாளர் குடியிருப்புகள் உள்ளன. புராண காலத்தில் சப்த கன்னியர்கள் ஒவ்வொரு மகா மகத்திற்கு முன்பும், கங்கா தேவியை இப்புனித தீர்த்தத்தில் ஆவாகணம் செய்து அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரை கும்பகோணம் மகாமக குளத்தில் சேர்ப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே தான் வரலாற்று சிறப்பு பெற்ற இத்தீர்த்தத்தின் வடமேற்கு பகுதியில் அதிசய மகாமக தீர்த்த ஊற்று உள்ளது. இங்ஙனம் சக்தி தீர்த்தத்தை தன்னகத்தே அதிசய மகாமக தீர்த்தம் என்றதொரு புனித ஊற்று தீர்த்தத்தை உள்ளடக்கி யதாக காணப்படுகிறது. இன்றும் இந்த அதிசய மகாமக தீர்த்தத்தில் கும்பகோணத்தில் நடைபெறும் ஒவ்வொரு மகாமக தீர்த்தம் முன்பாகவும் வெள்ளம் பெருக்கெடுத்து, சக்தி தீர்த்தம் நிரம்பும். ஒவ்வொரு மகாமக காலத்தின்போதும் ஏற்படும் இவ்வாறான அதிசய நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் வந்து இத்தீர்த்த நீரை எடுத்துச்செல்வது வழக்கம்.

    ஜடாயு தீர்த்தம்

    கனகாம்பிகை உடனுறை ஸ்ரீமுக்தீஸ்வரர் கோவிலின் தெற்கேயும், மாரியம்மன் கோவிலின் தென்கிழக்கேயும் அமைந்திருப்பது வரலாற்று சிறப்பு பெற்ற ஜடாயு தீர்த்தமாகும். ஜடாயுவிற்கு இறைவன் முக்தி கொடுத்ததாக கூறப்படும் புகழ்பெற்ற தலம் இதுவே ஆகும். ஜடாயுவின் தாகத்தை தணிக்கவும், ராவணன் சீதையை கடத்தி சென்ற விபரத்தை ராமனிடம் கூறும்வரை தன் உயிர் பிரியாமல் இருக்க ஜடாயு மகேஸ்வரனிடம் வேண்ட மகேஸ்வரனால் பிரசித்தி பெற்றதாகவும் இத்தீர்த்தம் கருதப்படுகிறது. இன்றும் வற்றாத நீர்நிலையை கொண்டு இந்த தீர்த்தம் விளங்குகிறது. மேலும் உயிர்பிரிந்த ஜடாயு தன்னுடைய தந்தை தசரதனுக்கு நண்பன் என்பதால் ஜடாயுவிற்கு ஈமக்கடன்களை செய்ய ராமன் முடிவு செய்தான். தன் கை அம்பினால் ராமன் பூமியில் நீர் ஊற்று ஒன்றினை உண்டாக்கினான். அதுவே ஜடாயு தீர்த்தம் என்பதாயிற்று என்ற மற்றொரு புராண குறிப்பும் இதற்கு கூறப்படுகிறது.

    கங்கை தீர்த்தம்

    இக்கோவிலின் உப கோவிலான உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலின் கிழக்கில் அமைந்திருப்பது கங்கை தீர்த்தமாகும். இது அருள்மிகு மாரியம்மன் கோவிலின் தென்கிழக்கே அமைய பெற்றுள்ளது. காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என கொண்டி ருந்த விக்கிரமாதித்தன் தமது இஷ்ட தேவதையான காளி பூஜைக்கு நித்திய பூஜைகளை செய்ய கங்கா தேவியிடம் வேண்டினான். கங்கையும் அங்கு பிரத்தியம்சமாய் தோன்றினாள். இதுவே கங்கை தீர்த்தம் என்னும் வற்றாத தீர்த்தமாகும். மகளிவனத்து மாகாளி வீற்றிருக்கும் இந்த இடத்திலுள்ள தீர்த்தம் வற்றாத தன்மையை கொண்டதாகும். திருமண தடைகள், தீராத நோய்கள், பில்லி, சூனியம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.

    மூளைக்கோளாறு, குழந்தையின்மை ஆகியவற்றை குணப்படுத்த அற்புத மருந்தாக இந்த புனித தீர்த்தம் இன்றும் பக்தர்களுக்கு பயன்பட்டு வருகிறது.

    அம்பாளின் அளவிலா கருணையினாலும், பேரொளியினாலும் இந்த தீர்த்தத்தை பயன்படுத்தும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நிலைகளில் நலன் பயப்பதாக அறியப்படுகிறது. அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இந்த தீர்த்தம் ஒரு அருமருந்தாகும். செய்வினை மற்றும் மந்திர சக்தியை இக்கோவில் தீர்த்தம் கட்டுப்படுத்தும். அனைத்து திருக்கோவில்களிலும் இறை சக்தியை நிலை நிறுத்த இத்தீர்த்தம் மிகப்புனிதமாக பயன்படுகிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் புனித தீர்த்தம், காவேரியின் உபநதியாக இருப்பதால் இதில் குளித்தவுடன் சகலவித பாவங்களும், வியாதிகளும் அம்பாளின் அனுக்கிரகத்தால் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. இப்புனித நீரில் அம்பாளின் நாமத்தை மூன்று முறை உச்சரித்து மூழ்கி எழுந்தால் இதுவரை கண்டிராத உள்ளத்தூய்மை, உடல் தூய்மை ஆகியன ஏற்பட்டு புத்துணர்ச்சியை அடைந்து மக்கள் மனநிறைவு பெறுவது கண்

    கொள்ளா காட்சியாகும்.

    • புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி.
    • நதியில் உள்ளம் குளிர குனிந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும்.

       1. நீராடப் போகிறவர்கள் செருப்பு போட்டுக் கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் செல்லக் கூடாது.

    2. நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்து தன் உடம்பில் பூசிக்கொண்டு, நதியை வணங்கி அதனுள் இறங்க வேண்டும்.

    3. சிகப்பு, கருப்பு, நீலநிற வஸ்திரம், தலைப்பு இல்லாத வஸ்திரம், ஓரத்தில் நீலக்கரை, கருப்பு கரை போட்ட வஸ்திரம் இவைகளை உடுத்திக் கொள்ளக் கூடாது.

    4. புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி.

    ஆனால், புனித நதிகளில் நீராடும் போது, நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர் முகமாக நின்றே நீராட வேண்டும்.

    முதுகைக் காட்டக் கூடாது.

    5. நதியில் உள்ளம் குளிர குனிந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும்.

    ஒவ்வொரு முறையும் ''ஹரி, ஹரி'' என்று சொல்ல வேண்டும்.

    6. ஆண்கள் அரைஞாண்கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது. அரைஞாண் கயிற்றில் வேஷ்டியை கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது.

    இது வேஷ்டி இல்லாததற்குச் சமம்.

    7. பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது.

    8. நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ் வதும், சிறுநீர் கழிப்பதும் பாவச்செயலாகும்.

    9. நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.

    10. நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிர்களை உதறக் கூடாது.

    11. நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு, ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும்.

    மேலாக எடுத்துப் போடக் கூடாது.

    12. நெற்றியில் கோபி சந்தனம் பூசிக் கொண்டு நதியை மீண்டும் ஒருமுறை வணங்கி முடிக்க வேண்டும்.

    சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும்.

    இந்த 96 நிமிட காலத்தில் நீராடுவது மிக மிகப் புண்ணியமாம்.

    திருமணமாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடினால் மட்டுமே நற்பலன் கிட்டும்.

    திருமணமானவர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராடலாம்.

    சந்நியாசிகள் அதிகாலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.

    • நம்மை சிறப்புற இம்மையிலும், மறுமையிலும் உள்ள வாழ்க்கைக்கு தயார் செய்கிறார்கள்.
    • இந்த காலகட்டத்திலாவது நதியை மாசுபடுத்தாதீர்கள்.

    தாமிரபரணி ஆற்றில் நடக்கும் இந்த நிகழ்வில் நாம் ஏன் தீர்த்தம் ஆட வேண்டும் நாம் ஏன் பூஜைகள்

    வழிபாடுகள் செய்ய வேண்டும் என்ற பல்வேறு கேள்விகள் நமக்குள் இருக்கும்.,

    ஆனாலும் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்று சிலரும் புராண இதிகாச கதைகளை

    மேற்கோள்காட்டி சிலரும் கலந்து கொள்வார்கள்.

    அதைவிட உண்மை நிகழ்வுகளை நன்கு புரிந்துகொண்டு செயல்படுவது என்பது மேன்மையுடையதாக இருக்கும்.

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களின் தொகுப்பே இப்பிரபஞ்சம்.

    அதுபோலவே ஐந்து பூதங்களின் கலப்பினால் நம் உடல் உருவாகி இருக்கிறது எனவே தான் சித்தர்கள் அண்டத்தில்

    உள்ளது பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் உள்ளது எனும் ஒரு விளக்கத்தை சொல்லி இருக்கிறார்கள்.

    காரணம் என்னவென்றால் பஞ்சபூதங்களான இவை ஐந்தும் நம் உடலுக்குள் உள்ள முக்கிய உறுப்புகளுடன் தொடர்புகொண்டது

    உதாரணமாக நீர் பூதம் சிறுநீரகம் சிறுநீர் பை கர்ப்பப்பை விதைப்பை ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு உள்ளது

    மேலும் எலும்புகள் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நீர்ச்சத்து குறைவே காரணம்

    இப்படி ஒரு தொடர்பு உள்ள நம் உறுப்புகள் பலவீனம் அடைவதும் பாதிப்புகள் அடைவதும் நாம் பஞ்சபூதங்களில்

    ஒன்றான நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவதாலும் அதை போற்றி பாதுகாக்காமல் இருப்பதாலும் மேற்கண்ட

    தோஷத்தினால் உறுப்புகள் பாதிப்படையும்.

    நீர் பூதம் உறுப்புகள் தோஷம் நீங்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் நாம் வசிக்கும் பகுதியில் உள்ள

    நீர் நிலைகளையும் அதை சார்ந்த பகுதிகளையும் பராமரித்து சுத்தமாகவும் வைத்திருத்தலே

    நாம் நம் நீர் பூத உறுப்புகளை பாதுகாக்கும் வழிமுறையாகும்.

    இது உடல் சார்ந்த தொடர்பு அது மட்டுமல்ல நம் மனதிற்கும் பஞ்சபூதங்களுக்கும் தொடர்பு உண்டு.

    நீரை நாம் அசுத்தப்படுத்தினால் நம் மனதில் பயம் கூச்சம் தாழ்வுமனப்பான்மை போன்ற

    எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் இது மனதில் ஏற்படும் மாற்றங்கள்.

    மேலும் ஆன்ம ரீதியாக ஐம்பூதங்களை நாம் வணங்கி பாதுகாத்து வந்தால் அதன் பொருட்டு ஆண்மை தெளிவும் உறுதியும் ஏற்படும் என்பது சித்தர்களின் தெளிவு.

    ஆகவே மனம், உடல் ஆன்மா இவை அனைத்திற்கும் நாம் செய்யும் இத்தகைய செயல்கள் நம்மை

    மேன்மை அடைய வைக்கும் ஆகவேதான் சித்தர்கள் பஞ்சபூதத்திற்கான விழாவை நமக்கு கொடுத்து

    நம்மை சிறப்புற இம்மையிலும், மறுமையிலும் உள்ள வாழ்க்கைக்கு தயார் செய்கிறார்கள்.

    நவகோள்களில் ஒன்றான குரு பெயர்ச்சி அன்று தன் ஆற்றலை இந்நதியின் மூலக்கூறுகளுடன் கலந்து

    நீரின் மூலக்கூறு சக்தியை பன்மடங்காக்கும் நிகழ்வுதான் இது.

    இப்படி ஓர் அரிய நிகழ்வு நாம் வாழும் காலத்தில் கிடைத்திருக்கிறது.

    அந்த சக்தி அடைந்த மூலக்கூறுகள் கொண்ட இந் நதியின் நீர் நம் உடலையும் மனதையும் தோஷம் நீக்கி

    புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.

    குரு கோளின் அதீத தெய்வ சக்தி அடைந்த இந்நதியை கோவிலின் கருவறையாகவே கருதவேண்டும்.

    இந்த காலகட்டத்திலாவது நதியை மாசுபடுத்தாதீர்கள்.

    நதியின் தூய்மை மற்றும் தெய்வீகத்தை காக்கும் பணியில் உறுதுணையாக நின்றவர்கள் கோவில் கும்பாபிஷேகம் செய்த பலனை அடைவார்கள்.

    • அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து அவரால் விடுவிக்கப்பட்டது தாமிரபரணி என்கின்றன புராணங்கள்.
    • அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.

    வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பெரிதும் போற்றப்படும் நதி

    தாமிரபரணி, காவிரியை போல் இதுவும் அகத்திய முனிவரால் உருவான ஆறுதான்.

    அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து, காக்கை வடிவில் வந்து விநாயகரால் தட்டிவிடப்பட்டு பரந்து விரிந்து பாய்ந்தது காவிரி.

    அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து அவரால் விடுவிக்கப்பட்டது தாமிரபரணி என்கின்றன புராணங்கள்.

    சிவன் பார்வதி திருமணத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும்

    கயிலைக்கு சென்றதால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.

    உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப்

    புறப்படும்போது, உமையவள் அகத்தியரிடம் தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க,

    அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.

    அகத்தியர் அந்த முத்துமாலையை கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது.

    அவ்வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று போற்றிக் கொண்டாடினர்.

    பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், 'தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும்,

    உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்' என்று கூறி,

    அவளையும் தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

    பொதிகைமலையில் அகத்தியர் சிவன்-பார்வதி திருமண காட்சியை கண்ட மகிழ்வில் இருக்கும்போது

    வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில் இருந்த

    தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார்.

    கிழக்கு நோக்கிய அருவியாக கலம்பகர்த்தம் என்ற தடாகக் குழியில் விழுகிறாள் தாமிரபரணி.

    அதுவே பாணதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

    தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரமான வைகாசி விசாகம்தான், தமிழ் வளர்த்த

    தவமுனிவராம் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்ட தாமிரபரணியின் நட்சத்திரம் என்பதும்

    தாமிரபரணிக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.

    • தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
    • அப்போது, உமையவள் அகத்தியரிடம், தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளித்தார்.

    சிவன் - பார்வதி திருமணத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும்

    கயிலை மலைக்கு சென்றதால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.

    உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்பட்டார்.

    அப்போது, உமையவள் அகத்தியரிடம், தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க, அகத்தியர்

    அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.

    ஆனால், உண்மையில் அது வெறும் முத்தாரம் மட்டும்தானா..?

    இல்லை.

    பெண் எனப் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே அந்த ஆரமாகி, அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்து கொண்டிருந்தன!

    சிவபெருமானின் தேவியான பார்வதிதேவி லலிதை என்னும் ஞானசக்தியாகத் திகழ, இச்சா மற்றும் கிரியாசக்திகள்

    ஞானசக்தியாகிய லலிதைக்குப் பணிவிடை செய்தனர்.

    அதனால், மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம், 'வேண்டும் வரம் கேளுங்கள்' என்று கூறினர்.

    அதற்கு அவர்கள், ''தேவி, தாங்கள் நாராயணனாக வந்து எங்களை மணந்துகொள்ளவேண்டும்'' என்று கூறினர்.

    தன்னில் சரிபாதியை தனக்குத் தந்த தன்னுடைய நாயகனைப் பிரிய மனமில்லாத தேவி, அவர்களுடைய

    விருப்பத்தை நிறைவேற்ற நாரணியாகவும் நாராயணனாகவும் வடிவெடுத்தாள்.

    நாரணியாகத் தன் நாயகனிடம் இருந்துகொண்டு, நாராயணனாக அவர்கள் இருவரையும் மணந்துகொண்டாள்.

    தம்முடன் இருந்த நாரணியுடன் ஈசன் நதிநீர்விளையாட்டில் விருப்பம் கொண்டவராக நீராடச் செல்ல,

    அப்போது நதியின் சில நீர்த்துளிகள் அம்பிகையின் திருமார்பில் இருந்த குங்குமத்துடன் கலந்து

    தாமிர நிறம் பெற்று முத்துக்களாக மாறியது.

    அம்பிகை அந்த முத்துக்களைச் சேர்த்து ஆரமாக்கி அணிந்துகொண்டாள்.

    நாரணியாகத் தோன்றியதற்கான அவசியம் முடிந்ததும், அந்த முத்துமாலை ஸ்ரீபுர நாயகியான பராசக்தியிடம் சேர்ந்துவிட்டது.

    சிலகாலம் சென்றது.

    தாட்சாயணியாக அவதரித்து சிவபெருமானை மணந்திருந்த நிலையில், தன் நாயகனை மதிக்காமல்

    தன் தந்தை நடத்திய யாகத்தைத் தடுக்கச் சென்றவள், அது முடியாமல் போகவே பிராண தியாகம் செய்துகொண்டாள்.

    பின்னர், இமவானின் மகளாகத் தோன்றி, இமவதி, பார்வதி என்ற பெயர்களைப் பெற்று, சிவபெருமானை மணம் செய்துகொள்ள விரும்பினாள்.

    அதற்காக எந்த சக்தியின் அம்சமாகத் தோன்றினாளோ அந்த பராசக்தியைக் குறித்து தவம் இயற்றினாள்.

    பராசக்தியும், தன் அம்சமான தேவியை ஆசீர்வதித்து, தான் அணிந்திருந்த முத்துமாலையையும் பார்வதிக்கு கொடுத்து அருளினாள்.

    அந்த முத்தாரத்தைத்தான் தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியரிடம் பார்வதிதேவி வழங்கினாள்.

    அகத்தியர் அந்த முத்துமாலையைக் கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது.

    அதே வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று போற்றிக் கொண்டாடினர்.

    பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், 'தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும்,

    உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்' என்றும் கூறி,

    அவளையும் நதியுருவாக்கி கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

    தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

    கயிலை நாயகனின் கல்யாணக் கோலம் தரிசிக்கப் பெற்று உள்ளம் மகிழ்ந்தார்.

    மகிழ்ச்சியான அந்த மனநிலையில், உலகைச் செழுமைப்படுத்த திருவுள்ளம் கொண்ட அகத்திய முனிவர்,

    வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில்

    இருந்த தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார்.

    இதுதான் தாமிரபரணியின் சிலிர்ப்பூட்டும் வரலாறு.

    • மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.
    • அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.

    மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.

    அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.

    தம் பாவங்களைப் போக்க வந்த நவக்கன்னியர் ஒன்பது பேரும் தத்தம் பேரால் ஓர் தீர்த்தம் கண்டனர்.

    தேவர், கின்னார், கிம்புருடர், கந்தர்வர், சித்தர், வித்தியாதரர், சாரணர், முனிவராதியோர் கண்ட தீர்த்தமும் பல.

    ஆகவே மகாமக தீர்த்தத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் ஒன்று, திக்குபாலகர் தீர்த்தம் எட்டு, நவகன்னியர் தீர்த்தம் ஒன்பது, தேவராகியர் தீர்த்தம் அறுபத்தாறு கோடியுமாகும்.

    இப்படி அனைத்து தீர்த்தங்களும் ஒரு சேர விளங்குவதே மகாமகத் தீர்த்தமாகும்.

    • பிரம தீர்த்தம் - பித்ருக்களை கரையேற்றும்
    • கங்கை தீர்த்தம் - கயிலை பதவி அளிக்கும்

    1. இந்திர தீர்த்தம் -வானுலக வாழ்வு அளிக்கும்

    2. அக்கினி தீர்த்தம் -பிரமஹத்தி தோஷம் நீங்கும்

    3. யம தீர்த்தம் -யம பயமில்லை

    4. நிருதி தீர்த்தம் -பூத, பிரேத, குற்றம் நீங்கும்

    5. வருண தீர்த்தம் -ஆயுள் விருத்தி உண்டாகும்

    6. வாயு தீர்த்தம் -பிணிகள் அகலும்

    7. குபேர தீர்த்தம் -சகல செல்வங்களும் உண்டாகும்

    8. ஈசான தீர்த்தம் -சிவனடி சேர்க்கும்

    9. பிரம தீர்த்தம் -பித்ருக்களை கரையேற்றும்

    10. கங்கை தீர்த்தம் -கயிலை பதவி அளிக்கும்

    11. யமுனை தீர்த்தம் -பொன்விருத்தி உண்டாகும்

    12. கோதாவிரி தீர்த்தம்-இஷ்ட சித்தி உண்டாகும்

    13. நருமதை தீர்த்தம் -திடகாத்திரம் உண்டாகும்

    14. சரசுவதி தீர்த்தம் -ஞானம் உண்டாகும்

    15. காவிரி தீர்த்தம் -புருஷார்த்தங்களை நல்கும்

    16. குமரி தீர்த்தம் -அசுவமேத பலன்களைக் கொடுக்கும்

    17. பயோடினி தீர்த்தம் -கோலாகலம் அளிக்கும்

    18. சரயு தீர்த்தம் -மனக்கவலை தீரும்

    19. அறுபத்தாறு கோடி தீர்த்தம்-துன்பம் நீங்கி இன்பம் கைகூடும்.

    • அறிவியல் மேதைகளை உலகுக்குத் தந்த சிறப்பு கும்ப கோணம் நகரத்துக்கு உண்டு.
    • இந்நகரம் கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது

    கும்பகோணம் தலம் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமான் திருவருள் செயலால் தோன்றி விளங்குகிற தலமாகும்.

    காவிரி ஓடுவதால், நீர்வளம் நிலவளம் மிக்கது.

    பொன் கொழிக்கும் பூமி.

    அறிவியல் மேதைகளை உலகுக்குத் தந்த சிறப்பு கும்ப கோணம் நகரத்துக்கு உண்டு. இந்நகரம் கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்நகரத்தின் பெருமைகளைப் பற்றி ஆயிரம் நாவு கொண்ட ஆதிசேஷனாலும் வர்ணிக்க முடியாது என்று சொல்வார்கள்.

    பரமசிவனும், மகாவிஷ்ணுவும் அதிக விருப்பத்துடன் வாசம் செய்யும் ஸ்தலம்.

    மாந்தாதர், மதங்கமுனி, துமகேது, சூரியன் இவர்களால் கடும் தவம் செய்து, பரபிரும்மத்தினை அடைந்து, சாயுஜ்யம் பெற்ற இடமும் இது ஆகும்.

    • காவிரிக்கு தென்கரையில் சூரியனுக்கு அருளிய சக்கரபாணியாகிய நரசிம்மன் இருக்கிறார்.
    • சக்கரபாணிக்கு நேர்கிழக்கில் பாணபுரீசர் ஸான்னித்தியமாயிருக்கிறார்.

    * கன்னியா தீர்த்தக்கரையின் வடபக்கத்தில் வீற்றிருக்கும் நவகன்னியர்களோடு கூடிய காசிவிசுவநாதரை காண சகல அதிஷ்டங்கள் கைகூடும்.

    * கீழ்கரையில் மேற்கு திசை நோக்கி இருக்கும் அபிமுக்தேசுவரரை தரிசிப்பவருக்கு மறுஜென்மமில்லை.

    * மேல்கரையில் இருக்கும் கவுதமேசுவரனார் குபேர சம்பத்தை பக்தர்களுக்கு அளிக்கிறார்.

    * வில்வ வனத்தில் நாகேசுவரர் மகாமக குளத்தின் வடமேற்கு மூலையில் இருக்கிறார், சிவஸாயுஜ்யம் அவரை தரிசிப்போருக்கு ஏற்படும்.

    * சோமேசர் நாகேசருக்கு வடக்கு மூலையில் இருக்கிறார். குருவும் சந்திரனும் வழிபட்டு பேறு பெற்றர்கள்.

    * சோமேசருக்கு வடக்கில் ஹேமமுனியின் தவம் சித்தியடைவத்தின் பொருட்டும், அசுரர்களை சம்ஹாரம் செய்யவும் ஸ்ரீ தேவியோடும் பூதேவியோடும் சாரங்கபாணியாய் இருக்கிறார்.

    அவரை பார்த்த மாத்திரத்தில் பாவம் பறந்தோடுகிறது. விஷ்ணு சாயுஜ்யம் ஏற்படுகிறது. மகர சங்கராந்திதினத்தில் பொற்றாமரை ஸ்நானம் சிறப்பாகும்.

    * ஆராவமுதனுக்கு நேர்மேற்கில் ஆதிகும்பேசுவரர் இருக்கிறார் கடும்தவம் செய்திருந்தாலொழிய அவர் தரிசனம் ஏற்படாது வெள்ளிக்கிழமையில் மங்களநாயகியின் தரிசனம் விசேஷ பலன் தரும்.

    * கும்பநாதருக்கு தென்மேற்கில் தூமகேது முனிக்கு தரிசனமளித்த ஆதிகம்பட்ட விசுவநாதர் வீற்றிருக்கிறார்.

    * கும்பேசுவாருக்கு வடக்கில் காவிரியின் தென்கரையில் பூவாரக பெருமாள் எழுந்தருளியிருக்கிறார்.

    * காசியபருக்கு காட்சி கொடுத்த இலட்சுமி நாராயணர் காவிரி தீர்த்தில் இருக்கிறார்.

    * காவிரிக்கு வடபக்கத்தில் ( மேலக் காவேரி ) மதங்கருக்கருளிய வரதராஜன் வீற்றிருக்கிறார்.

    * காவிரிக்கு தென்கரையில் சூரியனுக்கு அருளிய சக்கரபாணியாகிய நரசிம்மன் இருக்கிறார்.

    * சக்கரபாணிக்கு நேர்கிழக்கில் பாணபுரீசர் ஸான்னித்தியமாயிருக்கிறார்.

    புராண காலத்திற்கு பின்தோன்றி சிறப்போடு விளங்கும் கோவில்கள்

    1. காளாத்தி நாதன் (சிவன்கோவில்) 2. ராமஸ்வாமி (ராமர் கோவில்) 3. வரதராஜ பெருமாள் கோவில் 4. சரநாராயண பெருமாள் கோவில் (தசாவதார பெருமாள்) 5. வேதநாராயணன் (பிரம்மன் கோவில்)

    • நாக தீர்த்தம் (நாகேஸ்வரன் கோவில் சிங்ககிணறு)
    • பாதாள கங்கை (சோமனாதன் கோவில் கிணறு)

    1. காசியபதீர்த்தம் (சோலையப்பன் தெரு கீழ்கோடி)

    2. கதா தீர்த்தம் (ஓடத்துரை)

    3. சக்கரதீர்த்தம் (வேதாரண்ணியத்திலிருந்து காசியாத்திரை போகும் வழியில் இங்குதங்கின ஓர் பிராம்மண சிரேஷ்டருடை தகப்பனாரின் எலும்பு இவ்விடத்தில் தாமரைப்பூவாக மாறிவிட்டது. ஆகையால் காசியை நோக்கிகொண்டு போகப்பட்ட அஸ்தி இங்குமீண்டும் கொண்டுவரப்பட்டது)

    4. ஈசான்ய தீர்த்தம்

    5. பிரும்ம தீர்த்தம் (அரசலாறு பிரும்மன் கோவில் துறை) தடாகங்கள்

    6. கன்னியா தீர்த்தம் (மகாமக தீர்த்தம்)

    7. ஹேமபுஷ்கரிணீ (பொற்றாமரை)

    8. கௌதம தீர்த்தம்

    9. இந்திர தீர்த்தம்

    10. வியாச தீர்த்தம்

    11.ஸோம தீர்த்தம்

    12. வராஹ தீர்த்தம்

    13. வருண தீர்த்தம்

    14. நாக தீர்த்தம் (நாகேஸ்வரன் கோவில் சிங்ககிணறு)

    15. பாதாள கங்கை (சோமனாதன் கோவில் கிணறு)

    ×