என் மலர்
நீங்கள் தேடியது "theni Collector inspects"
- தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தற்காலிக சோதனைச்சாவடியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவ ர்களின் எண்ணிக்கை, வருகைபதிவேடு, குடிநீர், கழிப்பிடம் உள்பட அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார்.
தேனி:
தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தற்காலிக சோதனைச்சாவடியில் பணியாளர்களின் எண்ணி க்கை, வருகைபதிவேடு, வாகனங்களுக்கான பதிவேடு, கணினி மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்டவற்றை கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் வாகனசோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. சபரிமலை அய்யப்பன்கோவிலுக்கு கடந்த சில வாரங்களாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் வாகனங்களும் அதிகரித்துள்ளது. இதனால் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட தேனி-குமுளி சாலையில் தற்காலிக வாகனசோதனைச்சாவடி கடந்த 1-ந்தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
தற்காலிக அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வாகனங்கள் சென்றுவருகின்றன. எனவே இப்பகுதியில் சாலைப்பணிகள் மேற்கொள்ளும்போது பக்தர்களின் வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து உத்தமபாளையம் அருகில் உள்ள கே.மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேலச்சிந்தலைச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிய ஆகிய பள்ளிகளில் எண்ணும்,எழுத்தும் திட்டத்தின் கீழ் 1 முதல் 3-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை , அவர்களுக்கு கல்வி போதிக்கும் முறை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவ ர்களின் எண்ணிக்கை, வருகைபதிவேடு, குடிநீர், கழிப்பிடம் உள்பட அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார். சத்துணவு மையத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் இருப்பு விபரங்களையும் கேட்டறிந்து சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு உணவு சமைக்க அறிவுறுத்தினார்.