search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni Nadar Saraswathi College"

    • தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாசங்கமி -2022 நுண்கலை விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • விழாவின்போது மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், வீர சாகசங்கள் நடைபெற்றது.

    தேனி:

    தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாசங்கமி -2022 நுண்கலை விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார்.

    உறவின்முறை துணைத்த லைவர் கணேஷ், பொது ச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசிபிரபு வரவேற்றார்.

    கல்லூரியின் இணை ச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னார்கள். கலாசங்கமி ஒருங்கிணைப்பாளர் செல்வப்பிரியா கலா சங்கமி -2022ன் ஆண்டறிக்கையை வாசித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை சாணக்யா நெட்வொர்க்ஸ் நிறுவனரும், நிர்வாக அதிகாரியுமான ரெங்கராஜ் பாண்டே கலந்து கொண்டு மாணவிகளுக்கு தன்ன ம்பிக்கை குறித்து எடுத்துரை த்தார். இந்நிகழ்ச்சியில் உறவின்முறை ஆட்சிமன்ற க்குழு உறுப்பினர்கள் தர்மராஜன், சேகர், ஜவஹர், ஜெயராம் மற்றும் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆத்திராஜன், லட்சுமி நாராயணன், பிரபு ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவி ன்போது மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், வீர சாகசங்கள் நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் சிறப்பு பெற்ற அணிக்கு உறவின்முறை பெரியோர்கள் வெற்றி கோப்பையை வழங்கினர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் கோமதி நன்றி கூறினார்.

    ×