search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni Nattathi Nadar Hospital"

    • தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சிறந்த சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பச்சிளம்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார்.

    தேனி:

    தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சிறந்த மருத்துவர்கள், உயர்தர தொழில்நுட்ப கருவிகளுடன் மாவட்டத்தின் சிறந்த சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. மருத்துவசேவையில் மேலும் சேவையாற்றும் வகையில் இந்த மருத்துவமனையில் புதிதாக 6 அதிநவீன சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி அதிநவீன பச்சிளம்குழந்தைகள் தீவிர அவசர சிகிச்சை பிரிவு, அதிநவீனபுற்றுநோய் தீவர சிகிச்சை அரங்கம், அதிநவீன சிறப்பு மகளிர் நல மருத்துவ சிகிச்சை அரங்கம், அதிநவீன மருத்துவ ஆய்வகம், அதிநவீன எண்ேடாஸ்கோப்பி பிரிவு, ஸ்கேன் பிரிவு ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. புதிய அரங்குகள் நேற்று திறக்கப்பட்டது. பா.ஜனதா மாநில மருத்துவரணி பார்வையாளர் டாக்டர் விஜயபாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    இந்திய மருத்துவகழக மாநில பொதுச்செயலாளர் டாக்டர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பச்சிளம்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார்.

    இதில் மாநில பொதுசெயலாளர் கோவிந்தராஜூலு, திண்டுக்கல் மண்டல தலைவர் கிருபாகரன், தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார், அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் ஜெயப்பிரகாஷ், உதயசங்கர், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×