என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Therotaam
நீங்கள் தேடியது "Therotaam"
- அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரம், சிறப்பு பணிவிடை நடந்தது.
- பக்தர்களுக்கு மோர், குளிர்பானம் வழங்கப்பட்டது.
களக்காடு அருகே நடு சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோவிலில் ஆனி மாத திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 8-ம் நாளில் பரிவேட்டை விழா நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 11-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரம், சிறப்பு பணிவிடை நடந்தது. பின்னர் அய்யா நாராயணசுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலைக்கு வந்தது. பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மோர், குளிர்பானம் வழங்கப்பட்டது.
×
X