search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thilaspet"

    திலாஸ்பேட்டையில் வேலைகொடுக்காத ஆத்திரத்தில் கட்டிட காண்டிராக்டரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டை வீமன்நகர் ஓடைத்தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (வயது33) கட்டிட காண்டிராக்டர். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த விக்கி உள்பட 3 பேர் கட்டிடத்துக்கு கம்பி கட்டும் வேலை கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் சகாதேவன் வேலை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் சகாதேவன் மீது அவர்கள் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை சகாதேவன் வீமன்நகர் மந்தைவெளி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது விக்கி உள்பட 3 பேரும் சேர்ந்து சகாதேவனை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாளாலும் வெட்டிவிட்டு தப்பி ஒடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சகாதேவன் சிகிச்சைக்காக  கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குபதிவு செய்து விக்கி உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
    ×