என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thirthawari"
- பல ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.
- கொடியிறக்கத்துடன் ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில் திருவிழா நிறைவடைந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோவில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம்
25-ந் தேதி தொடங்கியது. தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் பிரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளினர். கடந்த 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், 3-ந் தேதி தேரோட்டம் நடந்தது.
கனமழையால் சித்திரை திருவிழாவின் போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றது. தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் அஸ்திர தேவர் புறப்பாடாகி, கோவிலுக்கு எதிரே உள்ள வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
இதைத் தொடர்ந்து அஸ்திரத்தேவருக்கு வைகை நீரில் பல வகை அபி ஷேகங்கள் நடத்தி, தீபாராதனை காட்டப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.
தீர்த்தவாரி உற்சவம் வழக்கமாக கோவிலில் நடைபெறும் என்றாலும் பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து சாந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. கொடியிறக்கத்துடன் ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில் திருவிழா நிறைவடைந்தது.