என் மலர்
நீங்கள் தேடியது "Thiru Siluvai Nathar"
- 12-ந்தேதி திருச்சிலுவை பவனி நடைபெறுகிறது.
- 14-ந்தேதி கொடியிறக்கம், நன்றி திருப்பலி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான உடன்குடி அருகே மணப்பாடு திருச்சிலுவைநாதர் ஆலயத்தில் 443-வது மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலையில் மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் தலைமையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழாவில் பங்குத்தந்தைகள் மனோ, ஜான் சுரேஷ், டென்னிஸ் வாய்ஸ், சில்வஸ்டர், டிமெல், பாலன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9-ம் திருநாளான வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி, திருச்சிலுவை பவனி நடைபெறுகிறது. 10-ம் திருநாளான 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, இரவு 7 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெறும்.
விழாவின் சிகர நாளான 14-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு திவ்விய ஐந்து திருக்காய சபையினர் பவனி, ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடக்கிறது. மாலையில் கொடியிறக்கம், நன்றி திருப்பலி நடைபெறுகிறது.
வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) புனித வியாகுல அன்னை திருவிழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் லெரின் டிரோஸ், ஆரோக்கிய அமல்ராஜ் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.