என் மலர்
நீங்கள் தேடியது "Thirumangalam Metro Railway Station"
- பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது.
- பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது.
இப்பணிகளை மேற்கொள்வதற்காக திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 50 சதவீத வாகனநிறுத்தம் பகுதி வருகிற 20-ந்தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.
பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன பயன்பாட்டாளர்களுக்கு தற்காலிகமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது என கூறப்பட்டுள்ளது.