என் மலர்
நீங்கள் தேடியது "Thirumoorthy"
- பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
- கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக்கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
அதே போன்று அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. அணைகளுக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு வருகிறது. ஆங்காங்கே மண் திட்டுக்களாக தோற்றம் அளித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து உள்ளனர்.