என் மலர்
முகப்பு » thiruvallur candidate
நீங்கள் தேடியது "thiruvallur candidate"
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றக்கோரி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. #Congress
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றக்கோரி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜெயக்குமார் நிறுத்தப்பட்டு உள்ளார்.
இதற்கிடையே, சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று தொண்டர்கள் கூடினர்.
அவர்கள் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Congress
×
X