என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thiruvallur Collectorate"
- சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
- பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் 16 மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பூண்டி ஏரி பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் பிரபு சங்கர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்துரையாடி கேட்டறிந்தார். முன்னதாக அவர் பூண்டி ஏரியிலிருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை பார்வையிட்டார். மேலும் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் 16 மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நீர் வளத்துறை உதவி செயற் பொறியாளர் சத்ய நாராயணன், உதவி பொறியாளர் ரமேஷ் உடன் இருந்தனர்.