search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvarur Theppa Kulam"

    • நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.
    • 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

    300 டன் எடையுடன் அசைந்தாடி வரும் ஆழித்தேர்

    'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்' என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம்.

    'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

    அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு.

    இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம்.

    மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.

    தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும்.

    இதனால் இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர்.

    'ஆழி' என்பது சக்கரமாகும்.

    மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது.

    1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர்.

    பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது.

    இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது.

    1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.

    அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும்.

    விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.

    இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும்.

    இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன.

    திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர்.

    10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும்.

    நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.

    வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும்.

    இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகர்ந்து விடுகிறது.

    • ‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது.
    • தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர்

    இக்கோவிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.

    இக்கோவிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது.

    17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார்.

    அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம்.

    இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோவிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது.

    அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோவில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.

    'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?

    • மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் காணப்படுகிறது.
    • இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    திருவாரூர் கோவிலின் சிறப்புகள்

    இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத்திருக்கோவில் பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது.

    கண்டீசர் இருக்குமிடத்தில் எமன் இருப்பதும் நின்ற நிலையில் நந்தி அமைந்திருப்பதும் இக்கோவிலின் பிற சிறப்புகளாகும்.

    இக்கோவிலிலுள்ள தியாகராசருடைய 'அசபா நடனம்' இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது.

    மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது.

    சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே.

    பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோவில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது.

    தண்டபாணிக் கோவில், இராஜதுர்கை கோவில், மாணிக்க நாச்சியார் கோவில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை.

    • 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.
    • 63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    திருவாரூர் கோவில்-புலவர்களால் பாடப்பெற்ற தலம்

    திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர்.

    330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.

    இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது.

    அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார்,

    மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சமஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.

    63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    இக்கோவிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம், கல்தூண்களை மட்டுமே உடையது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர்.

    இம்மண்டபத்தை சேக்கிழார் பாடியுள்ளார்.

    இக்கோவிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர்

    • ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    தியாகராஜர் கோவில்-ஆலய திருப்பணிகள்

    முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

    முற்கால சோழர்கள் ஆட்சியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே வலிவு பெற்றிருக்கிறது.

    அருட்திரு தியாகராஜசாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் இராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோவிலின் கல்வெட்டு கூறுகிறது.

    இக்கோவிலின் ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்று திருபுவனம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

    இரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான்.

    இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கர்ப்ப கிரகத்தையும், வன்மீகநாதர் கருவறையையும் பொன் வேய்ந்தான் என்பதும்,

    திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும்,

    திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    • திருவாரூரையும் தியாகராசர் கோவிலும் பிரித்து வரலாறே எழுத முடியாது.
    • சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-மூலாதாரத்தலம்

    பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒரு பகுதியே திருவாரூர் வட்டமாகும்.

    கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

    கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும்.

    திருவாரூரையும் தியாகராசர் கோவிலும் பிரித்து வரலாறே எழுத முடியாது.

    காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம்.

    சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள்- காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).

    ஆறு சிவத்தலை விராட புருடனின் ஆறு ஆதாரங்கள் என்று போற்றுவது சைவமரபு. அம்முறையில் திருவாரூர் மூலாதாரத்தலம்.

    • புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர்.
    • நினைத்த காரியம் நிறைவேற தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த “முகுந்தார்ச்சனை” செய்யலாம்.

    தியாகராஜர் கோவில்-நேர்த்திக்கடன்கள்

    வீதிவிடங்க விநாயகருக்கு பின் உள்ள பிரம்ம நந்தியை மழை வேண்டி பிரார்த்தித்து, இவர் மீது நீர் நிரப்பினால் மழை கொட்டும்.

    பசுக்கள் கறவாது இருந்தால் இவருக்கு அருகு சாற்றி, அதனை பசுவுக்குக் கொடுத்தால் நன்றாகப் பால் கறக்கும்.

    கமலாம்பாளை வணங்கினால் ஞானம் கிட்டும்.

    ஊமைகள் கூட வியாழனுக்கு குருவாவார்கள்.

    புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர்.

    ஜூரம் நீங்க, ஆயுள் அதிகரிக்க இங்குள்ள ஜூர தேவரை மிளகுரசம் படைத்து வழிபடுகிறார்கள்.

    தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.

    நினைத்த காரியம் நிறைவேற தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த "முகுந்தார்ச்சனை" செய்யலாம்.

    முசுகுந்த சக்கரவர்த்தி தியாகராஜருக்கு செய்த "முசுகுந்தார்ச்சனை" செய்யலாம்.

    • இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும்.
    • நீலோத்பலாம்பாளை வழிபட்டு பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது.

    செல்வ செழிப்பை உண்டாக்கும் திருவாரூர் ஆலயம்!

    இத்தலத்தில் உள்ள பக்தர்கள் இராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள்.

    கடன் தொல்லை, உடற்பிணிகள் உள்ளவர்கள், இங்குள்ள ருண விமோசன ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு.

    இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும்.

    நீலோத்பலாம்பாளை வழிபட்டு, அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது.

    பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது.

    மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்பபு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது.

    மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும்.

    அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

    • இதனையடுத்து கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
    • இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கு பெற்று கமலாம்பாள் தரிசனம் செய்வர்.

    தியாகராஜர் கோவில்-ஆடிப்பூரம் 10 நாட்கள் திருவிழா

    தியாகராஜர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கமலாம்பாள் சன்னதியில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    கமலாம்பாள் சன்னதியில் வேத பண்டிதர்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை நடைபெறும்.

    இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்படும்.

    இதனையடுத்து கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    பின்னர் கமலாம்பாள் சுவாமி வீதி உலா வருவார்.

    இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கு பெற்று கமலாம்பாள் தரிசனம் செய்வர்.

    மாசி மக நாள் சுந்தரருக்கு பூதகணம் நெல் கட்டி செல்லும் விழா, சித்திரை விழா, ஆடிப்பூரம் விழா, தெப்பதிருவிழா, நிறைபணி விழா ஆகியவை இத்தலத்தின் சிறப்பான விழா நாட்கள் ஆகும் மாதாந்திர பிரதோஷம் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது.

    வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போது கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

    • அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த இலிங்கம் வைக்கப்படும்.
    • தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.

    365 லிங்கங்கள் கொண்ட பிரமாண்ட ஆலயம்!

    திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம்.

    இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும்.

    பெரும்பாலான கோவில்களின் சுற்றுப்பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும்.

    ஆனால், திருவாரூர் கோவிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோவில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.

    வீதிவிடங்க விநாயகர், அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்றது), கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், ரௌவுத்ர துர்க்கை, ருண விமோசனர், தெட்சிணாமூர்த்தி, ஆனந்தீஸ்வரர், சித்தீஸ்வரர், ஹயக்கிரீஸ்வரர்,

    தட்சணேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், ஓட்டு தியாகேசர், துளசிராஜா பூஜித்த கோவில், தெய்வேந்திரன் பூஜித்த இலிங்கம், சேரநாதர், பாண்டியநாதர்,

    ஆடகேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், புலஸ்திய பிரம்மேஸ்வரர், பக்தேஸ்வரர், வில்வாதீஸ்வரர் மற்றும் பாதாளேஸ்வரர் ஆகியோர் இந்த சன்னதிகளில் அருள் செய்கின்றனர்.

    கோவிலின் மேற்கு கோபுர நுழைவாயிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.

    இவரை வழிபட்டால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அம்மன் சன்னதியின் உள்பிரகார விநாயகர் சன்னதியில், ஐயப்பனும் அருள்பாலிக்கிறார்.

    மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி மேலைக்கோபுரத்தின் எதிரில் குளக்கரையில் உள்ளது.

    "செங்கழுநீர் ஓடை" எனப்படும் ஓரோடை கோவிலுக்கு அப்பால் 1 கி.மீ., தொலைவில் உள்ளது.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    தியாகராஜர் என்றால் "கடவுள்களுக்கெல்லாம் ராஜா" என்று பொருள்.

    தியாகராஜர் கோவிலும் கோவில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

    9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள்,

    365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.

    இக்கோவிலை பெரியகோவில் என்றும் சொல்வர்.

    கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

    தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.

    இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க இலிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.

    அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த இலிங்கம் வைக்கப்படும்.

    அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும்.

    மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.

    • இங்குள்ள தீர்த்தம் “கமலாலயம்” எனப்படுகிறது.
    • நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

    திருவாரூர் கோவில்-நாகநாதர் சன்னதி

    லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள்.

    எனவே இங்குள்ள தீர்த்தம் "கமலாலயம்" எனப்படுகிறது.

    பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம்.

    குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது.

    நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

    பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும்.

    ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.

    இதை "நித்திய பிரதோஷம்" என்பார்கள்.

    இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம்.

    எனவே, இந்தக் கோவிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.

    • இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார்.
    • இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவாரூர் கோவில்-நின்ற கோலத்தில் நந்தி

    சிவாலயங்களில், பொதுவாக நந்தி சிலைகளை படுத்த கோலத்திலேயே காண முடியும்.

    ஆனால், திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த விடங்கத்தலங்களில் மட்டும் நந்தியை நின்ற கோலத்தில் காணலாம்.

    மேலும், இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிழக்கு பார்த்து அமைந்த கோவில்களில், சுவாமி வீதி உலாவிற்கு கிழக்கு கோபுரம் வழியாகத்தான் வெளியே செல்வார்.

    ஆனால், இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார்.

    இந்திரனிடம் பெற்ற இலிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி இங்கு பிரதிஷ்டை செய்தார்.

    அதை முசுகுந்தனுக்கு கொடுத்த இந்திரன், மீண்டும் அதை தேவலோகம் கொண்டு சொல்ல விரும்பினான்.

    எனவே, தியாகராஜர் கிழக்கு வாசல் வழியாக உலா வரும் போது, அவரை மீண்டும் கொண்டு சென்று விடலாம் என நினைத்து, அங்கேயே அவன் காத்திருப்பதாக ஐதீகம்.

    இந்திரனிடமிருந்து தப்புவதற்காக, தியாகராஜரை பக்தர்கள் ஈசான்யத்தில் உள்ள விட்டவாசல் வழியாக உலா கொண்டு செல்கின்றனர்.

    பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்குள் நுழையக் கூட கிழக்கு வாசலை தவிர்த்து விட்டு, வடக்கு மற்றும் மேற்கு வாசல் வழியாகத்தான் கோவிலுக்கு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இத்தலம் தான் மிக அதிகமாக 353 பாடல்களைப் பெற்றுள்ளது.

    சம்பந்தர் 55 பாடல், அப்பர் 208 பாடல், சுந்தரர் 87 பாடல், மாணிக்கவாசகர் 3 பாடல்கள் பாடியுள்ளனர்.

    ×