என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "thiruvenkadu"
- ராசி : மிதுனம், கன்னி
- வஸ்திரம் : பச்சை நிற ஆடை
வழிபட உகந்த தினம்:புதன்கிழமை
ராசி :மிதுனம், கன்னி
திக்கு :வடகிழக்கு
அதிதேவதை :விஷ்ணு
பிரத்யதி தேவதை :நாராயணன்
நிறம் :வெளிர்பச்சை
வாகனம்:குதிரை
புதனுக்குப் விருப்பமானவை
மானியம்:பச்சைப் பயறு
மலர்:வெண்காந்தள்
வஸ்திரம்:பச்சைநிற ஆடை
ரத்தினம்:மரகதம்
நிவேதனம்:பாசிப்பருப்புப் பொடி அன்னம்
சமித்து:நாயுருவி
உலோகம்:பித்தளை
- அங்கு யார் சென்றாலும் பெண்ணாக மாறி விடுவார்கள்.
- அவள்மேல் மையல் கொண்டார் புதன்.
இளன் என்ற ராஜகுமாரன், காட்டில் வேட்டையாடச் செல்லும்போது, அங்கு சென்றதும் பெண்ணாக மாறி விட்டான்.
அங்கு யார் சென்றாலும் பெண்ணாக மாறி விடுவார்கள்.
அதுசமயம் புதன் அங்கு வந்தார். பெண்ணாக மாறிய இளன், 'இளை' என்ற பெயரில் அந்தக் காட்டில் உலவி வந்தான்.
அவள்மேல் மையல் கொண்டார் புதன்.
அந்த இளன் என்ற ராஜகுமாரன் பெண்ணாக மாறியது பார்வதி தேவியின் சாபமே.
புதன், இளையுடன் சேர்ந்து மகிழ்ந்து வாழ்ந்தார்.
பெண்ணாக மாறிய இளன் வெட்கமுற்று, ஆணாக மாறுவதற்கு அம்பாளை வேண்டித்தவம் இருந்தான்.
ஒரு மாதம் ஆணாகவும், ஒரு மாதம் பெண்ணாகவும் இருக்க அம்பாள் அருள்புரிந்தாள்.
புதனுக்கும் இளனுக்கும் 'புரூரவா' என்ற குழந்தை பிறந்தது.
இரட்டை வாழ்வு வாழும் இளையின் நிலை மாற முனிவர்களை அழைத்து யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தார் புதன்.
யாகத் தீயில் சிவபெருமான் தோன்றினார்.
இளையின் வேண்டுகோளின்படி நிரந்தரமாகவே ஆணாக விளங்கும்படி அருள் புரிந்தார்.
பிறகு இளனாகவே மாறித் தன் நாட்டுக்குச் சென்றான் அந்த ராஜகுமாரன்.
சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர் புதன். சகலகலா வல்லவர்.
மகாஞானி. சுபகிரகர். புலவர்களையும், சிவனடியார்களையும் காத்து அருள்பவர்.
தன்னை வழிபடுகிறவர்களுக்கு மிகுதியான அறிவைக் கொடுப்பவர்.
வாக்கு சாதுர்யம் அளிப்பவர். தீய கிரகங்களால் உண்டாகும் பீடைகளை நீக்கும் சக்தி கொண்டவர்.
புதன் இளம் பச்சை நிறம் உடையவர்.
சாத்வீக குணம் கொண்டவர்.
சுகபோஜனம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத் தொழில், வாத நோய், அலி முதலியவற்றிற்கு புதனே காரகன்.
புதன், வித்யாகாரகர், மாதுலகாரகன், ஸெளம்யன் எனவும் அழைக்கப்படுகிறார்.
புதன் அத்திரிகோத்திரம், மகதநாட்டினர்.
கத்தி, கேடயம் வரதக்கரங்கள் கொண்டவர். மஞ்சள் ஆடை, மரகதமணி மாலை பூண்டவர்.
நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில், மஞ்சள் நிறக் கொடியின் கீழ் அமர்ந்து மேருவை வலம் வருபவர்.
திருமாலை வழிபட்டால் இவருக்கு விருப்பமாகும்.
சூரியனுக்கு வடகிழக்கில் பாண வடிவான மண்டலத்தில் தங்கப் பிரதிமையாக வடக்கு முகமாக வீற்றிருப்பவர்.
சூரியனிடம் பிரகாசத்தை இழுத்து, செடி கொடிகளைப் பச்சை நிறமாக்கும் தன்மை உடையவர்.
பச்சை பதார்த்தங்களிடம் பிரியம் உள்ளவர். பச்சைப் பயறு தானமாகக் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்.
- இத்தலத்தின் மூன்றாவது சிறந்தமூர்த்தி அகோரமூர்த்தி.
- அந்தப் பெருங்கோபம் ஒரு வடிவம் பெற்று சிவபெருமான் முன் தோன்றியது.
இத்தலத்தின் மூன்றாவது சிறந்தமூர்த்தி அகோரமூர்த்தி.
அப்படிப் பெயர் வந்ததற்குக் காரணம் இதுதான்.
மருத்துவன் என்னும் அசுரன், தேவர்களை வெறுத்தான்.
அவர்களைக் கொடுமைப்படுத்தித் துன்புறுத்தினான்.
தேவர்கள் அவ்வசுரனுக்குப் பயந்து, இறைவன் ஆணைப்படி திருவெண்காட்டில்
தவசிகள் வேடம் தாங்கி மறைந்து வாழ்ந்து வந்தனர்.
இதை அறிந்துகொண்ட அசுரன் அவர்களைத் தேடி வந்து போர் தொடுத்தான்.
அப்போது அவனோடு போர் செய்யும்படி ரிஷபதேவரை ஏவினார் இறைவன் சுவேதாரண்யேசர்.
போரில் மருத்துவன் தோற்று ஓடி மறைந்தான்.
பிறகு அவன் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து ஒரு சூலாயுதம் பெற்றான்.
இந்தத் தலத்திற்கு வந்து அந்தச் சூலாயுதத்தின் உதவியால் ரிஷப தேவரை எதிர்த்துப் போரிட்டு
அவருடைய கொம்புகளை முறித்தான். அவருடைய காதுகளை அறுத்தான்.
அவர் ஓடோடிச் சென்று சுவேதாரண்யப் பெருமானிடம் முறையிட்டார்.
பெருமானுக்குக் கோபம் மூண்டது.
அந்தப் பெருங்கோபம் ஒரு வடிவம் பெற்று சிவபெருமான் முன் தோன்றியது.
அவர் மருத்துவாசுரனைச் சம்கரித்து வருமாறு அந்த வடிவத்தை ஏவினார்.
அந்தக் பெருங்கோபம் தீ நாக்கு போல் சிவந்த கூந்தலுடன் அனல் கக்கும் நெற்றிக் கண்கொண்ட கோர வடிவமாகத் தோன்றியது.
பிரகாசமான ஆபரணங்களும், கண்ட மாலையும், உடுக்கை, மணி, வாள், சூலம், மண்டையோடு, குறுந்தடி முதலியவற்றைக் கைகளில் தாங்கி அகோர வடிவமாகி, அசுரனை எதிர்க்கச் சென்றது.
அசுரன் பயந்து நடுங்கி ஒளி உருவாகி அகோரமூர்த்தி வடிவத்துடன் ஐக்கியமாகி விட்டான்.
அன்று முதல் தேவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அகோரமூர்த்தி, கோவிலின் நடனசபையின் வடமேற்குப் பகுதியில் எழுந்தருளி இருக்கிறார்.
ஞாயிறு தோறும் இம்மூர்த்திக்கு இரண்டாம் காலத்தில் அபிஷேக ஆராதனை 'அகோரபூஜை'யாக நடைபெறுகிறது.
இத்தலத்து இறைவனை ஐராவதம் என்னும் வெள்ளையானை பூசித்துப் பேறு பெற்றது.
இத்தலத்திற்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்கள் உள்ளன.
- திருவெண்காடு ஆலயம் சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது.
- வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் வசதிகளுடன் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதி இருக்கிறது.
திருவெண்காடு ஆலயம் சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது.
வெளியூர்களில் திருவெண்காடுக்கு செல்ல விரும்புபவர்கள் சீர்காழியை சென்றடைய
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பஸ், ரெயில் வசதிகள் உள்ளன.
சீர்காழியில் பக்தர்கள் தங்கி செல்வதற்கு உரிய லாட்ஜ் வசதிகள் உள்ளன.
அங்கு தங்குவதற்கு விருப்பம் இல்லாதவர்கள் அருகில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம்.
வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் வசதிகளுடன் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதி இருக்கிறது.
அங்கு அறைகள் கிடைக்காதபட்சத்தில் மயிலாடுதுறைக்கு செல்லலாம்.
மயிலாடுதுறையில் நிறைய லாட்ஜ் வசதிகள் இருக்கின்றன.
உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப அங்கு தங்கும் விடுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
மயிலாடுதுறையில் தங்குவதில் மற்றொரு பலனும் இருக்கிறது.
அங்கிருந்து திருவெண்காடு தலத்துக்கு மட்டுமல்ல மற்ற பாடல் பெற்ற தலங்களுக்கும் மிக எளிதாக சென்று வரலாம்.
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் நகர்ப்பேருந்து எண்கள் 5, 5பி, 5சி.
சீர்காழியிலிருந்து பொறையாறு செல்லும் ஒரு பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது.
மயிலாடுதுறையிலிருந்து நாங்கூர் செல்லும் பேருந்து எண். 28, மங்கைமடம் செல்லும் பேருந்து எண்.12, பெருந்தோட்டம் செல்லும் பேருந்து எண்.34 (ஆனந்த்) ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் திருவெண்காட்டின் வழியாகச் செல்கின்றன.
நாகையிலிருந்து வருவோர் கருவி முக்கூட்டில் இறங்கி திருவெண்காட்டிற்கு வரும் பேருந்தில் வரவேண்டும்.
பூம்புகார் மேலையூரில் இறங்குவோர் திருவெண்காடு வழியாகச் செல்லும் பேருந்துகளில் வரலாம்.
சென்னையில் இருந்து செல்ல விரும்புபவர்கள் சீர்காழி சென்றடைய ஏராளமான அரசுப் பேருந்துகள் உள்ளது.
சீர்காழியில் இறங்கி அங்கிருந்து வாடகை கார் பிடித்து சென்று வரலாம்.
சென்னையில் இருந்து காரில் செல்லும் வசதி உடையவர்கள் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் கடந்து சீர்காழியை அடையலாம்.
காரில் செல்பவர்கள் சீர்காழி நகருக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது.
நாகை காரைக்கால் பைபாஸ் சாலையில் சென்று திருவெண்காடுக்கு எளிதில் செல்லலாம்.
பஸ்சில் செல்பவர்கள் திட்டமிட்டு பயணத்தை அமைத்து கொள்ள வேண்டும்.
சென்னையில் இருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டால் 11 மணிக்கெல்லாம் சென்று சேர்ந்து விடலாம்.
மதியம் 1 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
அதற்குள் வழிபாடுகளை முடித்து விட்டு, மதியம் ஆலயத்தில் சற்று ஓய்வு எடுத்து விட்டு பிற்பகலில் புறப்பட்டால் இரவில் சென்னை வந்து சேர்ந்து விடலாம்.
ஆனால் பயணத்துக்கான திட்டமிடல் சரியாக இருத்தல் வேண்டும்.
- இதில் திருவெண்காடு தலம் காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.
- இத்திருத்தலம் நாகை மாவட்டத்தில், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது.
உலகத்திலுள்ள உயிர்கள் தம்மை வழிபட்டு உய்யும் பொருட்டு இறைவன் திருமேனி தாங்கித் திருக்கோவில் கொண்டு
எழுந்தருளி இருக்கும் திருத்தலங்கள் பல உள்ளன.
அவற்றுள் திருப்பதிகம் பெற்றவை மிகச் சிறந்தவை.
அவைகளைப் பாடல் பெற்ற பதிகள் என சொல்வார்கள்.
சோழ நாடு, ஈழ நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கொங்கு நாடு, நடு நாடு, தொண்டை நாடு,
துளுவ நாடு, வடநாடு என நாட்டு வகையாக அத்தலங்களை நம் முன்னோர்கள் பிரித்திருக்கின்றனர்.
அதிலும் சோழ நாட்டை இரு பகுதிகளாக வகுத்துள்ளனர்.
அவை காவிரியாற்றுக்கு வடகரையில் 63, தென்கரையில் 127 திகழும் தலங்களாகும்.
இதில் திருவெண்காடு தலம் காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.
இத்திருத்தலம் நாகை மாவட்டத்தில், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது.
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
திருவெண்காட்டிற்கு தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் காவிரியாறும், வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் மணிகர்ணிகை என்னும் மண்ணியாறும் ஓடுகின்றன.
திருச்சாய்காடு (சாயாவனம்), காவிரி பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம், திருவலம்புரம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி, திருக்கலிக்காமூர் முதலிய தலங்கள் திருவெண்காட்டை சூழ்ந்துள்ளன.
திருநாங்கூர், திருவாலி, திருநகரி என்ற வைணவப் பதிகளும் இதன் அருகே இருக்கின்றன.
- திருவெண்காடு, காவிரி வடகரைத் தலங்களில் பதினொன்றாவதாக உள்ளது.
- இதற்கு ஆதி சிதம்பரம் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
திருவெண்காடு, காவிரி வடகரைத் தலங்களில் பதினொன்றாவதாக உள்ளது.
இதற்கு ஆதி சிதம்பரம் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
இறைவன் திருவெண்காட்டீசர் சுவேதாரண்யேசர். இறைவி வேயன்ன தோளி நாச்சியார் பிரம வித்யா நாயகி.
இறைவன் மூன்று திருநாமங்களில் இங்கே அருள் வழங்குகிறார்.
சுவேதாரண்யேசர், நடராஜர், அகோரமூர்த்தி.
இத்தலத்தில் தீர்த்தங்கள் மூன்று சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்.
இத்தீர்த்தங்களில் நீராடி வழிபட்டால் பிள்ளைப் பேற்றை அடையலாம். தீவினைகள் தீர்ந்து விடும்.
பிர்ம வித்யாம்பிகை, மேற்கு நோக்கிய துர்க்கை, சுவேத மாகாளி ஆகிய மூன்று சக்திகள் கொண்டது இத்தலம்.
இத்தலத்தின் தல விருட்சங்கள் மூன்று வில்வமரம், வடவால மரம், கொன்றை மரம்.
சிதம்பரத்தில் இருப்பதைப் போலவே இங்கே நடராஜர் பெருமையுடன் விளங்குகிறார்.
அங்கே நடைபெறுவது போலவே இப்பெருமானுக்கும் ஆறு அபிஷேகங்களும், ஆனித் திருமஞ்சனம்,
மார்கழித் திருவிழா முதலியவையும் நடைபெறுகின்றன.
இத்தலத்தின் விநாயகர் பெரிய பிள்ளையார்.
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தாலும், தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் ஐந்து வந்தாலும், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும், திருவெண்காடு வந்து, புதன்கிழமை, புதன் ஓரையில் புதன் பகவானை வழிபட்டுப் பரிகார பூஜை செய்தால் கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் எல்லாம் உண்டாகும்.
நரம்புத் தளர்ச்சி உடையவர்களும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் அவசியம் தரிசித்துப் போக வேண்டிய தலம் இது. மனநோய், சோகை, புற்றுநோய், வாதநோய், நரம்புத் தளர்ச்சி, வெண்குட்டம், ஆண்மைக்குறைவு, சீதள நோய் ஆகிய நோய்களுக்கு புதனே காரணமாக இருப்பதால் மேற்கண்ட நோயால் பாதிக்கப்பட்டவர் அவசியம் திருவெண்காடு வந்து, புதன் பகவானுக்கு பரிகார பூஜை செய்து ஆக வேண்டும்.
ஆடல் வல்லானின் அழகிய திருமேனி உணர்த்தும் தத்துவங்கள் பல. இவர் காலில் 14 உலகங்களை குறிக்கும் 14 சதங்கைகளுடைய காப்பு அமைந்துள்ளது. பிரணவம் முதல் இறுதியாகவுள்ள 81 பதமந்திரங்களை உணர்த்தும் 81 சங்கிலி வளையங்கள் அமைந்த அரைஞாண் இடுப்பில் திகழ்கின்றது.
முடிந்துவிட்ட 28 யுகங்களை குறிக்கும் 28 எலும்பு மணிகள் கோத்து கட்டிய ஆரத்தையும் இவர் அணிந்துள்ளார். தலையில் மயில்பீலியும் மீன்வடிவில் கங்கையும், இளம்பிறையும் ஊமத்தம்பூவும், வெள்ளேருக்கும் சூடியுள்ளார்.
சோடச கலைகளை உணர்த்தும் 16 சடைகளும் நடராசரிடம் இருப்பதை காணலாம். 15 சடைகள் தொடங்குகின்றன ஒன்று கட்டியுள்ளது. தோளில் ஒரு சிறு துண்டும், இடையில் புலித்தோல் அணிந்தும், இருகைகளில் உடுக்கை தீப்பிழம்பும் ஏந்தியுள்ளார். காலின் கீழ் முயலகனுடன் காட்சியளிக்கின்றார்.
இந்த தனி சன்னதி சற்று இருட்டாகத்தான் உள்ளது. பக்தர்கள் நடராஜ பெருமானை உற்று நன்கு பார்த்தால் மேற்கண்ட அணிகலன்களை கண்டு ரசிக்கலாம்.
2. புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.
3. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன.
4. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
5. திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்.
6. திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.
7. சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.
8. திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.
9. திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லிசூனியம், திருஷ்டிகள் விலகும். கோர்ட்டு வழக்கு களில் வெற்றி கிடைக்கும்.
10. அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டு மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.
11. இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும் அதை பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
12. திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியை பெறலாம்.
13. திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
14. இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்.
15. இத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள்.
16. காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.
17. இத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்ட பத்தில் தர வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
18. நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.
19. திருவெண்காடு தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் நல்ல பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது.
20. சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கிறது. எனவே பூஜை நேரத்தை கணக்கிட்டு சுற்றுப்பயணத்தை அமைப்பது நல்லது.
இப்பெரிய கோயிலின் மேலை பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியாக தன் அருள் மாட்சியைத் துலங்க வைத்துக் கொண்டிருக்கிறார் அகோர சிவம்.
இவரை அடுத்துள்ள சன்னதியில் இப்பெருமானது உற்சவ படிமத்தைக் காணலாம். பக்தர்களைக் காக்க இதோ புறப்பட்டு விட்டேன்! என்று கூறுவார் போன்றும் - அருள் சிறக்க ஓடி வருவார் போன்றும் அமைந்துள்ளது. பெருமானின் முன்காலும், இடது காலும், உருவத்தில் கொஞ்சம் கடுமை காட்டுகிறார் தான் என்றாலும், அருட்கண்ணோட்டத்தில் இவரே சிறந்த வரப்பிரசாதி.
அகோர மூர்த்தியின் திருவுருவைக் காணக்கண்கோடி வேண்டும். இவர் கரிய திருமேனி உடையவர். இவர் இடது காலை முன்வைத்து வலது கால் காட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார்.
எட்டுக்கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலம் பூண்டுள்ளார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார்.
சிவந்த ஆடைகளை அணிந்தும், தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன் நெற்றிக்கண் நெருப்பைக்கக்க கோரைப்பற்களுடன், பதினான்கு நாகங்கள் திருமேனியில் பூண்டு மணிமாலை அணி செய்யக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அப்பர் சுவாமிகள் இத்தலத்தைப் பற்றிப் பாடிய “தூண்டு சுடர் மேனி” எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் அகோரமூர்த்தியின் திருவுருவத்தில் காணலாம்.
இருபத்தெட்டு ஆகமங்களில் உத்தர காரண ஆகமத்தில் இவரை அகோராஸ்திர மூர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தட்ச யாகத்தை அழிக்க சிவபெருமானால் நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட அகோர வீரபத்திரர் வேறு. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அகோரமூர்த்தி வேறு ஆவார். இரு அம்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை வாசகர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
அகோரமூர்த்தி எப்படி உருவானார் என்ற வரலாறு வருமாறு:-
மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால் தேவர்களுக்கு பல துன்பம் விளைத்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். அசுரன் வெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப்பின் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினார்.
இதுபற்றி நந்தி, திருவெண் காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங் களில் ஒன்றாகிய அகோர முகத்தினின்று அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்டமாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்து தோத்திரம் செய்தான். சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடி யில் காணலாம். காயம் பட்ட இடபதேவரை சுவே தாரண்யே சுவரர் ஆட்கொண்டார். இன் றும் இக்கோவிலின் நிருத்த மண்டபத்தில் சிலை வடிவில் இதை காணலாம்.
மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் அகோரபூஜை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் மிக விசேஷமாக பூஜை நடைபெறுகின்றது.
அகோர சிவமாம் அண்ணலின் சன்னதிக்கு எதிரே அமைந்த சன்னதி ஒன்றில் சுவேதமகாகாளி அழகெல்லாம் திரண்டு வீரக்கோலத்தில் அருட்பொலிவோடு ஐயனுக்கு ஏற்ற அம்மையாக வீற்றிருப்பதையும் காணலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்