என் மலர்
நீங்கள் தேடியது "Thootukudi constituency"
பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தமிழ் பேரரசு கட்சி சார்பில் டைரக்டர் கவுதமன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். #LokSabhaElections2019
தூத்துக்குடி:
பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட போவதாக டைரக்டர் கவுதமன் அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி பகுதியில் ஏற்கனவே தி.மு.க. சார்பில் கனிமொழியும், பா.ஜனதா சார்பில் தமிழிசையும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் டைரக்டர் கவுதமனும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அவரது கட்சியான தமிழ் பேரரசு கட்சி சார்பில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டைரக்டர் கவுதமன் ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் என பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் பூட்டு போட்டு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இதன் பிறகு அவர் தமிழ் பேரரசு என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். ஏற்கனவே ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019