என் மலர்
நீங்கள் தேடியது "threat wife"
தாலி கட்டிய மனைவியை ஆபாசமாக படம் எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு கணவர் மிரட்டிய சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலத்தை சேர்ந்தவர் அரசு பெண் டாக்டர். 42 வயதான இவர் தற்போது கோவையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த சென்னையில் பணிபுரியும் அரசு டாக்டர் ஒருவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் பெண் டாக்டர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், எனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு விவகாரத்து கேட்டு என்னிடம் வற்புறுத்தி வந்தார்.
தற்போது சேலத்தை சேர்ந்த ஒரு வக்கீலுடன் சேர்ந்து கொண்டு அவருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்து அந்த செல்போனில் புதிய ஆப்பை இன்ஸ்டால் செய்து எனக்கு தெரியாமல் என்னை ஆபாச படம் எடுத்துள்ளார்.
மேலும் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், சேலத்தில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த படங்களை பேஸ்புக், வாட்-அப்களில் வெளியிடுவதாகவும் மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நான் விவாகரத்து கொடுத்ததுடன், எனது பெயரில் இருந்த வீட்டையும் எழுதி கொடுத்து விட்டேன். தற்போது ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்கவும், அதனை என்னிடம் ஒப்படைக்கவும் ரூ.10 லட்சம் கேட்பதுடன் அதனை ஏற்காட்டிற்கு கொண்டு வந்து தர வேண்டும் என்றும் மிரட்டி வருகிறார்கள்.
மேலும் நாங்கள் சொன்னப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் எனது கணவரும், அந்த வக்கீலும் மிரட்டி வருகிறார்கள். இதனால் அவர்கள் மீது விசாரித்து நடவடடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறி இருந்தார்.
இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பெண் டாக்டரின் கணவரான அரசு டாக்டர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த வக்கீல் மீதும் 4 பிரிவிகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள்.
அரசு பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரான அரசு டாக்டர் மற்றும் வக்கீல் மீதும் 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.