என் மலர்
நீங்கள் தேடியது "Tikal Yadav"
- மறைந்த டிகல் யாதவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
- டிகல் யாதவ் இளமை பருவத்தில் மல்யுத்த வீரராக திகழ்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் தந்தை டிகல் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.
இளமை பருவத்தில் மல்யுத்த வீரராக திகழ்ந்த டிகல் யாதவ் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் இருந்தார்.
வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார். இவருடைய திடீர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
மறைந்த டிகல் யாதவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கமலேஷ், கிரிக்கெட் வீரர் உமேஷ், ரமேஷ் மற்றும் ஒரு மகள். டிகல் யாதவின் இறுதிச்சடங்கு நாக்பூரில் உள்ள கோலார் ஆற்றங்கரையில் நடைபெற்றது.