என் மலர்
நீங்கள் தேடியது "Tim Seifert"
- பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது
- அப்ரிடி முதல் ஓவரை டிம் சீஃபர்ட் வைத்து மெய்டனாக வீசினார்.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி தனது 2-வது ஓவரையும் அணியின் 3-வது ஓவரையும் வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் 4 சிக்சர்களை பறக்க விட்டார். மொத்தமாக அந்த ஓவரில் 26 ரன்கள் எடுக்கப்பட்டது.
முதல் ஓவரை டிம் சீஃபர்ட்டை வைத்து தான் அப்ரிடி மெய்டன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.