என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tips"

    • சாப்பிட்ட பிறகு கற்கண்டை உண்டால் ஒவ்வாமை நீங்கும்.
    • கீரை சமைக்கும்போது சர்க்கரையை தூவினால் நிறம் மாறாமல் இருக்கும்.

    * மட்டன் பிரியாணி செய்யும்போது ஆட்டிறைச்சி துண்டுகளை சிறிது எலுமிச்சை சாறு கலந்து தயிரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்பு பிரியாணி செய்தால் வாடை இருந்தாலும் நீங்கி விடும். மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * சாப்பிட்ட பின்பு வெள்ளை கற்கண்டை உட்கொண்டு வந்தால் ஒவ்வாமை நீங்கும். எளிதில் ஜீரணமாகும்.

    * உளுந்த வடைக்கு உளுந்தம் பருப்பு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் சிறிது பச்சரிசி மாவை தூவினால் போதும். கெட்டித்தன்மையாகிவிடும்.

    * கீரை சமைக்கும்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரையை தூவினால் நிறம் மாறாமல் சூடாக, சுவையாக மென்மையாக இருக்கும்.

    * மலச்சிக்கல் பிரச்சினையை அதிகம் சந்திப்பவர்கள் அடிக்கடி உணவில் பப்பாளிக்காய் கூட்டு அல்லது பப்பாளிப்பழம் சாப்பிட்டு வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

    * மோர்க்குழம்பு மீந்துவிட்டால் பருப்பு வடைகளை துண்டுகளாக வெட்டிப்போட்டு பரிமாறலாம்.

    * தேங்காய் சட்னி மீந்து போனால் வீணாக்க வேண்டாம். அதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு, கடலை மாவு சேர்த்து பிசைந்து சப்பாத்திசுடலாம். மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையில் அதிகமாக கரி படிவதை தடுக்க ஆங்காங்கே பேப்பர்களை தொங்க விடலாம்.

    * கை கழுவும் இடம் அல்லது பாத்திரங்களை தேய்க்கும் இடமான 'சிங்க்'கில் வாரம் ஒரு முறை உப்பு கலந்த வெந்நீரை ஊற்றி கழுவினால் துர்நாற்றம் நீங்கிவிடும்.

    * குழம்பு மீன், வறுத்த மீன் அதிகம் விரும்பி சாப்பிட்டால் அதனுடன் தயிர் சேர்த்துக்கொள்ளக்கூடாது. சீக்கிரம் செரிமானமாக நாட்டுச்சர்க்கரை அல்லது பழம் உட்கொள்ளலாம்.

    * கறிவேப்பிலை துவையல், புதினா ரசம் அல்லது துவையல், வல்லாரை கீரை துவையல் அல்லது ரசம் வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும். ரத்தம் சுத்தமாகும்.

    • சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    • மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * சாமி அறை போல் சமையல் அறையும் தூய்மையாக இருந்தால் தான் ஈ, எறும்பு, புழு, பூச்சிகள் வராது. வெங்காயம், பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டால் அந்த வாசத்திற்கே பூச்சிகள் வராது. மேலும் சமையல் முடிந்ததும் சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    * அரிசி பாத்திரத்தில் வேப்பிலை போட்டு வைத்தால் வண்டு வராது. பருப்பு டப்பாக்களில் பூண்டின் நடுக்காம்புடன் உப்பை சேர்த்து துணியால் முடிச்சு போட்டு வைத்தால் பருப்பின் சுவையும் குறையாது, வண்டும் வராது.

    * காளான் மற்றும் கத்தரிக்காயை பிளாஸ்டிக்கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கக்கூடாது.

    * ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை ஒரே டப்பாவில் மூடி வைக்கலாம்.


    * உலர் திராட்சை, பேரீச்சையை வைக்கும் டப்பாக்களில் ஓரிரு கிராம்புகளை போட்டு வைத்தால் கெடாமலிருக்கும்.

    * மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * அரைத்த மிளகாய் தூள் வைத்திருக்கும் டப்பாவின் மையப்பகுதியில் இரண்டு மிளகாய் வற்றல் போட்டு வைக்க தூளின் நிறம் மற்றும் தரம் மாறாது. பெருங்காயத்தையும் போடலாம்.

    * முருங்கைக்காயை அப்படியே பேப்பரில் சுருட்டி வைத்தால் ஒருவாரம் கெடாது. இதேபோல வாழை இலையை வைத்தால் காய்ந்தோ பழுத்தோ போகாது.

    * ஆப்பிளை நறுக்கி சர்க்கரை தண்ணீரில் போட்டு எடுத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டப்பாவில் கொடுத்து அனுப்பினால் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும்.

    * அத்தி, கிஸ்மிஸ் பழம் போன்றவற்றை பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அக்ரூட் பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் எளிதாக உடைக்கலாம்.

    * முருங்கை பிஞ்சை ரசத்தில் போட்டால் ரசம் ருசியாக இருக்கும். மோரில் சுக்கு பொடித்து சேர்க்க சுவை கூடும். கடலை மாவு மற்றும் பார்லி மாவை பாதி பாதி சேர்த்து பக்கோடா செய்தால் ருசி அமோகமாக இருக்கும்

    * அப்பளம், வடகம், வற்றலில் (காய்ந்த) வற மிளகாயை போட்டு வைக்க வண்டு, பூச்சிகள் வராது.


    * டீ தூள் டப்பாவில் ஆரஞ்சு பழத்தோலை போட்டு வைத்தால் டீ தூளில் ஆரஞ்சு வாசம் வரும். டீயும் ருசியாக இருக்கும்.

    * பச்சைநிற காய்கறிகளை சமைக்கும் போது தாளிக்கும் எண்ணெய்யில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வதக்க காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும்.

    * முறுக்கு மாவில் சிறிது நெய் சேர்த்து பிசைந்து முறுக்கு சுட, மொறுமொறுப்பாக நெய் வாசத்துடன் இருக்கும்.

    * நூடுல்ஸ் மீதமானால் அதனுடன் பச்சை காய்கறிகளை நறுக்கிப் போட்டு தயிர் சேர்த்து சாலட் செய்ய சூப்பராக இருக்கும்.

    • முதலில் நாம் ரோஸ் செடியில் (rose plant) பூக்கள் பறிக்கிறோம் என்றால் காம்புடன் மட்டும் பறிக்க கூடாது.
    • நாம் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அவற்றின் தோலை தூக்கி எரிந்து விடுவோம்.

    பூக்கள் என்றாலே பெண்களுக்கு அவ்வளவு பிடிக்கும். ரோஜா என்றாலே சொல்லவா வேண்டும். அதுவும் நமது வீட்டில் வளர்ந்தால் எப்படி இருக்கும். நம்மில் பலருக்கு தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ அதிகமா ரோஸ் செடி வைத்து வளர்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். ஆனா நாம எவ்வளவுதான் ரோஸ் செடி வைத்து வளர்த்தாலும், சீக்கிரமாக இறந்து விடும். இல்லை என்றால் பூக்களே பூக்காது.

    அதற்காகவே ரோஸ் செடி வாங்கி வளர்ப்பதற்கு தயங்குவோம். இனி இந்த தயக்கம் வேண்டாம். இந்த பகுதியில் குறிப்பிட்டுள்ள சில டிப்ஸை உங்கள் ரோஸ் செடிக்கு (rose plant) செய்து வளர்த்து பாருங்கள். ரோஸ் செடி நன்றாக வளரும் மற்றும் செடியில் அதிகளவு பூக்களும் பூக்கும்.


    முதலில் நாம் ரோஸ் செடியில் (rose plant) பூக்கள் பறிக்கிறோம் என்றால் காம்புடன் மட்டும் பறிக்க கூடாது. அதனுடன் இரண்டு இலைகளை சேர்த்து பறிக்க வேண்டும். அப்போது தான் ரோஸ் செடியில் அடுத்த துளிர்கள் விட்டு நன்கு வளர ஆரம்பிக்கும்.

    ரோஸ் செடியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த ஒரு செடியாக இருந்தாலும் சரி செடிகளை வாங்கும்போது அதிகமாக துளிர்களை உள்ள செடிகளை மட்டும் தேர்வு செய்து வாங்கவும்.

    மேலும் ரோஸ் செடி வாங்கும் போது ஐந்து இலைகள் உள்ள செடிகளை தேர்வு செய்து வாங்கினால் ரோஸ் செடி நன்றாக வளரும்.

    ரோஸ் செடிக்கு இயற்கை உரமாக வாரத்தில் ஒரு முறையாவது சமையலறை கழிவுகளான டீ தூள், காபி தூள், வெங்காய தோல், பூண்டு தோல், முட்டை ஓடு மற்றும் மக்கக்கூடிய காகிதங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மற்றும் சிறுதளவு மணல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பிளாஸ்ட்டிக் பேனரில் வைத்து மூடி வைக்கவும்.


    ஒரு வாரம் வரை தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு குச்சியால் கிளறி விடவும். ஒரு வாரம் கழித்து, இந்த கலவையை ரோஸ் செடிக்கு உரமாக இட்டு வந்தால் ரோஸ் செடி செழிப்பாக வளரும்.

    ரோஸ் செடிக்கு வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றாமல் மண், ஊட்ட சத்துக்காக நம் வீட்டில் இருக்கும் பழைய சாதத்தின் நீரை மட்டும் வடிகட்டி தண்ணீராக ஊற்றலாம். இவ்வாறு ஊற்றுவதால் செடி நன்றாக வளரும்.

    நாம் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அவற்றின் தோலை தூக்கி எரிந்து விடுவோம்.

    இனி அவ்வாறு தூக்கி எரிய வேண்டாம். வாழைப்பழ தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை ரோஸ் செடிக்கு ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.

    ரோஸ் செடிகளுக்கு உரம் வைக்கப்போகிறோம் என்றால் அன்று முழுவதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற கூடாது.

    அதே போல் செடிகளுக்கு உரம் வைக்கும் போது மாலை நேரத்தில் வைத்தால் அதிக பலன் கிடைக்கும்.

    ரோஸ் செடிக்கு (rose plant) வாரம் ஒரு முறையாவது இயற்கை டானிக் ஊற்றுவதால் செடி நன்றாக வளரும் அதுமட்டும் இன்றி பூக்களும் அதிகளவு பூக்கும்.


    இரண்டு கிலோ கடலைப்பிண்ணாக்கு வாங்கி கொள்ளவும் மற்றும் ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் பேனரை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    இந்த பேனரில் கடலை பிண்ணாக்கை கொட்டவும். பின்பு 10 லீட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

    பின்பு அந்த பேனரை காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடி வைக்கவும். (காற்று உள்ளே சென்று விட்டால் அவற்றில் புழுக்கள் வைத்து விடும் எனவே காற்று புகாத அளவிற்கு பேனரை நன்றாக மூடிவைத்து கொள்ளவும்)

    ஐந்து நாட்கள் கழிந்து இந்த கலவையை திறந்து பார்த்தால் நன்றாக நுரைத்து இருக்கும். இந்த கலவையை ஒரு பக்கெட் அளவிற்று எடுத்து கொண்டு. 10 லீட்டர் தண்ணீரில் கலந்து ரோஸ் செடி மற்றும் அனைத்து செடிகளுக்கும் தண்ணீராக ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.

    • தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.
    • சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும்.

    பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

    * நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் குணமாகும்.

    * திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

    * தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.

    * ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.


    * புதினா, கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை இவற்றுள் ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சோம்பல் ஏற்படாமல் இருக்கும்.

    * பிழிந்த எலுமிச்சம் பழத்தோலை மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

    * பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது.

    * முகத்தில் உள்ள துவாரங்களை போக்க ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அதை எலுமிச்சை சாறில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும்.

    * காலில் உள்ள நகங்களை உப்பு கலந்த நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து பிறகு பழைய பிரஷ்ஷினால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும் கிருமிகள் அழிந்து விடும்.

    • காய்ந்த எலுமிச்சம் பழத் தோலை அலமாதிகளில் வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது, கொசு தொல்லையும் வராது.
    • முட்டைக்கோஸில் வரும் பச்சை வாடையும் வீசாது. இதை சாப்பிடுவதால் கேஸ்ட்ரிக் பிரச்சனையும் வராது.

    • வாழைக்காய் பஜ்ஜி செய்யும் போது, 1 குழி கரண்டி இட்லி மாவு சேர்த்து கலந்து பஜ்ஜி சுட்டு பாருங்க, சுவையா இருக்கும்.

    • பூரிக்கு மாவு பிசையும் போது 1/2 ஸ்பூன் சர்க்கரை பவுடர் சேர்த்து பிசைந்தால், நீண்ட நேரம் பூரி உப்பலாக, மொறுமொறுப்பாக இருக்கும்.

    • காய்ந்த எலுமிச்சம் பழத் தோலை அலமாதிகளில் வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது, கொசு தொல்லையும் வராது.

    • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் 1 ஸ்பூன் முகத்துக்கு போடும் பவுடரை போட்டு, அடுப்பில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டால் சமையலறையில் வீசும் துர்நாற்றம் நீங்கும்.

    • அரிசி கழுவிய இரண்டாவது தண்ணீரை கீழே கொட்டாதிங்க. நீங்கள் வைக்கும் புளிக்குழம்பில், இந்த அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட்டால் குழம்பு திக்காகவும் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் கிடைக்கும்.

    • உதிர்த்து வைத்திருக்கும் பூண்டுடன் உருளைக்கிழங்கை வைத்தால், சீக்கிரம் முளைத்து வராமல் இருக்கும்.

    • குழம்பு கொதிக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுடுதண்ணீரை மட்டுமே ஊற்றவும். அப்போதுதான் குழம்பின் சுவை மாறாது.


    • முட்டைகோஸ் பொரியல் தாளிக்கும் போது கடுகு, வரமிளகாயோடு சேர்த்து, கொஞ்சம் துருவிய இஞ்சி, 2 கிராம்பு சேர்த்துக்கோங்க. முட்டைக்கோஸில் வரும் பச்சை வாடையும் வீசாது. இதை சாப்பிடுவதால் கேஸ்ட்ரிக் பிரச்சனையும் வராது.

    • தேங்காய் சட்னி அரைக்கும் போது அதில் கோலி குண்டு சைஸ் புளி சேர்த்து அரைத்தால், சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாது.

    • கடாயில் இருந்து அந்த பொரியலை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, அதன் மேலே 1 பிரட்டை வைத்து, மூடி போட்டு 1/2 மணி நேரம் கழித்து, அந்த பிரட் துண்டை எடுத்து விட்டால், பொரியலில் தீய்ந்த வாடை வீசாது.


    • 1 கப் கோதுமை மாவுக்கு, 1 ஸ்பூன் உருக்கிய வெண்ணெயும், தேவையான அளவு தண்ணீரும், விட்டு பிசைந்து சப்பாத்தி சுட்டால் 10 மணி நேரம் ஆனாலும் சப்பாத்தி சாஃப்டா இருக்கும்.

    • பூண்டை குக்கரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, 5 - 6 விசில் விட்டு வேக வைத்து கடைந்து, பூண்டு குழம்பு வைத்தால், ஒரு பூண்டு கூட ஒதுக்கி வைக்க மாட்டாங்க.

    • புளித்த தோசை மாவின் மேலே பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் தூவி, இட்லி பொடியையும் தூவி, நெய்விட்டு மிதமான தீயில் ஓரம் எல்லாம் முறுகலாக வரும்படி சுட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    கிறிஸ்டியானா ரொனால்டோ கீரிஸ் நாட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ் வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். #CristianoRonaldo
    லண்டன்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 2-வது சுற்றுடன் வெளியேறியதும் அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் கோஸ்டா நவரினோ என்ற சொகுசு விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்தார். அங்கு தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களின் உபசரிப்பும், சேவையும் அவருக்கு மிகவும் பிடித்து போனது. இதனால் ஓட்டலை விட்டு கிளம்பும் போது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் வெகுமதியாக (டிப்ஸ்) வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். காசோலையாக வழங்கிய அவர் அதை ஊழியர்களுக்கு பிரித்து கொடுக்கும்படி ஓட்டல் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார். #CristianoRonaldo
    ×