என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tiruchanur"
- மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
- ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு புஷ்பார்ச்சனை.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் இரவு புஷ்ப யாகத்துக்கான அங்குரார்ப்பணம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக வசந்த மண்டபத்தில் சேனாதிபதி உற்சவம், மிருதங்கரஹணம், ஆஸ்தானம் மற்றும் யாக சாலையில் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடந்தது.
இந்தநிலையில் நேற்று மதியம் பூந்தோட்ட அலுவலகத்தில் பல்வேறு வகையான மலர்களை தனித்தனியாக சேகரித்து, கூடைகளில் நிரப்பப்பட்டன. அந்த மலர்களுக்கு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி சிறப்புப்பூஜைகள் செய்தார். பூஜைகள் முடிந்துதும் பூந்தோட்ட அலுவலகத்தில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
அப்போது தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி பேசுகையில், மொத்தம் 8 டன் எடையிலான 17 வகையான மலர்கள் மற்றும் இலைகளால் மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
அதில் 4 டன் மலர்கள் தமிழகத்தில் இருந்தும், தலா 2 டன் மலர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்தும் வந்தன. முன்னதாக காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது, என்றார்.
புஷ்ப யாகத்தில் கோவில் துணை அதிகாரி லோகநாதம், தோட்டக்கலைத்துறை இயக்குனர் சீனிவாசலு, பறக்கும் படை அதிகாரி நந்தகிஷோர், பேஷ்கார் ஸ்ரீஹரி, பார்பதீடர் உமா மகேஸ்வரரெட்டி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சானூர்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்தது. அதையொட்டி நடந்த நித்ய கைங்கர்யங்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் அல்லாதவர்கள் மற்றும் பக்தர்கள் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், தேன், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு பல்வேறு மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 3 டன் எடையிலான பல்வேறு அலங்கார, பாரம்பரிய மலர்களால் புஷ்ப யாக மகோற்சவம் நடத்தப்பட்டது. அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.
8-வது நாளான நேற்றிரவு குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று காலை கோவில் அருகேயுள்ள பஞ்சமி தீர்த்த தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
இதற்காக திருமலை ஏழுமலையான் கோவிலில் இருந்து மஞ்சள், குங்குமம் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரியை கான நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அவர்கள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்ததும் கோவில் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.
கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும், குற்ற சம்பவங்கள் தடுக்கவும் திருப்பதி எஸ்.பி.அன்புராஜன் தலைமையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 15 டி.எஸ்.பி.க்கள், 55 இன்ஸ்பெக்டர்கள் என 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவின் 8-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் எழுந்தருளிய பத்மாவதி தாயார் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் குதிரை வாகனத்தில் சாமி ஊர்வலம் நடக்கிறது.
நண்பகல் 12 மணியில் இருந்து 2.30 மணிவரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 11 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கர், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ஜான்சிராணி, உதவி அதிகாரி சுப்பிரமணியம், சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. செவிரெட்டிபாஸ்கர்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.15 மணியளவில் தேரோட்டமும், இரவு குதிரை வாகன வீதிஉலாவும் நடக்கிறது.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன. பெண்கள், ஆண்கள் பங்கேற்ற நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் பலர் சாமி வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். கேரள செண்டை மேளம், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடந்தன.
அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து 2 மணிவரை கோவிலுக்குள் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் மண்டபத்தில் உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.
பின்னர் இரவு 8 மணியில் இருந்து இரவு 10.30 மணிவரை அனுமந்த வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வீதிஉலாவில் திருப்பதி இணை அதிகாரி போலா.பாஸ்கர், கோவில் அதிகாரி ஜான்சிலட்சுமி, கோவில் அதிகாரிகள், துணை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கொடிமரத்துக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். கொடியை கயிற்றில் இணைத்து, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க, பிரதான அர்ச்சகர்கள் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். பின்னர் கொடிமரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், இணை அதிகாரிகள் கே.எஸ்.சீனிவாசராஜு, போலா.பாஸ்கர், தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி, உதவி அதிகாரி சுப்பிரமணியம், சூப்பிரண்டுகள் மல்லீஸ்வரி, குமார், கோபாலகிருஷ்ணா, உதவி பறக்கும்படை அதிகாரி நந்தீஸ்வரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சிறிய சேஷ வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 10 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.
முன்னதாக திரளான பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவற்றை தட்டுகளில் வைத்து, கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதனை கோவில் சன்னதியில் வைத்து, சாமி தரிசனம் செய்த பெண் பக்தர்களுக்கு அந்த மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவற்றை பிரசாதமாக வழங்கினர்.
குங்கும அர்ச்சனையாலும், கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடங்க இருப்பதாலும் கோவிலில் வழக்கம்போல் நடந்து வந்த குங்கும அர்ச்சனை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம் மற்றும் வாரத்தில், மாதத்தில் நடக்கும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம்போல் தொடங்கி நடக்கும் எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்