என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiruchendur beach"

    • நாழிக்கிணறு பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக் கூடிய மர்ம பொருள் ஒன்று கிடந்தது.
    • அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நாழிக்கிணறு பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக் கூடிய மர்ம பொருள் ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மர்மபொருளை கைப்பற்றினர். அது நாட்டு வெடிகுண்டா? அல்லது திருவிழாவின் போது போடப்பட்ட வெடி பொருளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தங்க நகை தொலைந்ததையடுத்து அப்பகுதி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
    • சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களை வரவழைத்து கடற்கரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சாமி தரிசனம் செய்த வந்த பெண் ஒருவர் கடலில் புனித நீராடும்போது தன்னுடைய 5 சவரன் தங்க நகையை கரையில் தவறவிட்டார்.

    தங்க நகை தொலைந்ததையடுத்து இதுகுறித்து அப்பகுதி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களை வரவழைத்து கடற்கரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கடற்கரையில் தங்க நகையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதலின் முடிவாக தங்க நகை ஒரு பணியாளரின் கைகளில் சிக்கியது. நகையை கண்ட அந்த பெண் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து தங்க நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகையை மீட்டுக்கொடுத்த குழுவினருக்கு அங்கிருந்தோர் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    • கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
    • கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

    கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு 9அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    எனவே கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், திருச்செந்தூரில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக 2வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.

    திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை ஒரு டால்பின் மீன் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடற்கரையில் அவ்வப்போது சில மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது வழக்கம். இதை அந்த பகுதி மீனவர்கள் எடுத்து செல்வார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை ஒரு டால்பின் மீன் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. அப்பகுதியில் குளித்து கொண்டிருந்தவர்கள் இதை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அந்த டால்பின் ஓங்கல் எனப்படும் வகையை சேர்ந்தது. டால்பின் முழுவதுமாக அழுகி காணப்பட்டதால் அப்பகுதியில் நின்றவர்கள் அங்கேயே குழி தோண்டி புதைத்தனர். டால்பின் இறந்தது எப்படி? கப்பல் மோதியதில் அது இறந்ததா? அல்லது நச்சு ஏதேனும் தின்றதில் இறந்ததா? என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    ×