என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Titupur News"

    வணிக நிறுவனங்களுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சிப் பகுதியில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக குடிநீா் இணைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகராட்சியின் அனுமதி பெறாமல் குடிநீா் இணைப்புகள் குறித்து கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக குடிநீா் இணைப்பு துண்டிப்பு செய்வதோடு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து காவல் துறை மூலம் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×