என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tokyo Tour"
- அமெரிக்காவின் சிட்டாடல் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களை டூர் அழைத்துச் சென்றது.
- 1,200 ஊழியர்களை அவர்களது குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்துச் சென்றார்.
டோக்கியோ:
ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் கென்னத் சி.கிரிபின். சிட்டாடல் என்ற நிதி நிறுவனம், கணினி தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட பல தொழில்களை செய்யும் இவர், தனது நிறுவன ஊழியர்களை நிறுவனத்தின் 30-வது ஆண்டு விழாவையொட்டி மகிழ்விக்க விரும்பினார்.
அதற்காக சுமார் 1,200 ஊழியர்களை, அவர்களது குடும்பத்தினருடன் 3 நாள் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்து சென்றுள்ளார்.
டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்வது, தங்குமிடம், உணவு என அனைத்து வசதிகளுக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார்.
டிஸ்னிலேண்ட் கட்டணம் மட்டும் குறைந்தபட்சம் 88 ஆயிரம் டாலர் இருக்கும் என்று உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.72 லட்சமாகும்.
மொத்த செலவுத்தொகையை அவர் வெளியிடவில்லை. இதுபற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவின் குர்கான் நகரில் இருந்து இந்நிறுவன பணியாளர்கள் சுற்றுலா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.