search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tollywood"

    • பல்வேறு மாநில திரையரங்குகளிலும் இப்படம் நன்றாக ஓடி ரூ. 200 கோடிக்கும் அதிக வசூலை குவித்துள்ளது.
    • இப்படம் ஏப்ரல் 6 ஆம் தேதி தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.

    சமீப காலமாக எங்கு திரும்பினாலும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டிரெண்ட் ஆக இருந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் "கண்மனி அன்போடு காதலன்" ஆடியோ ரீல்ஸ்-ஐ ஆக்கிரமித்துள்ளது. இப்படத்தின் எதிர்வினையாக கொடைக்கானலுக்கு இளைஞர்கள் படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    கொடைக்கானல் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ''மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற படம் மலையாள மொழியில் வெளியானது. மக்களிடையே கொண்டாடப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் கேரளாவைவிட தமிழக மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.

    இப்படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்கினார். பல்வேறு மாநில திரையரங்குகளிலும் இப்படம் நன்றாக ஓடி ரூ. 200 கோடிக்கும் அதிக வசூலை குவித்துள்ளது. பல திரைப்பிரபலங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து பாராட்டினர்.

    இந்திய திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இந்நிலையில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இப்பொழுது தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியாகவுள்ளது.

    இப்படத்தின் தெலுங்கு டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளனர். இப்படம் ஏப்ரல் 6 ஆம் தேதி தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது. எப்படி தமிழ் மக்களாலும், மலையாள மக்களாலும் கொண்டாடப்பட்டதோ, தெலுங்கு மொழியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது.
    • தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், உலகளவு வசூலில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

    மலையாள சினிமா திரையுலகில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது. படம் வெளிவந்து ஒரு மாதம் ஆன நிலையில் இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

    இந்தியா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    2005-ல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது.

    இந்த படம் மலையாளம், தமிழில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், வரும் ஏப்ரல் 6ம் தேதி தெலுங்கு மொழியில் இப்படம் வெளியாக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அல்லு அர்ஜூன் 2 முறை நந்தி விருதுகளை பெற்று உள்ளார்.
    • அல்லு அர்ஜுன் இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன். ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ்குர்ராம், புஷ்பா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

    இவர் 2 முறை நந்தி விருதுகளை பெற்று உள்ளார். திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்து உள்ளார். 2007 முதல் நடிக்க தொடங்கி 17 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர்," சினிமாவில் சிறந்த நல்ல படங்கள் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. மேலும் ஒரு சில மோசமான படத்தால், பார்வையாளர்களின், நேரத்தையும், ஆற்றலையும், பணத்தையும் வீணாக்க விரும்பவில்லை" என்றார்.

    • பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசுபவர் ராதிகா
    • நடிகர்கள் திடீரென மூட் சரியில்லை என சென்று விடுவார்கள் என்றார் ராதிகா

    மராத்தி, தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் 38 வயதான ராதிகா ஆப்தே (Radhika Apte).

    ராதிகா, வேலூரில் பிறந்தவர். ராதிகாவின் பெற்றோர் வேலூர், கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் மருத்துவர்களாக பணியாற்றியவர்கள்.

    திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களுக்கு எதிராக தயங்காமல் குரல் கொடுத்து வருபவர், ராதிகா ஆப்தே.

    திரைத்துறையில் தனது போராட்டங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அதில் ராதிகா தெரிவித்ததாவது:

    பல மொழி திரைப்படங்களில் நான் நடித்துள்ளேன். ஆனால், நான் மிகவும் போராட வேண்டி இருந்தது "டோலிவுட்" (Tollywood) எனப்படும் தெலுங்கு திரைப்பட உலகம்.

    அதிக ஆணாதிக்கம் நிறைந்த திரைத்துறை தெலுங்கு படத்துறைதான்.

    பெண்களை அவர்கள் நடத்தும் விதம் சிறிதும் சகித்து கொள்ள முடியாது. பெண்களுக்கு அதில் வழங்கப்படும் பாத்திர படைப்புகளும் படத்தில் பங்கு பெறும் நடிகர்கள் நடந்து கொள்ளும் விதமும் எனக்கு பிடிக்காது.

    படப்பிடிப்பு தளங்களில் மரியாதையாக நடத்த மாட்டார்கள். நடிகர்கள் திடீரென "மூட்" சரியில்லை என கூறி சென்று விடுவார்கள். ஆனால், படக்குழுவினர் நடிகர்களை எதுவும் கேட்க மாட்டார்கள்.

    நான் தொடர்ந்து அங்கு பிரச்சனைகளை அனுபவித்தேன். இறுதியில், எனக்கு டோலிவுட் ஒத்து வராது என உணர்ந்து, தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    2016ல் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த "கபாலி", திரைப்படத்தில் "குமுதவல்லி" எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து விமர்சகர்களை ஈர்த்தவர் ராதிகா ஆப்தே என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தி ரசிகர்கள் தென்னிந்திய படங்களையும் விரும்ப தொடங்கி உள்ளனர்
    • நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்க இயக்குனர்கள் முயல்கின்றனர்

    தென்னிந்திய மாநிலங்களில் இருந்து நாடு முழுவதும் வெளியிடப்படும் திரைப்படங்கள் பெரும் வசூலை அள்ளி குவிக்கின்றன. புஷ்பா, கேஜிஎஃப்-2, காந்தாரா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் இதற்கு உதாரணங்கள்.

    தற்போதைய இயக்குனர்களும், முன்னணி தென்னிந்திய கதாநாயகர்களும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தங்கள் படங்கள் உருவாக வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்னணி நடிகரை தங்கள் திரைப்படங்களில் ஒரு வேடத்தில் இடம்பெற செய்து நாடு முழுவதும் உள்ள பல மாநில ரசிகர்களையும் ஈர்க்க தொடங்கி உள்ளனர்.

    இவ்வருடம் வெளியாகப் போகும் 7 தென்னிந்திய திரைப்படங்கள், பாலிவுட்டில் பெரும் வசூலை குவிக்கப் போவதாக திரைப்பட வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.

    அந்த திரைப்படங்கள் பின்வருமாறு:

    1. கல்கி 2898 ஏ.டி. - பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம். பிரபாஸ் மற்றும் தீபிகா ஆகியோருடன் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


    2. புஷ்பா 2, தி ரூல் - அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், முதல் பாகத்தை விட சிறப்பாக உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    3. காந்தாரா, சேப்டர் 1 - காந்தாரா முதல் பாகத்தை விட பெரும் வெற்றி பெறும் முனைப்பில், ரிஷப் ஷெட்டி இப்படத்திற்காக உழைத்து வருகிறார்.


    4. தேவரா பாகம் 1 - ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு ஜுனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு தரும் இவ்வருட பரிசு. இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார்.


    5. கேம் சேஞ்சர் - முன்னணி தெலுங்கு ஹீரோவான ராம்சரணும், தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் ஷங்கரும் இணைந்துள்ள படம். அரசியல் நெடி அதிகம் உள்ள இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.


    6. இந்தியன் 2 - 1996ல் நாடு முழுவதும் சக்கைபோடு போட்ட கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். சேனாபதியாக மீண்டும் மிரட்ட வருகிறார் கமல்.


    7. கங்குவா - நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் ஹீரோ சூர்யா நாயகனாக நடிக்கும் படம். இதுவரை இல்லாத சாதனையாக 38 மொழிகளில் உருவாகிறது.


    இப்படங்கள் ரசிகர்களிடம் எவ்வளவு தூரம் வரவேற்பை பெறும் என்பது வரும் மாதங்களில் தெரிந்து விடும்.

    தமிழில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், முதல்முறையாக புதிய படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆக இருக்கிறார். #Varalakshmi
    கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது பயணத்தை மாற்றி வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.

    இவரது நடிப்பில் தற்போது ‘வெல்வெட் நகரம், கன்னிராசி, நீயா 2, காட்டேரி, ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், முதல் முறையாக தெலுங்கு படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.



    சந்தீப் கிஷன், ஹன்சிகா நடிக்க இருக்கும் புதிய படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். நாகேஷ்வர் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். 
    தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ஸ்ரீரெட்டியை தொடர்ந்து, தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் கூறியிருக்கிறார் பூனம் கவுர். #PoonamKaur #SriReddy
    தமிழில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக நடித்திருந்த பூனம் கவுர், ‘பயணம்’, ‘என் வழி தனி வழி’, 6 மெழுகுவர்த்திகள், வெடி  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சிரீயலில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டியின் புகார் குறித்தும் பேசினார். அப்போது சினிமாவில் இது போன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றையும் கூறியுள்ளார்.

    தயாரிப்பாளரின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய பூனம் கவுர், முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படங்களை பார்த்து புகழ்ந்தார் என்றும், தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க கூறியதாகவும் தெரிவித்தார்.



    மேலும் பேசிய பூனம் கவுர், அந்த தயாரிப்பாளர் தனக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறினார். இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது. என் அம்மாவுடன் அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை. இதனால் அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாக கூட முகம் கொடுத்து பேசவில்லை. இதுவரை அந்த தயாரிப்பாளர் கூறியபடி எனக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. சினிமாவில் நடிகைகள் பல்வேறு அவமானங்களை சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
    ×