search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tom Curran"

    • 17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
    • 27 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்வதற்கு சமர் ஜோசப் முக்கிய பங்காக இருந்தவர்.

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது. 17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) போட்டி அட்டவணையை அறிவிக்க முடியாமல் இருக்கிறது.

    இந்த ஐபிஎல் சீசனில் கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தற்போதைய நாயகனாக வலம் வரும் சமர் ஜோசப்பை ஆர்சிபி அணி வாங்குவதற்கு திட்டம் தீட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024-ம் ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியால் ஏலம் எடுக்கப்பட்ட டாம் கரண் காயம் காரணமாக விளையாடமுடியாத சூழல் இருப்பதால் அவருக்கு பதிலாக ஜோசப்பை எடுக்க ஆர்சிபி திட்டம் தீட்டியுள்ளது.

    27 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்வதற்கு சமர் ஜோசப் முக்கிய பங்காக இருந்தவர். அவர் அந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • பிக்பாஷ் தொடரில் சிட்னி சிக்சர் அணிக்காக டாம் கரண் விளையாடி வருகிறார்.
    • பிக்பாஷ் தொடர் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியாவில் நடப்பு ஆண்டுக்கான பிக்பாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிட்னி சிக்சர் அணியில் இடம் பிடித்த டாம் கரண் அடுத்த வரும் 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    லான்செஸ்டனில் டிசம்பர் 11 அன்று ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிட்னி சிக்ஸர்ஸ் மோதியது இந்த போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட டாம் கரண் நடுவருடன் மோதலில் ஈடுபட்டார்.

    போட்டிக்கு முன் பவுலிங் ரன் அப்பிற்காக டாம் கரண் அளவு மேற்கொண்டார். அப்போது ரன் அப் செய்ய முயன்றார். இதனை பார்த்த நடுவர் ஆடுகளத்தின் அந்தப் பகுதியைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட போதிலும், மற்றொரு பயிற்சி ரன்-அப்பிற்காக கரண் எதிர் முனைக்குச் சென்றார்.

    ஆடுகளத்தை நோக்கி ரன் அப் செய்த தயாராக இருந்த டாம் கரணை தடுப்பதற்காக ஸ்டம்புகளுக்கு அருகில் நடுவர் நின்றார். இதை பார்த்த கரண் நடுவரை விலகிச் செல்லும்படி சைகை செய்தார். அதற்கு நடுவர் இதில் பயிற்சி செய்ய கூடாது. அதற்கு பக்கத்தில் செய்யுமாறு கூறினார். இதனை ஏற்றுக்கொள்ளாத கரன், அவரை நோக்கி ரன் அப் செய்து அவர் மீது மோதுவது போல ஓடி வந்து தள்ளி சென்றார்.

    இதனால் ஆஸ்திரேலியா நடத்தை விதிகளின் கீழ் "நிலை 3" குற்றத்திற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டார். இந்த நிலையில் நேற்று 4 போட்டிகளில் விளையாட அவருக்கு தடை அறிவிப்பு வெளியானது.

    இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 20 ஓவர் போட்டியில் அற்புதமானவர் எனவும் நம்ப முடியாத வீரர் எனவும் இங்கிலாந்து வீரர் கூறியுள்ளார். #ViratKohli #TomCurran
    இங்கிலாந்து வேகப்பந்து வீரர் டாம் குர்ரான் கூறியதாவது:-

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார். 20 ஓவர் போட்டியில் அற்புதமானவர். நம்ப முடியாத வீரர். 20 ஓவர் உலககோப்பையில் அவருக்கு பந்துவீசுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    டாம் குர்ரான்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    20 ஓவர் உலககோப்பை போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. #ViratKohli #TomCurran
    ×