search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato fruits"

    • சந்தைகளில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • 1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் விலை சரிந்து வந்தது. சந்தைகளில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    சாகுபடி செலவு செய்த பணத்தை எடுக்க முடியாமலும், பறிப்புக்கூலிக்கும் வண்டி வாடகைக்கு ம்கூட கட்டுப்படியாகாத விலை கிடைத்து வருவதால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் அவற்றை அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர். இதனால் அவை செடியிலேயே பழுத்து வீணாகி வருகிறது. இதுகுறித்து தக்காளி விவசாயிகள் கூறியதாவது: -1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 300 கிலோ மகசூல் கிடைக்கும். 1 கிலோ தக்காளி ரூ.40க்கு விற்றால் தான் விவசாயிக்கு விலை கட்டுபடியாகும். ஆனால் தற்போது தற்போது 1 கிலோ தக்காளி விவசாயிகளிடம் இருந்து ரூ.7க்கு வாங்கப்படுகிறது. டிப்பர் (14 கிலோ) ரூ.100க்கு கொள்முதலாகிறது. இந்த சூழ்நிலையில் தக்காளி வரத்தும் அதிகமாகியுள்ளது. இதனால் தக்காளி விற்பனை விலை மிகவும் சரிந்து பறிப்பு கூலி கூட கிடைக்காத நிலை உள்ளது.

    1 டிப்பர் தக்காளிக்கு அறுவடைக் கூலி ரூ. 20, வண்டி வாடகை மற்றும் சுங்கம் ரூ. 30 என ரூ .50 க்கு மேல் செலவாகிறது .இந்த நிலையில்1 டிப்பர் ரூ.90, ரூ.100க்கு தக்காளி விற்றால் எப்படி கட்டுபடியாகும். எனவே அரசு தக்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தக்காளி போன்ற காய்கறிகள் அதிக விளைச்சலின் போது உரிய பாதுகாப்பு இல்லாததால் வீணாகி வருகிறது. எனவே ஆங்காங்கே குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்லடம் பகுதியில் தக்காளி ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு தக்காளி விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×