என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tourist van"
- விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அப்துல்கலாம் சுற்றுலா கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சாலை வரி உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
விளாத்திகுளம்:
தமிழக அரசு அறிவித்த சுற்றுலா வாகனங்களின் சாலை வரியை அதிகப்படியாக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அப்துல் கலாம் சுற்றுலா கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சங்கத்தின் செயலாளர் செல்வமுருகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் முருகன், பொருளாளர் விக்னேஷ், துணைப் பொருளாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிகண்டன் வரவேற்று பேசினார். லத்திகா கண்ணன் சிறப்புரையாற்றினார். செய்யது யூசப் நன்றி கூறினார். இதில் முனியசாமி, ரஹ்மான், செல்வம், காளி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், குளத்தூர், சூரங்குடி, பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
- 19 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
- டிரைவர்கள் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அரவேணு
நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை பூந்தமல்லியில் இருந்து குடும்பத்துடன் 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, இன்று காலை ஊட்டியில் இருந்து கோத்தகிரி மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளை யத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் சுற்றுலா வேன் சென்றுக் கொண்டிருக்கும் போது, டிரைவர் பிரேக் போட முயன்றுள்ளார். ஆனால் பிரேக் பிடிக்காமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்தி ற்குள்ளானது.சிகிச்சை
உடனடியாக அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் ரோந்துப் போலீசார் வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புல ன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுவதால், டிரைவர்கள் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நாகனேந்தல் மெயின் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே காட்டு மன்னார் கோவிலில் இருந்து ராமநாதபுரத்திற்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.
எதிர்பாராத விதமாக வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் மற்றும் லாரியின் முன்பகுதி சேதமடைந்தன.
வேனில் இருந்த புஷ்பராஜ் (36), அவரது மகன் ரிப்பான் (12), அல்போன்ஸ் மனைவி புனிதா (32), வேன் டிரைவர் ஜான் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பாலைக்குடி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 5 சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி, வேன் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்