என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tovino Thomas"
- டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
- இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.
டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது ஏ.ஆர்.எம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி. இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படத்தை இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் வினய் ராய், மந்திர பேடி, ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடண்ட் க்ரூப் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. திரிஷா நடிப்பில் நேற்று விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது. அப்படமும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மலையாள நடிகரான டொவினோ தாமஸ் ஏ.ஆர்.எம் திரைப்படத்தில் நடித்தார்.
- இப்படத்தை ஜித்தின் லால் இயக்கியுள்ளார். மேஜிக் ஃப்ரேம்ஸ் மற்றும் UGM மூவீஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
மலையாள நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் ஏ.ஆர்.எம் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை ஜித்தின் லால் இயக்கியுள்ளார். மேஜிக் ஃப்ரேம்ஸ் மற்றும் UGM மூவீஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ் , மலையாளம் உட்பட ஆறு மொழிகளில் இப்படம் வெளியானது. இப்படம் மூன்று தலைமுறை கதாப்பாத்திரங்களை கொண்டது. டொவினோ தாமஸ் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிருத்தி ஷெட்டி, ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் சுர்பி லக்ஷ்மி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். டொவினோ இப்படத்தில் நடித்த மணியன் கதாப்பாத்திரம் பலரால் பாராட்டி பேசப்பட்டது.
திரைப்படத்தின் ஓடிடி அப்டே தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டொவினோ தாமஸ் தற்பொழுது ஏ.ஆர்.எம் என்ற படத்தில் நடித்துள்ளார்
- தமிழ் , மலையாளம் உட்பட ஆறு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
மலையாள நடிகரான டொவினோ தாமஸ் தற்பொழுது ஏ.ஆர்.எம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஓனம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இப்படத்தை ஜித்தின் லால் இயக்கியுள்ளார். மேஜிக் ஃப்ரேம்ஸ் மற்றும் UGM மூவீஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ் , மலையாளம் உட்பட ஆறு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் மூன்று தலைமுறை கதாப்பாத்திரங்களை கொண்டது. டொவினோ மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிருத்தி ஷெட்டி, ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் சுர்பி லக்ஷ்மி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கன்னடத்தில் இப்படத்தை கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹொம்பலே பிலிம்ஸ் விநியோகிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். திரைப்படம் 3 டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவுள்ளது.
திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- நீண்டநாள் ஆசை ஒன்று நிறைவேறி இருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் சேரன். தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் படியாக பல படங்களை இயக்கி நடித்துள்ள சேரன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார். அதன்படி இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாள திரையுலகில் நடிகராக களம் இறங்குகிறார்.
இது தொடர்பான பதிவில், "நண்பர்களே... முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது.. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன்.. என்றும்போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு .
- அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார்.
கோகுலம் கருத்தரங்க மையத்தில் நேற்று மாலை நடந்த அம்மா அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் மலையாள நடிகர் சங்கம் தேர்தல் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு . இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக திரைப்பிரபலங்கள் பல நாடுகளில் இருந்து வந்து கலந்துக் கொண்டனர்.
மோகன்லால், மஞ்சு வாரியர், விஜய் பாபு, லால், இந்திரஜித், டொவினோ தாமஸ், கிரேஸ் ஆண்டனி, மதுபால் போன்றவர்கள் கலந்துக் கொண்டனர்,
இம்முறை மோகன்லால் எதிர்ப்பின்றி அம்மா அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த எட்டு முறை அம்மா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த நடிகர் பாபு தானாக முன்வந்து தனது பதவியை நிறைவு செய்ததுடன் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததை அடுத்து அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகை குக்கு பரமேஸ்வரன் , உண்ணி சிவபால் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலில் நடிகர் சித்திக் , நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் . இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குக்கு பரமேஸ்வரன் மற்றும் உண்ணி சிவபால் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
அத்துடன் கடந்த காலங்களில் நான்கு முறை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்தவர் நடிகை குக்கு பரமேஸ்வரன். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை மஞ்சு பிள்ளை தோல்வி அடைந்தார் . அனூப் சந்திரன், ஜெயன் சேர்த்தலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்தாலும், நடிகர் மோகன்லால் தேர்தலில் போட்டியிட தயாரானவுடன் அவர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் உண்ணி முகுந்தன் இந்த அமைப்பின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகர் இடைவேளை பாபு கடந்த 2018 -ம் ஆண்டு முதல் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி வகித்து வருகிறார். இம்முறை நடந்த தேர்தலில் நடிகர்கள் ஜெகதீஷ் மற்றும் ஜெயன் சேர்த்தலா ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் தொடர்ந்து மூன்றாம் முறை வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
- திரிஷா தனது காட்சிகள் அனைத்திலும் விறுவிறுப்பாக நடித்துள்ளார்.
மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் திரிஷா.
சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் திரிஷா தற்போது மலையாள நடிகர் டோவினோ தாமசுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அகில்பால் - அனஸ்கான் என 2 இயக்குனர்கள் இணைந்து இயக்கிய புதிய படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமசுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கடைசியாக '2018' படத்தில் நடித்திருந்தார். கேரளாவில் வெள்ளம் வந்தபோது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்துப் பேசிய படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் கேரளா திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது 'ஐடென்டிட்டி' படத்தில் டோவினோ தாமஸ் - திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது இதில் திரிஷா தனது காட்சிகள் அனைத்திலும் விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இப்படத் தயாரிப்புகுழு இது தொடர்பாக திரிஷாவை பாராட்டி உள்ளது. இப்படத்தில் விரைவாக காட்சிகளில் நடித்து முடித்ததற்கு திரிஷாவுக்கு படக்குழு நன்றி தெரிவித்தது. மேலும் படத்தின் இயக்குனர் அகில் பால், "உங்களுடன் பணிபுரிவது இனிமை வாய்ந்த ஒரு அனுபவமாக இருந்தது என குறிப்பிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக உள்ளார்.
- சுனில் குமாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பியது.
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் டோவினோ தாமஸ், கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக உள்ளார்.
இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுனில்குமார் சந்தித்துள்ளார். மேலும் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட சுனில்குமார், அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
இது தொடர்பாக திருச்சூர் மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சுனில் குமாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பியது.
இதற்கு பதில் அளித்த சுனில்குமார், நடிகர் டொவினோ தாமஸ் தேர்தல் ஆணையத்தின் தூதர் என்பது தனக்குத் தெரியாது என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் இது போன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தது.
- 2012ல் அறிமுகமான டொவினோ பல மலையாள திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்
- "கைதி", "மாஸ்டர்" உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ்
தங்களின் விருப்பமான திரைப் பிரபலங்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வழியாக செய்திகள் அனுப்புவதும், ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுடன் அதே சமூக வலைதளங்கள் வழியே உரையாடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.
சில நேரங்களில், ஒரு சில ரசிகர்கள் வினோதமான கோரிக்கைகளை தங்களுக்கு பிடித்தமான திரைப்பிரபலங்களுக்கு வைப்பதும், அதற்கு அந்த பிரபலங்கள் பதிலளிப்பதும், இணையத்தில் சுவாரஸ்யமாக செய்திகளாக பரவி வருகின்றன.
மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், டொவினோ தாமஸ் (Tovino Thomas). 2012ல் திரையுலகில் அறிமுகமான டொவினோ பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
டொவினோ தாமசிற்கு சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்து ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் அந்த ரசிகர், "எனது வீடியோவை டொவினோ தாமஸ் பார்த்து விட்டு, அதற்கு கமென்ட் (comment) பதிவிட்ட பிறகுதான் நான் எனது தேர்விற்கு படிக்க தொடங்குவேன்" என பதிவிட்டு, டொவினோ தாமசின் ஐடி-யையும் டேக் (tag) செய்திருந்தார்.
இந்த பதிவை கண்ட டொவினோ தாமஸ், "போய் படி மகனே" என பதிலளித்தார்.
இதே போல் ஒரு ரசிகை, நடிகர் அர்ஜுன் தாஸ் (Arjun Das) பெயரை குறிப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டார்.
2012ல் "பெருமான்" எனும் தமிழ் திரில்லர் திரைப்படத்தில் அறிமுகமாகி "கைதி", "மாஸ்டர்" உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர், நடிகர் அர்ஜுன் தாஸ்.
அவருக்கு அந்த ரசிகை, "அர்ஜுன் தாஸ் எனது வீடியோவை பார்த்து, அது குறித்து கமென்ட் அளித்த பிறகுதான் நான் நீட் முதுநிலை (NEET PG) தேர்விற்கு தயாராக தொடங்குவேன்" என பதிவிட்டு அர்ஜுன் தாஸ் ஐடி-யையும் டேக் செய்திருந்தார்.
இந்த பதிவை கண்ட அர்ஜுன் தாஸ், "டாக்டர், நீங்கள் முதுநிலை தேர்வை வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்ததும் எனக்கு ட்ரீட் (treat) வைக்க வேண்டும். (விளையாட்டிற்கு கூறினேன்). நீங்கள் தேர்வில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தேர்வில் வெல்லுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்" என பதிலளித்தார்.
இரண்டு வெவ்வேறு ரசிகர்களின் வித்தியாசமான கோரிக்கைகளும், திரைப்பிரபலங்களின் பதில்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதித்து வருகின்றனர்.
- மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ்.
- இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் மாயா நதி, மின்னல் முரளி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான '2018' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் டோவினோ தாமஸ் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் அதிக வசூல் ஈட்டியப் படங்களின் வரிசையில் இடம்பெற்றது. மேலும் மக்களிடம் 'இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி' என்கிற பாராட்டுக்களையும் பெற்றது.
நடிகர் டோவினோ தாமஸ் சமீபத்தில் செப்டிமியஸ், சிறந்த ஆசிய திரைப்பட நடிகருக்கானப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள டோவினோ தாமஸ், "ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் கேரளாவின் சிறப்பு உள்ளது. 2018-ல் நம்மை தாக்கி பெருவெள்ளத்தால் கேரளா விழத் தொடங்கியது. பிறகு, நாம் எத்தகைய மன உறுதி மிக்கவர்கள் என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டினோம். 2018 படத்திற்காக சிறந்த ஆசிய நடிகர் என்ற விருது வழங்கிய செப்டிமியஸ் விருது குழுவுக்கு நன்றி. இந்த விருது கேரளாவுக்கானது" என்று பதிவிட்டுள்ளார்.
Our greatest glory is not in never falling, but in rising every time we fall. In 2018, Kerala began to fall when unexpected floods knocked on our doors. But then the world saw what Keralites were made of…
— Tovino Thomas (@ttovino) September 26, 2023
Thank you SEPTIMIUS AWARDS for selecting me as the Best Asian Actor. It… pic.twitter.com/OZ1SAraDzp
- நடிகை திரிஷா தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து வருகிறார்.
- இவர் தற்போது 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் திரிஷா அடுத்ததாக மலையாள நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார். அதாவது, அகில் பால்-அனஸ்காஸ் ஆகிய இரண்டு இயக்குனர்களும் இணைந்து இயக்கும் திரைப்படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
இதற்கு ரசிகர்கள் திரிஷா, டோவினோ தாமஸ்சைவிட 6 வயது பெரியவர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Revealing the Leading Lady of #IDENTITY:
— Tovino Thomas (@ttovino) July 8, 2023
TRISHA KRISHNAN @trishtrashers
Excited to join hands for an amazing movie together!!
Gear up for an unforgettable ride, guys..!
IDENTITY
An @AkhilPaul_ - #AnasKhan Movie !
Super excited and looking forward to an awesome shoot.… pic.twitter.com/7YrN7nql8B
- ’வணங்கான்’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
- இவர் தற்போது மலையாள திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி 'உப்பென்னா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 'ஷியாம் சிங்கா ராய்', 'தி வாரியர்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
கீர்த்தி ஷெட்டி - டோவினோ தாமஸ்
இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இவர் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
அஜயந்தே ரண்டம் மோஷனம் போஸ்டர்
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. மேலும், 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' திரைப்படத்தின் மூலம் கீர்த்தி ஷெட்டி மலையாள திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#ajayanterandammoshanam 🥳
— KrithiShetty (@IamKrithiShetty) October 11, 2022
My #malayalam #debut EXTREMELY ELATED and grateful 🤍 need all your blessings 🙏🏼🫶🏼
Can't wait to work with @ttovino #jithinlal #jomontjohn @UGMMovies pic.twitter.com/zJfx7ZQYgb
- நடிகர் காலித், பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு அறிமுகமானார்.
- இவர் படப்பிடிப்பின் போது திடீரென மரணமடைந்தார்.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் நடிகர் காலித். மலையாள பட நகைச்சுவை நடிகரான இவர் 1973-ம் ஆண்டு பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தாப்பானா, வெள்ளம் உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
ஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் படத்திற்காக கொச்சியில் நடந்த படப்பிடிப்பில் காலித் பங்கேற்றார். அப்போது படப்பிடிப்பின் இடையில் கழிவறை சென்ற அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
நடிகர் காலித்
மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் காலித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு காலித் ரகுமான், ஷைஜூ காலித் மற்றும் ஜிம்ஷி காலித் என 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் காலித் ரகுமான் மலையாள பட உலகில் பிரபல இயக்குனராக உள்ளார். மற்ற 2 பேரும் ஒளிப்பதிவாளர்களாக உள்ளனர்.
மரணமடைந்த நடிகர் காலித்துக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்