search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic regulations"

    • போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
    • தனித்தனியாக சீருடைகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் திருநங்கைகள் பல்வேறு பணிகளில் பணியாமத்தப்படுவார்கள் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் மாநகர பகுதியில் போக்குவரத்து சீரமைக்க திருநங்கைகள் படை உருவாக்க ப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

    இதற்காக தனி தனியாக சீருடைகளும் வடிவமைக்க பட்டு வருகின்றன. திருநங்கை படையில் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    திருநங்கை படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

    அதற்கு பிறகு ஐதராபாத் மாநகர பகுதியில் திருநங்கை படையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் வேப்பேரி பகுதியில் விதிகளை கடைபிடித்த பயணிகளை பாராட்டினர்.
    • போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் போலீசார் செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னை

    சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    அதே நேரத்தில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னை வேப்பேரி பகுதியில் இன்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாமல் முறைப்படி வாகனங்களை ஓட்டியவர்களை போக்குவரத்து போலீசார் பாராட்டினார்கள்.

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடியும் கார்களில் சீட் பெல்ட் அணிந்த படியும் பயணம் செய்த 100 பேருக்கு ரோஜா பூ வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையிலான போலீசார் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பயணம் செய்தவர்களை பாராட்டி புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

    காரைக்குடி அழகப்பா மேலாண்மை நிறுவனம் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி அழகப்பா மேலாண்மை நிறுவனம் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், ஸ்ரீராம்நகர் ரெயில் கேட் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அழகப்பா மேலாண்மை நிறுவன இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினம் கருத்தரங்கை தொடங்கிவைத்து, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.

    பின்னர் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆயிஷாமில்லத், மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் உமாதேவி ஆகியோர் தலைமையில் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர். 
    ×