search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TrekTamilnadu"

    • www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' செல்லும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கியது.
    • TrekTamilnadu மலையேற்ற முகாம் திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

    தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' எனப்படும் மலையேற்ற நடைபயண திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.

    நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என்பதால், இந்த மலையேற்ற நடைபயணத்துக்கு வருகிற ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், Trek TamilNadu இணையதளம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "TrekTamilNadu என்பது சாகசத்தை விட மேலானது. 3 மாதங்களில், 4,792 மலையேற்றப் பயணிகள் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசுக்கு ரூ. 63.43 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதில், ரூ. 49.51 லட்சம் பயணிகளை அழைத்து சென்ற பழங்குடி இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. சுற்றுலா பழங்குடி மக்களுக்கு பயனுள்ளதாக மாறியுள்ளது.

    காட்டுத்தீ சீசன் முடிந்தவுடன் ஏப்ரல் மாதத்தில் பாதைகள் மீண்டும் திறக்கப்படும். மலையேறுபவர்களை இயற்கை எழிலுடன் வரவேற்க தமிழ்நாடு தயாராக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். 

    ×