என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trent Rockets"

    • இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது.
    • ரஷித் கான் வீசிய 5 பந்துகளை கொண்ட ஒரே ஓவரில் பொல்லார்ட் 5 சிக்சர்களைப் பறக்க விட்டார்.

    இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் சௌதர்ன் பிரேவ்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ட்ரெண்ட் ராக்கெட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் பாட்டன் 30 ரன்கள் எடுத்தார். சௌதர்ன் பிரேவ்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டான் 3, ஜோப்ரா ஆர்ச்சர் 2, பிரிக்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து விளையாடிய சௌதர்ன் பிரேவ்ஸ் அணிக்கு கடைசி 20 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் அந்த ஓவரை உலகின் நம்பர் ஒன் டி20 சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கான் வீசினார்.

    அவர் வீசிய 5 பந்துகளை கொண்ட ஒரே ஓவரில் பொல்லார்ட் அடுத்தடுத்து 5 சிக்சர்களைப் பறக்க விட்டார். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலரையே பிரித்து மேய்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் பொல்லார்ட். பொல்லார்ட் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 45 (23) ரன்கள் விளாசி அவுட்டானார்.


    இறுதியில் 99-வது பந்திலேயே சௌதர்ன் பிரேவ்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 

    ×