என் மலர்
முகப்பு » trichy private hospital
நீங்கள் தேடியது "trichy private hospital"
காதல் தோல்வியால் மனமுடைந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைக்கோட்டை:
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா வயலூர் குடித்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ராதிகா (வயது 20). இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வி.என்.நகர் 3-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்றிரவு வீட்டிற்கு சென்ற ராதிகா, திடீரென அங்குள்ள ஸ்டோர் அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ராதிகா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கும், குளித்தலை வயலூர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, கடந்த ஒரு வாரமாக ராகுல், ராதிகாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். காதல் தோல்வியால் மனமுடைந்த ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
X